துயரம் துடைக்க இறப்புச் சான்றிதழ்!!

நாவற்­குழி இரா­ணுவ முகா­மைச் சேர்ந்த படை­யி­ன­ரால் 1996ஆம் ஆண்­டில் கைது செய்­யப்­பட்டு வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட 24பேரில் 3பேர் தொடர்­பான ஆட்­கொ­ணர்வு மனு அண்­மை­யில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதில் அப்­போது நாவற்­குழி இரா­ணுவ முகா­முக்­குப் பொறுப்­பா­க­வி­ருந்த இரா­ணுவ அதி­காரி, சட்­டமா அதி­பர் ஆகி­யோர் பிர­தி­வா­தி­க­ளா­கக் குற்­றம் சாட்­டப்­பட்­டி­ருந்­த­னர்.

இந்த வழக்கு விசா­ர­ணை­யின்­போது சாட்­சி­ய­ம­ளித்த சட்­டமா அதி­பர், மேற்­படி காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பாக அவர்­க­ளுக்கு இறப்­புச் சான்­றி­தழ் வழங்­க­மு­டி­யும் எனத் தெரி­வித்­தார். இதற்கு ஆட்­சே­பனை தெரி­வித்த வாதி­கள் தரப்­புச் சட்­டத்­த­ர­ணி­யான குமா­ர­வ­டி­வேல் குரு­ப­ரன் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இறப்­புச்­சான்­றி­தழ் வழங்­கு­வது தீர்­வாக அமை­யாது என­வும், அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது பற்­றிய உண்­மை­கள் வெளிக்­கொண்டு வரப்­பட வேண்­டும் என­வும் வாதிட்­டார். இந்த நிலை­யில் வழக்கு வேறொரு திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

இறப்­புச் சான்­றி­தழ், இழப்­பீடு எனும்
ஆசை வார்த்­தை­கள்

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பர­ண­கம ஆணைக்­கு­ழு­வி­ன­ரின் விசா­ர­ணை­க­ளில் பங்கு பற்­றிச் சாட்­சி­ய­ம­ளித்த காணா­ம­லாக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­க­ளி­டம் இறப்­புச் சான்­றி­தழ் வழங்­கப்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்­ளும்­ப­டி­யும், அப்­படி ஏற்­றுக்­கொண்­டால் இழப்­பீ­டு­க­ளும் வழங்­கப்­ப­டும் என்­றும் ஆசை வார்த்­தை­கள் கூறப்­பட்­டன. விசா­ர­ணைக்கு வெளி­யே­யும் இறப்­புச் சான்­றி­த­ழைப் பெற்­றுக் கொள்­ளும்­படி காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் அரச புல­னாய்­வா­ ளர்­க­ளால் அச்­சு­றுத்­தப்­பட்­ட­னர்.

ஆனா­லும் தமது உற­வு­க­ளைத் தேடும் முயற்­சி­யி­லும், தமக்­கான நீதி­யைக் கோரும் முயற்­சி­யி­லும் உற­வு­கள் தள­ராது செயற்­பட்டு வரு­கின்­ற­னர். ஐ.நா. மனித உரி­மை­கள் பேர­வை­யின் இலங்கை தொடர்­பான தீர்­மா­னத்­துக்கு அமை­யப் பல வரு­டங்­கள் பல்­வேறு வித­மான இழுத்­த­டிப்­புக்­க­ளின் பின்பு உள்­நாட்­டில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் அலு­வ­ல­கம் அமைக்­கப்­பட்­டது. அதற்­கான சட்ட மூலங்­க­ளும் நிறை­வேற்­றப்­பட்­டன. இதன் விதி­க­ளி­லும் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இறப்புச் சான்­றி­தழ் வழங்­கு­வது, இழப்­பீடு வழங்­குது போன்ற விட­யங்­கள் உள்­ள­டக்­கப்­பட்­டன.

