திருப்பதியில் மைத்திரி குடும்பத்துடன் வழிபாடு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்து, அங்கு பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டைப் பெற்றுக் கொண்டார்.

மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் பயனமாக இந்தியாவுக்கு நேற்றுச் சென்றிருந்தார்.

சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு சென்ற மைத்திரி அங்கிருந்து கார் மூலம் திருமலைக்குச் சென்றார்.

அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அணில் குமார் சின்கால், இணைச் செயல் அலுவலர் சீனிவாச ராஜு ஆகியோர் வரவேற்றனர்.

You might also like