தீவ­கத்­தின் பொக்­கி­சத்தை காப்­பாற்ற யார் வரு­வார்?

தற்­கா­லத்­தில் கற்­றா­ளை­யின் பயன்­பாடு மக்­கள் மத்­தி­யில் அதி­க­ரித்து வரு­கின்­றது. கடந்த காலங்­க­ளில் முக அழ­கு­ப­டுத்­தல் கலைக்­காக மட்­டும் பயன்­ப­டுத்­தப்­பட்ட கற்­றாளை, தற்­கா­லத்­தில் சுவை­யூட்­டப்­பட்ட குளிர்­பா­னங்­க­ளா­க­ வும், மருத்­து­வத் தேவை­க­ளுக்­கா­க­வும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

இலங்­கை­யில் மன்­னார் மாவட்­டத்­தி­லும், யாழ்ப்­பா­ணம் தீவ­கத்­தி­லும் கற்­றா­ளை­கள் அதி­கம் காணப்­ப­டு­கின்­றன. அத­னால் அங்­குள்ள கற்­றா­ளைக்­குத் திடீ­ரெ­னக் கிராக்கி ஏற்­பட்­டுள்ள நிலை­யில், அவற்­றைச் சட்­ட­வி­ரோ­த­மாக அப­க­ரித்­துச் செல்­லும் செயற்­பா­டு­க­ளும் அதி­க­ரித்­துள்­ளன.

கற்­றா­ளைத் திருட்டு
மன்­னார் மற்­றும் யாழ்ப்­பா­ணம் தீவ­கத்­துக்கு தென்­னி­லங்­கை­யில் இருந்து வாக­னங்­க­ளில் வரு­வோர் கற்­றா­ளை­க­ளைத் திருட்­டுத்­த­ன­மா­கக் கொண்டு செல்­கின்­ற­னர். அவர்­கள் அவற்­றைத் தென்னி கற்­றா­ளை­களை வகை தொகை­யின்றி வேரு­டன் பிடுங்­கிச் செல்­கின்­ற­னர். அதா­னால் கற்­றா­ளை­கள் அடி­யோடு அழி­யும் நிலமை ஏற்­பட்­டுள்­ளது.

மன்­னார், யாழ்ப்­பா­ணம் தீவ­கம் ஆகிய இடங்­க­ளில் கற்­றா­ளை­க­ளைத் திரு­டி­ யவர்கள் பிடிப்­பட்ட பல சம்­ப­வங்­கள் நடந்­துள்­ளன. அந்­தந்­தப் பிர­தேச செய­ல­கங்­கள் கற்­றாளை பிடுங்­கு­வ­தற்­குத் தடை விதித்துள்­ள­போ­தும், அவற்­றை­யும் மீறி அவை கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன. கற்­றாளை பிடுங்­கிச் செல்­லப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­விக்கும் அந்­தப் பிர­தேச மக்­களே பெரும்­பா­லும் திரு­டர்­களை பிடித்­துப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­துள்­ள­னர்.

பொலி­ஸார் தடு­மாற்­றம்
இந்­தத் திருட்­டுக்களைத் தடுக்­கக் கோரிப் பொலி­ஸா­ரி­டம் முறை­யி­டப்­பட்­டி­ருந்­த ­போ­தும் திருட்­டுக்­கள் தொடர்ந்­த­வண்­ணமே உள்­ளன. தீவ­கத்­தில் பொலி­ஸா­ரி­டம் இது தொடர்­பாக முறை­யிட்­ட­போது, கற்­றா­ளை­க­ளைத் தொகை­யா­கப் பிடுங்­கிச் செல்­வ­தைத் தடை செய்­கின்­றோம் என்று பிர­தேச செய­ல­ரால் உத்­தி­யோ­க­பூர்­வக் கடி­தம் தரப்­பட்­டால்­தான் தாம் அவர்­க­ளைக் கைது செய்ய முடி­யும் என்று பொலி­ஸார் கூறி­னார்­கள் என்று சமூக ஆர்­வ­லர் ஒரு­ வர் கூறி­னார்.
பிர­தேச செய­லத்­தி­ன­ருக்கு எழுத்­து­மூ­லம் இது தொடர்­பான முறைப்­பாடு வழங்­கப்­பட்ட ­போ­தும் இது­வரை எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­றும் அவர் கூறு­கின்­றார்.

