side Add

தென்­னந்­தோப்­பில் தேடு­தல்- சிக்­கி­யது 20 கிலோ கஞ்சா!!

தென்­னந் தோப்­புக்­குள் பதுக்­கப்­பட்­டி­ருந்த 20 கிலோ 200 கிராம் கஞ்சாப் பொதி செய்­யப்­பட்ட  நிலை­யில் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

கைப்­பற்­றப்­பட்ட கஞ்சா 20 லட்­சம் ரூபா பெறு­ம­தி­யா­னது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

மன்­னார், பேசாலை பிர­தேச சபைக்­குட்­பட்ட காட்­டாஸ்­பத்­திரி பகு­தி­யி­லேயே நேற்­று­முன்­தி­னம்  கஞ்சா மீட்­கப்­பட்­டுள்­ளது.

போசாலை பொலி­ஸா­ருக்கு மன்­னார் புல­னாய்­வுப் பிரி­வி­னர் தக­வல் வழங்­கி­யுள்­ள­னர்.  அதை­ய­டுத்து அந்­தப் பகு­தி­யில் தேடு­தல் நடத்­தப்­பட்­டது. கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது.

இது தொடர்­பில் எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. கஞ்சா உள்­ளூர் விற்­ப­னைக்­கா­கப் பதுக்கி  வைக்­கப்­பட்­டி­ருந்­ததா?, அல்­லாது வேறி­டம் கொண்டு செல்­லப் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்­ததா?  என்­பது தொடர்­பில் விசா­ர­ணை­கள் நடக்­கின்­றன என்று பேசா­லைப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like
X