தோற்றுப்போயுள்ள நிலையில் தமிழர் அரசியல்!!

தமிழ் அர­சி­யல் கட்­சித் தலை­வர்­க­ளது இன்­றைய நிலைப்பாட்டை நோக்கும் போது அழு­வதா? அல்­லது சிரிப்­பதா? என்று தெரிய­வி்ல்லை. தத்­த­மது பத­வி­க­ளைக் காப்­பாற்­று­வ­தற்­கா­க­வும், சலு­கை­க­ளைப் பெறு­வ­தற்­கா­க­வும் எதை­யும் செய்­வ­தற்­கும் தாம் தயா­ரென்­பதை அவர்­கள் நிரூ­பித்து வரு­கின்­றார்­கள்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளது  அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றக்
கூட்­டுச்­சேர்­வதை சீர­ணிக்க  இய­லாத நிலை­யில் தமிழ் மக்­கள்

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான பெரும்­பான்­மைப் பலம் கிடைக்­கா­த­தால், தம்­மால் ஒரு காலத்­தில் ஒதுக்கி வைக்­கப்­பட்ட தரப்­பி­னர்­க­ளு­டன் கூட்­டுச் சேர்ந்து கூட்டமைப்பினர் ஆட்­சி­ய­மைத்­தமை தமி­ழர் பகு­தி­யில் இடம் பெற்­றுள்­ளது.

ஆரம்­பத்­தில்­ மக்­க­ளால் இதை நம்­பவே முடி­ய­ வில்லை. ஏதோ அரு­வ­ருக்கத்­தக்க ஒன்­றைப் பார்்ப்­பது போன்றே இதைப் பார்த்­த­னர். எந்த வகை­யி­லும் இதை அவர்­க­ளால் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. அர­சி­யல் கட்­சி­யின் தலை­வ­ரொ­ரு­வர் இதை­யொரு வெட்­கம் கெட்ட செய­லென எள்ளி நகை­யா­டி­யி­ருந்­தார்.

இன்று அதே வெட்­கம் கெட்ட செயலை அவர் வவு­னி­யா­வில் நிறை­வேற்றி வைத்­தமையைக் கேள்வி யுற்றபோது எமக்கு வெட்­க­மாக உள்­ளது. அர­சி­யல் கட்­சி­கள் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தன் நோக்­கமே ஜன­நா­யக ரீதி­யான அர­சி­யலை மேற்­கொள்­வ­தற்­கும், மக்­க­ளின் தேவை­க­ளைக் கண்­ட­றிந்து நிறை­வேற்றி வைப்­ப­தற்­குமே என்­பதை நாம் மறந்து விடக்­கூ­டாது. ஆனால் அர­சி­யல்­வா­தி­கள் தமது நலன்­களை மட்­டுமே கருத்­தில் கொண்டு செயற்­பட்­டுக்­கொண்­டி­ருப்­ப­தைக் காண முடி­கின்­றது.

மக்­களை இவர்­கள் ஒரு பொருட்­டாக மதிப்­ப­தா­கவே தெரி­ய­வி்ல்லை. தாங்­கள் செய்­வ­தை­யெல்­லாம். பொது­மக்­கள் ஏற்­றுக் கொள்­ள­வேண்­டும் என்ற பாணி­யில் அவர்­க­ளின் நட­வ­டிக்­கை­கள் அமைந்­துள்­ளன.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளின் உண்­மை­யான நிலைப்­பா ட்­டைத் துசி­லு­ரித்­துக் காட்­டி­விட்­டது என்றே கூற வேண்­டும். இந்த விட­யத்­தில் ஒட்­டு­மொத்­தத் தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளி­டம் வேறு­பாடு எத­னை­யும் காண முடி­ய­ வில்லை. எல்­லாமே ஒரே குட்­டை­யில் ஊறிய மட்­டை­கள் தான் என்ற நிலை­தான் இங்கு காணப்­ப­டு­கின்­றது.

தமிழ்த் தேசி­யம், தமிழ்த் தாய­கம்  என்ற இது­வரை கால முழக்­கங்­கள்  போலிக் கூச்­சல்­கள் தானா?

தமிழ்த் தேசி­யம், தமி­ழர் தாய­கம் என்­றெல்­லாம் கூறி மக்­களை ஏமாற்றி வரு­கின்ற இவர்­கள், தென்­னி­லங்­கைக் கட்­சி­க­ளு­டன் இணைந்து ஆட்­சி­ய­மைத்­த­தும், அந்­தக் கட்­சி­கள் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு உத­வி­ய­தும் ஏற்­றுக் கொள்­ளத்­தக்க செயல்­க­ளெ­னத் தெரி­ய­வி்ல்லை. தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் தேசி­யக் கட்­சி­கள் என அழைக்­கப்­ப­டும் தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த பேரி­ன­வா­தக் கட்­சி­க­ளுக்கு இவர்­கள் அர­சி­யல் கத­வு­க­ளைத் திறந்து விட்­டுள்­ளமை எதிர்­கா­லத்­தில் மிகப் பெரிய அனர்த்­தங்­க­ளுக்கு வழி கோலப் போகின்­றது.

