தென்.கிழக்குப் பல்கலைக்கழகத்தில்- விரைவில் வைத்திய பீடம்!!

அம்பாறை கரையோர மாவட்டத்தில் போதனா வைத்தியசாலையும், அதனைத் தொடர்ந்து தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடமும் அமைக்கப்படும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில், சீன நிதி உதவியில் அமைக்கப்படவுள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நடுகை மற்றும் புதிய விடுதி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் அவர் தெரிவித்ததாவது,

சம்மாந்துறை வைத்தியசாலைக்கு இதுவரை 117 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கும் தனியாக ஒரு விடுதி வேண்டும் எஎன்று விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்று புதிய விடுதி திறக்கப்பட்டுள்ளது.

அம்பாறை கரையோர மாவட்டத்தில் பொது வைத்தியசாலை ஒன்று அமைக்க வேண்டும் என்பது தான் எனது திட்டம்.

அவ்வாறு பொது வைத்தியசாலை தொடங்கப்பட்டதன் பின்னர், அதனைப் போதனா வைத்தியசாலையாக மாற்ற வேண்டும். அதன் பின்னர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடத்தைத் தொடங்க வேண்டும்.

வைத்தியபீடத்தை அமைக்கும் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கரையோர மாவட்டம் வைத்திய துறையில் தன்னிறைவு அடைய வேண்டும். இதய சத்திர சிகிச்சைக்கு நாம் யாழ்ப்பாணம் அல்லது பொலநறுவை போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை இவ்வாறான சத்திர சிகிச்சைகள் செய்யும் வைத்தியசாலையாக மாற்ற வேண்டும். என்றார்.

You might also like