குற்­றத்தை ஏற்­கி­றது அரசு
மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யிலா முன்­னைய அரசு என்­றா­லென்ன, இன்­றைய ரணில் – -மைத்­திரி அரசு என்­றா­லென்ன தங்­க­ளுக்­குள் ஆயி­ரம் முரண்­பா­டு­க­ளை­யும், மோதல்­க­ளை­யும் கொண்­டி­ருந்­த­போ­தி­லும், காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரத்­தில் ஒரு­மித்த நிலைப்­பாட்­டி­லேயே நிற்­கின்­ற­னர். அதா­வது வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பான பிரச்­சி­னைக்­குத் தீர்­வாக இறப்­புச் சான்­றி­தழ் வழங்­கு­வது, இழப்­பீடு வழங்­கு­வது என்ற தீர்­மா­னங்­க­ளுக்கு வெளியே இந்த இரண்டு தரப்­பா­ரும் சிந்­திப்­ப­தற்­குத் தயா­ராக இல்லை.

அரசு இறப்­புச் சான்­றி­தழ் வழங்­கு­வ­தற்கு முன்­வ­ரு­கின்­றது என்­றால், காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் உயி­ரு­டன் இல்லை என்­பதை ஏற்­றுக்­கொள்­கி­றது என்­பதே அர்த்­தம். அதே­வேளை அந்த இறப்­பு­க­ளுக்கு அரசு இழப்பீடுகள் வழங்­கு­வ­தற்­குத் தயார் என்­றால், அவர்­க­ளின் சாவு அரச தரப்­பாலே ஏற்­ப­டுத்­தப்­பட்­டது என்­பதை ஏற்­றுக் கொள்­கின்­றது என்­பதே அர்த்­தம். அதா­வது வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் அரச படை­க­ளாலோ, அரச புல­னாய்­வுப் பிரி­வி­ன­ராலோ கொல்­லப்­பட்­டு­விட்­ட­னர் என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கி­றது. எனவே இந்த இறப்­பு­க­ளுக்­குப் பொறுப்­புக் கூற­வேண்­டிய கடமை அரச தரப்­பி­ன­ருக்கே உண்டு.

காணா­ம­லாக்­கப்­பட்­டோர்
விட­யத்­தில் சட்ட மீறல்­கள்

ஒரு­வர் காணா­மல் போயுள்­ளார் என்­றால், அவர் எப்­ப­டிக் காணா­மல் போனார்? என்­பதை அறி­யும் உரிமை அவ­ரது உற­வி­னர்­க­ளுக்கு உண்டு. சட்­டம் – ஒழுங்­கைப் பாது­காக்­கும் ஜன­நா­யக அரசு என்­றால் அது­பற்­றிய விவ­ரங்­களை வெளிப்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு அர­சுக்கு உண்டு. ஒரு­வர் கொல்­லப்­பட்டு விட்­டா­ரென்­றால், அவர் எப்­போது, எப்­படி, எவ­ரால், ஏன் கொல்­லப்­பட்­டார் என்­கிற விட­யங்­கள் தெரி­யப்­ப­டுத்­தப்­பட வேண்­டும். அதற்­கா­கவே நாட்­டில் பரந்த அள­வில் இறப்பு விசா­ரணை அதி­கா­ரி­கள், நீதி­ப­தி­கள் எனப் பல தரப்­பி­னர் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­னர். ஆனால், காணா­ம­லாக்­கப்­பட்­டோர் விவ­கா­ரத்­தில் மட்­டும் இத்­த­கைய சட்­டங்­க­ளும் வழி­மு­றை­க­ளும் மீறப்­ப­டு­கின்­றன என்­பது கவ­னத்­தில் கொள்­ளப்­ப­ட­வேண்­டிய விட­யங்­க­ளா­ கும்.