தென்­னி­லங்­கைக் கட்­சி­களை நம்­பு­கின்ற இவர்­கள், தமக்­குள் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் நம்ப முன்­வ­ர­வில்லை. வெவ்­வேறு திசை­க­ளில் , குறு­கிய சுய இலாப நோக்­கு­டன் பய­ ணிக்­கும் இவர்­கள், இனி­யா­வது தமக்­குள் ஐக்­கி­யத்­தைப் பேணு­வார்­க­ளென எதிர்­பார்க்க முடி­யாது. இலட்­சி­யத்­துக்­காக வேற்­றுமை உணர்வை வளர்ப்­ப­வர்­கள் என்றோ ஒரு­நாள் ஒன்று சேர்ந்து விடு­வார்­கள். ஆனால் பத­விக்­கா­கச் சண்­டை­யி­ப­வர்­கள் ஒரு­போ­துமே ஐக்­கி­யப்­பட மாட்­டார்­கள்.

இன­வா­தி­கள் தமிழ் அர­சி­ய­லைக் குழப்­பு­வ­தையே குறி­யா­கக்­கொண்டு இயங்­கி­ வ­ரு­கின்­ற­னர். தமி­ழர்­களைத் தனித்தன்­மை­யு­டன் இயங்க­வி­டக் கூடா­தென்­பதே இவர்­க­ளது கப­ட­நோக்­க­மா­கும். உல­கின் மிகச் சிறந்த போராளி அமைப்­பான விடு­த­லைப் புலி­க­ளைப் பிளவு பட­வைத்து, தமி­ழர் போராட்­டத்தை அழித்­தொ­ழித்த அவர்­க­ளுக்கு, தமிழ் அர­சி­யல் வாதி­க­ளி­டையே பிளவை ஏற்­ப­டுத்­து­வது பெரிய விட­ய­மாக இருக்­காது .அதைத் தான் நாம்­தற்­போது பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­றோம்.

வவு­னியா வடக்கு, வட மாகா­ணத்­தின்­எல்லை மாவட்­டங்­க­ளில் ஒன்­றா­கும். இங்கு தமி­ழர்­க­ளின் இனப்­ப­ரம்­பலை வீழ்ச்­சி­யு­றச் செய்­வ­தற்­கான முயற்­சி­கள் முழு­வீச்­சில் இடம்­பெற்று வரு­கின்­றன. இதற்­கேற்­றாற்­போன்று சிங்­க­ளக்­கு­டி­ யேற்­றங்­கள் அர­சின் உத­வி­யு­டன் முன்­னெ­ டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதைத் தடுப்­ப­தற்கு எமது தமிழ் அர­சி­யல் வாதி­க­ளால் முடி­ய­வில்லை. வெறும் கூச்­சல் போடு­வ­தற்கு மட்­டுமே இவர்­க­ளால் முடி­கின்­றது. உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்க்­கட்­சி­க­ளுக்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் அறு­திப் பெரும்­பான்மை கிடைக்­கா­ ததை தேசி­யக் கட்­சி­கள் தமக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளன.

வவு­னியா நக­ர­சபை நிர்­வா­கம்  கூட்­ட­மைப்­புக்குக் கிட்­டா­தமை
இன­வா­தி­க­ளுக்கு மகிழ்ச்­சியே

வவு­னியா நகர சபை­யின் தவி­சா­ள­ராக தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் உதய சூரி­யன் சின்­னத்­தில் போட்­டி­யிட்­ட­வர் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார்.மொத்­த­மாக 21 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட வவு­னியா நகர சபை­யில் வெறும் மூன்றே மூன்று உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப் ஆட்­சி­யைக்­கைப்­பற்­றி­யமை விநோ­த­மா­ன­தொரு செய­லா­கும்.

8 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட கூட்­ட­மைப்­பி­னால் இதை வேடிக்கை பார்க்க மட்­டுமே முடிந்­து ள்­ளது. ஈ.பி.டி.பி, றிசாத் அணி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, மகிந்த அணி, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­ யின் ஒரு பகுதி உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு வழங்­கி­ய­தால், ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்­பி­னர் தவி­சா­ளர் கதி­ரை­யில் அமர்ந்து கொண்­டார்.

இன­வா­தி­க­ளுக்கு இது­வொரு உவப்­பான செய்­தி­யாக அமைந்து விட்­டது. கூட்­ட­மைப்பை வீழ்த்­தி­விட்­டால், தமது பய­ணத்­துக்­கான பாதை திறக்­கப்­பட்டு விடு­மென இவர்­கள் நம்­பு­வ­தால் கூட்­ட­ மைப்­பின் தோல்­வியை அவர்­கள் கொண்­டா­டவே செய்­வார்­கள்.

அது மட்­டு­மல்­லாது, வெண்­கலச் செட்­டி கு­ளம் பிர­தேச சபையை சுதந்­தி­ரக்­கட்சி கைப்­பற்­றி­ய­மை­யும் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. தமி­ழர் அர­சி­யல் என்­பது மக்­களை ஏமாற்­று­கின்ற ஒன்­றா­ கவே மாறி­யுள்­ளது. தமி­ழர்­கள் எதிர்­கொண்டு வரு­கின்ற அவ­லங்­க­ளை­யும், எதிர்­கா­லத்­தில் நிக­ழப்­போ­கும் அபா­யத்­தை­யும், தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் கவ­னத்­தில் கொண்­ட­தா­கத் தெரி­ய­வில்லை. இந்த நிலை நீடிக்­கு­மா­னால் தமி­ழர்­க­ளின் எதிர்­கா­லமே இருள் சூழ்ந்­த­தாக மாறி­வி­டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close