திருக்கேதீஸ்வரம் வளைவு விவகாரம் -வவுனியாவில் கண்டன ஊர்வலம்!!

மன்னார் திருக்கேதீஸ்வர வீதி வளைவை மீண்டும் கட்டுவதற்கு நீதிமன்றம் இடைக்காலதடை உத்தரவு பிறப்பித்தமையை கண்டித்து வவுனியாவில் இன்று கண்டன ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

கந்தசாமி கோவில் முன்பாக ஒன்றுகூடியவர்கள் ஊர்வலமாக, வவுனியா வைத்தியசாலை ஊடாக மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தனர்.

அமைச்சர் மனோ கணேசனிடம் ஒப்படைப்பதற்கான மனுவை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் கையளித்தனர்.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இந்து ஆலயங்களின் ஒன்றியம்,வெங்கல செட்டிகுளம் இந்து ஆலயங்களின் ஒன்றியம், வவுனியா வடக்கு இந்து ஆலயங்களின் ஒன்றியம் என்பன இணைந்து ஊர்வலத்தை நடத்தின.

You might also like