நவராத்திரி மகிமை!!

நவ­ராத்­திரி விர­தம் புரட்­டாதி மாதத்­தில் வரு­கின்ற வளர்­பி­றைப் பிர­தமை நாள் முதல் நவமி நாள் வரை­யுள்ள ஒன்­பது தினங்­கள் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இவ்­வாண்­டுக்­கு­ரிய புரட்­டாதி மாத வளர்­பி­றைப் பிர­தமை கடந்த 09 ஆம் திகதி அன்று ஆரம்­ப­மா­கி­யது.

18 ஆம் திகதி நவ­மித் திதி­யோடு நவ­ராத்­திரி விர­தம் இனிதே நிறை­வு­றும். மறு­நாள் 19 ஆம் திகதி விஜ­ய­த­சமி. இது கேதா­ர­கௌரி விர­தத்­தின் தொடக்க நாளாக அமை­கின்­றது.

பத்து நாள்­கள் வரு­கின்ற நாராத்­தி­ரி­யில் முப்­பெ­ரும் தேவி­ய­ருக்­கும் ஆல­யங்­க­ளில் கும்ப பூசை சிறப்­பாக இடம்­பெ­றும். ஆயி­னும் சரஸ்­வ­திக்­கு­ரிய நாளை மூல­நட்­சத்­திர நாளில் ஆரம்­பித்து திரு­வோண நட்­சத்­திர நாளில் நிறைவு செய்ய வேண்­டும் என்ற விரத நிர்­ணய விதி­யும் சொல்­லப்­ப­டு­கி­றது.

பொருள்
நவம் என்ற சொல்­லுக்கு ‘ஒன்­பது’ என்­றும் ‘புதி­யது’ என்­றும் பொருள். மகி­ஷா­சூ­ரனை அழிப்­ப­தற்­காக அம்­மன் ஒன்­பது நாள்­கள் போர் செய்து பத்­தாம் நாள் வெற்றி பெறு­கின்­றாள்.மகி­ஷம் என்­றால் எருமை. இது சோம்­பல் மற்­றும் அறி­யா­மை­யின் சின்­ன­மாக விளங்­கு­கி­றது.

அறி­யா­மையை அழித்த அம்­பி­கைக்கு புரட்­டாதி மாதம் பிர­த­மைத் திதி­யி­லி­ருந்து ஒன்­பது நாள்­கள் விழா கொண்­டா­டப்­ப­டு­கி­றது. இந்த நாள்­க­ளில் நம்மை சூழ்ந்­துள்ள அறி­யாமை என்­னும் இருள் விலக அம்­பி­கையை இர­வுப் பெழு­தில் வழி­பாடு இயற்­று­கி­றோம்.

இருள் விலகி ஒளி பிறந்த பத்­தாம் நாள் விஜ­ய­த­சமி தின­மா­கக் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. ஒரு நாளில் பகல் என்­பது சிவ­னின் அம்­ச­மா­க­வும், இரவு என்­பது அம்­பி­கை­யின் அம்­ச­மா­க­வும் கரு­தப்­ப­டு­கி­றது. பக­லும் இர­வும் இல்­லா­விட்­டால் நாள் என்­பது கிடை­யாது. பக­லில் உழைக்­கும் உயி­ரி­னங்­களை இர­வில் அம்­பாள் தன் மடி­யில் கிடத்தி தாலாட்டி உறங்­கச் செய்­கி­றாள்.

அம்­பி­கை­யின் மகத்­து­வம்
சும்­பன், நிசும்­பன் என்ற அசு­ரர்­கள் பிரம்­ம­னின் அரு­ளால் சாகா­வ­ரம்­பெற்­ற­னர். இருந்­தா­லும் தங்­க­ளுக்குச் சம­மான பெண்­ணால் மட்­டுமே மர­ணம் ஏற்­பட வேண்­டும் என்ற வரத்தை பெற்­றி­ருந்­த­னர். எனவே தேவர்­களை வெற்­றி­கொண்­டும் அதர்­மங்­களை விளை­வித்­தும் வந்­த­னர்.

அவர்­க­ளது அழிவு காலத்­தில் ஆதி­ப­ரா­சக்­தி­யி­ட­மி­ருந்து ‘கௌசி­கி­யும்’, ‘காளிகா’ என்ற கால­ராத்­தி­ரி­யும் தோன்­றி­னர்.காளி­கா­வுக்­குத் துணை­யாக முப்­பெ­ரும்­தே­வி­யின் வடி­வான அஷ்­ட­மா­தர்­க­ளும் அஷ்­ட­ராத்­தி­ரி­க­ளா­கத் தோன்­றி­னர்.

ஆம், ‘பிராம்­மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாக­னத்­தில் அட்­ச­ர­மாலை , கமண்­ட­லத்­து­ட­னும் வைஷ்­ணவி என்ற விஷ்­ணு­சக்தி கருட வாக­னத்­தில் சங்கு சக்­க­ரம், கதை, தாம­ரைப்­பூ­வு­ட­னும் மகேஸ்­வரி என்ற சிவ­னின் சக்தி ரிