நடன ஆசிரியரானார் லட்சுமி மேனன்!!

கும்கி, பாண்டிய நாடு, கொம்பன் போன்ற படங்களில் நடித்த லட்சுமி மேனன் தற்போது குழந்தைகளுக்கு நடன வகுப்பு நடத்தி வருகிறார்.

லட்சுமி மேனன் சிலகாலமாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

அவர் இதுபற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- ‘எனக்கு நடனம் பிடிக்கும். அதைப் பற்றிதான் படிச்சேன். என் வாழ்க்கையோட கடைசி வரைக்கும் நடனம் பற்றி புதுப்புது வி‌lயங்களைக் கத்துக்கிட்டுதான் இருப்பேன். வீட்டிலேயே நான் சில குழந்தைகளுக்கு நடன வகுப்பு எடுத்துக்கிட்டிருக்கேன். என்னோட மாணவர்களின் அரங்கேற்றம் நிகழ்ச்சியை பார்க்கணும்னு ஆசைப்படுறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

You might also like