நடுநிலை வகிக்க மைத்திரி கோரிக்கை முடிவு மாறாது என்றது கூட்டமைப்பு

நேற்று நேரில் சந்­தித்­த­போது இரு தரப்­பும் சுமு­க­மான கலந்­து­ரை­யா­டல்

0 575

தலைமை அமைச்­சர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள நம்­பிக் கை­யில்­லாத் தீர்­மா­னம் மீதான வாக்­கெ­டுப்­பின்­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நடு­நி­லமை வகிக்­க­வேண் டும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கோரிக்கை முன்­வைத்­துள்­ளார். இருப்­பி­னும், கூட்­ட­மைப்பு அந்­தக் கோரிக்­கையை அடி­யோடு நிரா­க­ரித்­துள்­ள­து­டன், தமது கட்சி நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரிக்­கும் முடிவை ஏற்­க­னவே எடுத்­துள்­ள­தா­க­வும் கூறி­யுள்­ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­தி­ரன், செல் வம் அடைக்­க­ல­நா­தன், த.சித்­தார்த்­தன் ஆகி­யோ­ருக்­கும் இடை­யில் அரச தலை­வர் செய­ல­கத்­தில் நேற்று ஒன்­றரை மணி­நே­ரம் சந்­திப்பு இடம்­பெற்­றது.

இந்­தச் சந்­திப்­பின் ஆரம்­பத்­தில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கருத்­துத் தெரி­வித்­துள்­ளார். 2015ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் தமிழ் மக்­க­ளின் வாக்­கு­க­ளால் தெரிவு செய்­யப்­பட்­டேன் என்­ப­தில் தொடங்கி, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பதவி நீக்­கி­யமை வரை­யி­லான விட­யங்­க­ளைக் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதன் பின்­னர் தற்­போ­தைய அர­சி­யல் குழப்­பங்­கள் தொடர்­பில் இரு தரப்­பி­ன­ரும் ஆராய்ந்­துள்­ள­னர். நாடா­ளு­மன்­றத்­தில் புதிய தலைமை அமைச்­சர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தத் தீர்­மா­னம் மீதான வாக்­கெ­டுப்­பின்­போது கூட்­ட­மைப்பு நடு­நி­லமை வகிக்­க­வேண்­டும் என்று அரச தலை­வர் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

ஆனால் கூட்­ட­மைப்பு அதனை நிரா­க­ரித்­துள்­ளது. மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ரா­கச் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்று கட்சி முடிவு எடுத்து அறி­வித்­துள்­ள­மையை அரச தலை­வ­ருக்­குச் சுட்­டிக்­காட்­டி­னர். மகிந்த ராஜ­பக்­சவை கூட்­ட­மைப்பு ஆத­ரிக்க முடி­யா­தி­ருப்­பதை தான் ஏற்­றுக் கொள்­வ­தாக அரச தலை­வர் இதன்­போது கூறி­யுள்­ளார்.

இதே­வேளை அரச தலை­வ­ரு­ட­னான சந்­திப்­புத் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஊட­கப் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது, நாட்­டில் தற்­போது நில­வும் சூழ்­நிலை தொடர்­பில் மிக நீண்ட கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது. இதன்­போது அரச தலை­வர் சில முடி­வு­கள் எடுக்­கப்­பட்­ட­தன் பின்­னணி குறித்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் குழு­வி­ன­ருக்கு விளக்­க­ம­ளித்­தார்.

இதன்­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னா­லும் அதன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­லும் எடுக்­கப்­பட்­டத் தீர்­மா­னங்­க­ளுக்­கான கார­ணங்­களை மைத்­தி­ரிக்கு கூட்­ட­மைப்­பி­னர் எடுத்­துக் கூறி­னார்­கள். இந்­தத் தீர்­மா­னங்­கள் ஏற்­க­னவே பகி­ரங்­க­மாக முழு நாட்­டுக்­கும் உல­கிற்­கும் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.தாம் ஏற்­க­னவே எடுத்த தீர்­மா­னங்­களை மாற்ற முடி­யாது என்­றும் அந்­தத் தீர்­மா­னங்­க­ளின்­ப­டியே தாம் செயற்­ப­டு­வோம்­என்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் மைத்­தி­ரிக்கு கூறி­னார்­கள்.

அனைத்­துக் கட்­சி­க­ளி­னு­டைய இணக்­கப்­பாட்­டோடு நாட்­டின் அர­சி­யல் சூழ்­நி­லையை சுமூ­க­நி­லைக்கு கொண்டு வரு­வ­தற்­காக எதிர்­கா­லத்­தில் அரச தலை­வர் எடுக்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அவ­ரோடு கலந்­தா­லோ­சித்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தனது முழு­மை­யான ஆத­ர­வைக் கொடுக்­கும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு குழு மைத்­தி­ரிக்கு உறு­தி­ய­ளித்­தார்­கள்.

இந்த நிலையை விரை­வாக அடை­வ­தற்­குத் தற்­போது யோசித்­துள்ள திக­திக்கு முன்­ன­தான ஒரு திக­தி­யில் நாடா­ளு­மன்­றம் கூட்­டப்­ப­ட­வேண்­டு­மென்று அரச தலை­வ­ருக்கு கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யது. இந்த வேண்­டு­கோ­ளைத் தான் கவ­ன­மாக ஆராய்­வ­தாக மைத்­திரி உறு­தி­ய­ளித்­தார் – என்­றுள்­ளது.

You might also like