side Add

தேவை­ய­றிந்து மேற்­கொள்­ளும் உதவி -என்­றும் பெறு­ம­தி­ மிக்­கது!!

கிளி­நொச்சி மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்­குப் புலம்­பெ­யர் உற­வு­க­ளால் 8.6மில்­லி­யன் ரூபா பெறு­ம­தி­யான இத­ய­நோய் சிகிச்­சைக் கரு­வி­கள் அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்­டுள்­ளமை பாராட்­டுக்கு உரி­ய­தொரு நற்­ப­ணி­யா­கக் கொள்­ளத்­தக்­கது.

இது­வரை கால­மும் கிளி­நொச்சி மாவட்­டத்­தைச் சேர்ந்த இத­ய­நோய் நோயா­ளி­கள் தமது நோய்க்­கான சிகிச்சை பெறும் பொருட்டு யாழ்ப்­பா­ணம் மற்­றும் வவு­னியா ஆகிய இடங்­க­ளி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு அனுப்­பப்­பட்டு வந்­த­னர்.

இத­னால் அவர்­கள் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு முகம் கொடுக்க நேர்ந்­த­து­டன் தனிப்­பட்ட வகை­யில் செல­வீ­ன­மா­கப் பெருந்தொகைப் பணத்­தை­யும் செல­வி­ட­வேண்டி நேரிட்­டது. தற்­போது தமது மாவட்ட வைத்­தி­ய­சா­லை­யி­லேயே தமது குறித்த நோய்க்­கான சிகிச்­சை­யைப் பெறத்­தக்க வாய்ப்பை ஏற்­ப­டுத்தி வைத்த புலம்­பெ­யர் அமைப்­புக்­க­ளுக்கு கிளி­நொச்சி மாவட்ட மக்­கள் என்­றும் நன்­றி­யு­டை­ய­வர்­கள் ஆவர்.

வெறு­மனே பகட்­டுக்­கா­க­வும், தமது தனிப்­பட்ட பிர­பல்­யத்தை வௌிக்­காட்­டிக் கொள்­வ­தற்­கா­க­வும், எம்­ம­வர்­க­ளில் பலர் இன்­றும் கோவில் உற்­ச­வங்­க­ளின்­போ­தும், திரு­மண வைப­வம்­போன்ற பொது நிகழ்­வு­க­ளின்­போ­தும் எது­வித அர்த்­த­மு­மின்று அநி­யா­ய­மா­கப் பெருந்­தொகை நிதி­யைச் செலவு செய்­வ­தைக் காண, கேட்க முடி­கி­றது.

அந்த வகை­யில் வௌிநா­டு­க­ளில் பல்­வேறு நெருக்­க­டி­க­ளின் மத்­தி­யி­லும் வாழும் புலம்­பெ­யர் எம்­ம­வர்­கள், இங்­குள்ள தமது உற­வு­க­ளுக்கு உதவி அவர்­க­ளது சிர­மங்­க­ளைப் போக்­க­வேண்டி மேற்­கு­றிப்­பிட்ட விதத்­தி­லான பொது­ந­லன்­சார் நற்­ப­ணி­களை முன்­னெ­டுத்து வரு­வது குறித்து நாம் பெரு­மைப்­பட்­டாக வேண்­டும்.

குறிப்­பாக போரி­னால் பெரிய அள­வில் பாதிக்­கப்­பட்ட கிளி­நொச்சி மாவட்­டம் உட்­பட்ட வன்­னிப் பெரு­நி­லப் பரப்­பில் வாழும் எம்­ம­வர்­கள், புலம்­பெ­யர் உற­வு­கள் தேவை­ய­றிந்து மேற்­கொள்­ளும் இத்­த­கைய நற்­ப­ணி­க­ளுக்­காக அந்­தப்­பு­லம்­பெ­யர் அமைப்­புக்­க­ளுக்கு என்­றும் நன்றி பாராட்­டக் கட­மைப்­பட்­டுள்­ளோம்.
அ.அகி­லன், கிளி­நொச்சி

You might also like
X