வெள்ளை வானில் இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரா­லும் துணை இரா­ணு­வக் குழுக்­க­ளா­லும் கடத்­தப்­பட்­ட­வர்­கள், பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­வர்­கள், இரா­ணு­வத்­தால் பிடித்­துச் செல்­லப்­பட்­ட­வர்­கள், உற­வி­னர்­க­ளால் படை­யி­ன­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­ட­வர்­கள் என வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்டவர்­கள் ஏரா­ளம்­பேர். செம்­மணி, மன்­னார் எனப் பல இரா­ணுவ முகாம்­கள் அமைந்­தி­ருந்த பகு­தி­க­ளி­லும் மனி­தப் புதை­கு­ழி­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

விசா­ர­ணை­களை மோற்­கொண்­டால்
உயர் அதி­கா­ரி­களே சிக்­கு­வர்

கொழும்­பில் 2008 – 2009ஆம் ஆண்­டுக் காலப்­ப­கு­தி­யில் காணா­ம­லாக்­கப்­பட்ட 11பேர் தொடர்­பான விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­போது கடத்­தப்­பட்­ட­வர்­கள் கொழும்­பி­லுள்ள இரா­ணுவ முகாம் ஒன்­றில் தடுத்து வைக்­கப்­பட்ட பின்­னர் திரு­மலை கடற்­ப­டைத் தளத்­தி­லுள்ள சுரங்க அறை­யில் அடைத்து வைக்­கப்­பட்­ட­தா­க­ விசா­ர­ணை­க­ளின்­போது தக­வல்­கள் வெளி­வந்­தன. இதன் கார­ண­மாக உயர் மட்ட அதி­கா­ரி­கள் உட்­ப­டக் கடற்­ப­டை­யி­னர் பல­ரும் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றில் முன்­னி­றுத்­தப்­பட்­ட ­னர்.

அப்­போ­தைய கடற்­ப­டைத் தள­பதி அந்த வழங்­கில் தற்­போது 14ஆவது எதி­ரி­யாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார். அவர் தான் கைதா­கா­மல் இருப்­ப­தற்கு முன் பிணை கோரி மனுத்­தாக்­கல் செய்­துள்­ளார். இதே போன்று வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பில் நியா­ய­பூர்­வ­ மான விசா­ர­ணை­கள் நடக்­கு­மா­னால் இரா­ணுவ, பொலிஸ் உயர்­மட்ட அதி­கா­ரி­கள் உட்­ப­டப் பலர் நீதி­யின் முன் நிறுத்­தப்­ப­டும் நிலை ஏற்­ப­டும் என்­பது அனை­வ­ரும் அறிந்த உண்­மை­யா­கும்.

மறப்­போம் மன்­னிப்­போம்
என்ற ரணிலின் போதனை

போரில் ஈடு­பட்ட இரண்டு தரப்­பு­க­ளும் போர்க்­குற்­றம் இழைத்­த­தா­க­வும், எல்­லா­வற்­றை­யும் மறப்­போம் மன்­னிப்­போம் என்­றும் கிளி­நொச்­சி­யில் அண்­மை­யில் உரை­நி­கழ்த்­தும்­போது தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­னார். மறக்­க­வும் மன்­னிக்­க­வும் சட்­டம் கொண்டு வரும் வகை­யில் அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் சமர்ப்­பிக்­கப் போவ­தாக அமைச்­சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