அண்­மை­யில் வட­மேல் மாகா­ணத்­தின் (புத்­த­ளம்–குரு­ணா­கல்) பதி­வுக்­குட்­பட்ட வாக­னம் ஒன்­றில் பெருந்­தொ­கை­யான கற்­றா­ளை­கள் கடத்­திச் செல்­லப்­பட்­ட­போது புங்­கு­டு­தீ­வைச் சேர்ந்த தன்­னார்­வத் தொண்டு அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள் மடக்­கிப் பிடித்­த­னர். மண்­டை­தீவு பொலிஸ் சோத­னைச் சாவ­டி­யில் அந்த வாக­னம் மறித்­துச் சோத­னை­யிட்­ட­போ­தும், அந்த நபர்­க­ளைப் பொலி­ஸா­ரால் கைது செய்ய முடி­ய­வில்லை. அப்­போ­தும் பொலி­ஸா­ரும் மேற்­கு­றித்த கார­ணத்­தையே கூறி­யுள்­ள­னர்.

ஏன் அச­மந்­தம்?
இந்த விட­யத்­தில் கருத்­துத் தெரி­வித்த புங்­கு­டு­தீவு உலக மையத்­தின் செய­லர் க.குணா­ளன், வேல­ணைப் பிர­தேச செய­ல­கமோ, பிர­தேச சபையோ கற்­றா­ளைச் செடி­கள் பெருந்­தொ­கை­யா­கப் பிடுங்­கிச் செல்­வ­தைத் தடை செய்­யும் எந்த அறி­வித்­த­லை­யும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக விடுக்­க­ வில்லை. அத­னால் பொலி­ஸா­ரும் இந்த விட­யத்­தில் மேல­திக நட­வ­டிக்கை எதை­யும் எடுக்­கின்­றார்­கள் இல்லை என்று கூறு­கின்­றார்.

தீவ­கத்­தில் காணப்­ப­டும் கற்­றா­ளை­கள் திரு­டப்­ப­டு­வ­தைத் தடுக்கவேண்­டும் என்று வேல­ணைப் பிர­தேச சபை­யில் பல தட­வை­கள் பேசப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பா­கத் தீர்­மா­னங்­க­ளும் நிறை­வேற்­றப்­பட் டுள்­ளன.

அந்­தத் தீர்­மா­னங்­கள் உரி­ய­வாறு நடை­மு­றை­ப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னவா என்­பது தொடர்­பில் மக்­கள் மத்­தி­யில் சந்­தே­கம் ஏற்­பட்­டுள்­ளது. இந்த விட­யம் தொடர்­பில் பொலி­ஸா­ரு­டன் கலந்­து­ரை­யாடி திருட்­டைத் தடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டாதுள்­ள­மையே அதற்­குக் கார­ணம்.

தீவ­கத்­தின் சொத்து
தீவ­கத்­தின் கடற்­க­ரைப் பிர­தே­சங்­க­ளைப் பாது காப்­ப­தில் கற்­றா­ளை­கள் பெரும் பங்கு வகிக்கின்­றன. அந்­தப் பகு­தி­க­ளின் பொக்­கி­சம் என்­று­கூட அவற்­றைக் குறிப்­பி­ட­ லாம். அவற்­றைத் தொகை­யாக அள்­ளிச் செல்­வ­தால் கடற்­க­ரைப் பிர­தே­சம் பெரும் பாதிப்பை எதிர்­கொள்­ளும் என்று சமூக ஆர்­வ­லர்­கள் சுட்­டிக்­காட்­டு ­கின்­ற­னர். இந்­த­ நி­லமை தொடர்ந்­தால் குறு­கி­ய­கா­லத்­தி­ லேயே தீவ­கத்­தில் கற்­றா­ளை­க­ளைக் காண முடி­யா­த­ நி­லமை காணப்­ப­டும் என்­றும் அவர்­கள் சுட்­டிக் காட்­டு­கின்­ற­னர்.

தீவ­கத்­தின் பொக்­கி­சத்­தைக் காக்க விரைந்து செயற்­பட வேண்­டும் என்­பதே அங்­குள்ள மக்­க­ளின் பெரும் எதிர்­பார்ப்பு. மக்­கள் பிர­தி­நி­தி­க­ளுக் கும், அரச அதி­கா­ரி­க­ளுக்­கும் மக்­கள் விடுக்­கும் கோரிக்கை இதுவே.

 

You might also like