side Add

தூத்துக்குடியில் படுகொலையான தமிழக உறவுகளுக்காக – குரல்கொடுக்க வேண்டும் ஈழத்து அரசியல்வாதிகள்

தமி­ழ­கம் தூத்­துக்­கு­டி­யில் ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ரா­கப் போராட்­டத்­தில் ஈடு­பட்ட தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டில் 13 பேர் உயி­ரி­ழந்­துள்ள நிலை­யில் அவர்­க­ளுக்கு நீதி­கேட்டு இலங்­கை­யின் வட­ப­குதி கொதித்­துக் கொண்­டி­ருக்­கி­றது. அது தொடர்­பான ஒளிப்­ப­டங்­க­ளை­யும் செய்­தி­க­ளை­யும் தற்­போது பர­வ­லாகக் கேட்க, அறி­யக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

நாடு­க­ளின் எல்­லை­க­ளால் பிரிக்­கப்­பட்­டி­ருந்த போதி­லும் மொழி­யால் ஒன்­றா­ன­வர்­கள். அவர்­கள் எமது சொந்­தங்­கள். எமது தொப்­புள்­கொ­டி­கள் என்­ப­தற்கு இலக்­க­ண­மாக இந்­தப் போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. வர­வேற்­கக்­கூ­டிய விட­யம்­தான். ஆனால், ஈழத்துத் தமி­ழர்­க­ளின் அர­சி­யல் பிர­தி­நி­தி­கள் இது விட­யத்­தில் பெரி­ள­ய­ள­வில் அலட்­டிக்­கொள்­ளா­மல் மௌனம் சாதிப்­பது என்­பது மன­வ­ருத்­தத்­தைத் தரும் செய­லா­கவே அமை­கி­றது.

இங்­குள்ள அல­சி­யல் வாதி­கள் மௌனம் சாதிப்­ப­தற்­கும் கார­ணங்­கள் இருக்­க­லாம். துப்­பாக்­கிச் சூட்டை நடத்­தி­யது தமி­ழக பொலிஸ். எனவே இங்­குள்ள அர­சி­யல் பிர­தி­நி­தி­கள் குரல் கொடுத்­தால் அது தமி­ழக அர­சுக்கு எதி­ரான குர­லா­கப் பார்க்­கப்­ப­ட­வும் வாய்ப்­புக்­கள் அதி­கம். இது ஈழத் தமி­ழர் விவ­கா­ரத்தை எதிர்­கா­லத்­தில் தமி­ழக அரசு கைவிட வாய்ப்பை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­து­வி­ட­லாம். இத்­த­கைய கோணத்­தின், பார்­வை­யில் இங்­குள்ள அர­சி­யல் வாதி­கள் மௌனம் சாதித்­துக் கொண்­டி­ருக்­க­லாம்.

அதற்­காக தமி­ழக அர­சின் இந்­தக் கண்­மூ­டித் தன­மான போக்­கைக் கண்­டிக்­காது மௌனம் சாதிப்­ப­தென்­பது ஆகாத செயல். எனவே தமி­ழர் தாயக அர­சி­யல் பிர­தி­நி­தி­கள், பொது அமைப்­புக்­கள் இந்த விட­யத்­தில் தமி­ழக அர­சுக்­கும் இந்­திய அர­சுக்­கும் கண்­ட­ன­மொன்­றைப் பதி­வு­செய்­து­விட்­டுச் செல்­லு­தல் சாலச்­சி­றப்­பாக அமை­யும்.
லய­னல்

You might also like
X