இப்­ப­டிக் கூறி­ய­தன் மூலம் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க போர்க்­குற்­றம் நடந்­ததை ஏற்­றுக்­கொண்டு விட்­டார் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­விக்­கி­றார். இருந்­த­போ­தும் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நீதி இதற்­குள் புதைந்­து­போ­கும் ஆபத்து உள்­ளதை மறுத்­து­வி­ட­மு­டி­யாது. காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் கோரு­வ­தெல்­லாம் தங்­கள் உற­வு­கள் உயி­ரு­டன் இருக்­கி­றார்­களா? இல்­லையா? இருந்­தால் எம்­மி­டம் கைய­ளி­யுங்­கள், இல்­லா­வி­ட்டால் இல்­லா­மல் செய்­த­வர்­க­ளைத் தண்­டி­யுங்­கள் என்­ப­தையே. இது தொடர்­பாக நேர்­மை­யான விசா­ரணை நடத்­தப்­ப­டு­மா­னால், உயர் அதி­கா­ரி­கள் உட்­ப­டப் பல ஆயு­தப் படை­யி­னர் நீதி­யின் முன் நிறுத்­தப்­ப­டும் நிலை ஏற்­ப­டும். அண்­மை­யில் நீதிக்­கும் சமா­தா­னத்­துக்­கு­மான ஐ.நா. சபை­யின் அமைப்­பைச் சேர்ந்த ஜஸ்­ரின் சுக்கா 58ஆவது படைப்­பி­ரி­வின் கட்­ட­ளைத் தள­ப­தி­யா­கப் பணி­யாற்­றிய மேஜர் ஜென­ரல் சுவேந்­திர சில்வா மீது 23வரை­யி­லான போர்க்­குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ருந்­தார். அதில் முள்­ளி­வாய்க்­கா­லில் உற­வி­னர்­க­ளால் படை­யி­ன­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுக் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பான குற்­றச்­சாட்டு முக்­கி­ய­மா­ன­தா­கும்.

சிங்­க­ளத் தலை­வர்­கள் ஒரு­மித்த நிலைப்­பாட்­டில்
படை­யி­னர் எவ்­வித போர்க்­குற்­றங்­க­ளி­லும் ஈடு­ப­ட­வில்லை என­வும் அவர்­கள் மனி­தா­பி­மான நட­வ­டிக்கை மூலம் புலி­க­ளி­ட­மி­ருந்து தமிழ் மக்­க­ளைக் காப்­பாற்­றி­னர் என­வும் கோத்­த­பாய ராஜ­பக்ச உட்­பட மகிந்த தரப்­பி­னர் கூறி­ வ­ரு­கின்­ற­னர். ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் இரா­ணு­வத்­தி­னர் தண்­டிக்­கப்­பட மாட்­டார்­கள் என்றே கூறி வரு­கி­றார்.
தான் அதி­கா­ரத்­தில் இருக்­கும் வரை இரா­ணு­வத்­தி­னர் தண்­டிக்­கப்­ப­டு­வதை அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை என அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் கூறி­யுள்­ளார். அது மட்­டு­மன்றி ஐ.நா.மனித உரி­மை­கள் பேர­வை­யால் 2015ஆம் ஆண்­டில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்­கை­யின் போர்க்­குற்­றங்­கள், மனித உரிமை மீறல்­கள் தொடர்­பான தீர்­மா­னத்­துக்கு இணை அணு­ச­ரனை வழங்­கி­வந்­த­தில் இருந்து வில­கப் போவ­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

எனவே ரணில் தரப்பு என்­னால் என்ன, மகிந்த தரப்பு என்­றால் என்ன எவர் ஆட்­சிக்கு வந்­தா­லும் இரா­ணு­வத்­தி­னர் தண்­டிக்­கப்­ப­டக்­கூ­டாது என்­ப­தில் எவ்­வித விட்­டுக்­கொ­டுப்­புக்­கும் முன்­வ­ரப்­போ­வ­தில்லை என்­ப­தில் உறு­தி­யா­க­வி­ருக்­கின்­ற­னர். காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பான நியா­ய­மான விசா­ர­ணை­க­ளையோ, நட­வ­டிக்­கை­க­ளையோ அவர்­கள் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை என்­பது தெளி­வா­கி­றது. எனவே காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­க­ளின் போராட்­டம் மேலும் விரிவு படுத்­தப்­பட்டு ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு அழுத்­தம் கொடுக்­கும் அதே வேளை­யில் ஐ.நா. மனித உரிமை பேர­வை­யில் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குரல் ஓங்கி ஒலிக்­கும் வகை­யி­லான நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொள்ள வேண்­டும்.

You might also like