தீர்வு வேண்­டு­மெனில் நடு­நிலமை கட்டாயம்

சுதந்திரக் கட்சி மிரட்­டல்

0 283

தமிழ் மக்­க­ளுக்கு நியா­ய­மான அர­சி­யல் தீர்வை பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மென்­றால் நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கும் சந்­தர்ப்­பத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்பு நடு­நி­லை­யைக் கடைப்­பி­டிக்க வேண்­டு­மென்று சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி பகி­ரங்க எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

கொழும்பு டார்லி வீதி­யில் அமைந்­துள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மை­ய­கத்­தில் நேற்­றுப் புதன்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே அமைச்­சர் தயா­சிறி ஜய­சே­கர இவ்­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு மகிந்­தவா அல்­லது ரணிலா என்­பது முக்­கி­ய­மல்ல. அவர்­கள் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யல் தீர்­வொன்று அவ­சி­யம் என்­பதை புரிந்­து­கொள்ள வேண்­டும். ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு கூட்­ட­மைப்பு ஆத­ர­வ­ளிக்­கு­மா­னால் அர­சி­யல் தீர்­வைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாது.

தமிழ் மக்­க­ளு­டைய அர­சி­யல் தீர்வை சிங்­கள மக்­க­ளி­டம் கொண்­டு­சென்று அங்­கீ­கா­ரத்தை பெற்­றுக்­கொள்ள மகிந்த ராஜ­பக்ச மற்­றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோ­ரால் மாத்­தி­ரமே முடி­யும். ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வால் ஒரு­போ­தும் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யல் தீர்வை சிங்­கள மக்­க­ளின் அங்­கீ­கா­ரத்­து­டன் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலைமை தெளி­வாக விளங்­கிக்­கொள்­வது அவ­சி­யம்.

நாங்­கள் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு ஆத­ர­வ­ளிக்­கு­மாறு கோர­வில்லை. ஆனால், ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு ஆத­ர­வ­ளித்து தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யல் தீர்­வைப் பாதிப்­புக்கு உள்­ளாக்­க­வி­டா­தீர்­கள். கூட்­ட­மைப்­பின் தலை­மைக்கு இது நன்­றா­கத் தெரி­யும்.

ஆனால், எதிர்­கா­லத்­தில் ஐக்­கிய தேசி­யக் கட்­சின் தேசி­யப் பட்­டி­யல் உறுப்­பு­ரி­மையை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக சிலர் தவ­றாக வழி­ந­டத்­து­கின்­ற­னர் – என்­றார்.

You might also like