தொங்கு பாலத்தில் பயணிக்க அச்சப்படும் பயணிகள்!!

மன்னார் தொங்கு பாலம் நீண்டகாலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதால், பாலத்தின் ஊடாகப் பயணிப்பவர்கள் அச்சத்துடன் பயணிக்கவேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

தொங்குபாலத்தில் நடைபாதையில் அமைக்கப்பட்ட தகட்டின் ஒரு பகுதி திறந்து காணப்படுகின்றது இதனால் அப்பாலத்தைக் கடந்து செல்லும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாலத்தில் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

தற்போது காற்றுக்காரணமாக பாதுகாப்பு கம்பங்கள் இன்றியும், மிகவும் பழமைவாய்ந்த இரும்புக்கம்பிகள் உடைந்த நிலையிலும் காணப்படுகின்றது.

இவ்வாறு அழிந்து செல்லும் பிரபல்யமான சுற்றுலா மையங்களை அழகுபடுத்தி மாகாணத்தை வருமானதுறையாக மாற்றி அமைக்க நடவடிக்கை மேமற்கொள்ளப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like