தேசியமட்டப் பளுதூக்கலில் -வெறும் ஒன்­பது நாள்­க­ளில் -ஆசிகா மற்­றொரு சாதனை!!

0 64

தேசி­யச் சாத­னை­யொன்­றைப் பதி­வு­செய்து வெறும் ஒன்­பது நாள்­க­ளுக்­குள் மற்­றொரு சாத­னை­யைப் பதி­வு­செய்­தார் வி.ஆசிகா.

இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான பளு­தூக்­கல் தொடர் திரு­கோ­ண­ மலை அக்­கி­ர­போதி தேசிய கல்­லூ­ரி­யில் நடை­பெற்று வரு­கின்­றது.

நேற்று நடை­பெற்ற 20 வய­துக்கு உட்­பட்ட பெண்­க­ளுக்­கான பளு­தூக்­க­லில் 63 கிலோ எடைப் பிரி­வில் சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூ­ரியை பிர­தி­நி­தித்­து­வம் செய்த விஜ­ய­பாஸ்­கர் ஆசிகா 178 கிலோ பளுவை தூக்கி தனது சாத­னையை தானே முறி­ய­டித்து புதிய சாத­னையை பதிவு செய்து தங்­கப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.

இவர் கடந்த 21ஆம் திகதி நடை­பெற்ற திறந்த வய­துப் பிரி­வி­ன­ருக்­கான பளு­தூக்­க­லில் சினெச் முறை­யில் 76 கிலோ பளு கிளின் அன்ட் ஜக் முறை­யில் 97 கிலோ பளு என ஒட்டு மொத்­த­மாக 173 கிலோ பளுவை தூக்கி தேசி­யச் சாதனை படைத்­தி­ருந்­தார்.

ஆனால் நேற்று நடை­பெற்ற இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான பளு­தூக்­க­லில் சினெச் முறை­யில் 77 கிலோ பளு கிளின் அன்ட் ஜக் முறை­யில் 101 கிலோ பளு என ஒட்­டு­மொத்­தமா 178 கிலோ பளு­வைத் தூக்கி ஒன்­பது நாள்­க­ளுக்­குள் மீண்­டும் புதிய சாத­னை­யைப் பதிவு செய்­தார்.

அத்­து­டன் அகில இலங்கை பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான போட்­டி­க­ளில் சிறந்த பளு­தூக்­கல் வீராங்­க­னை­யா­க­வும் தெரி­வா­கி­னார்.

You might also like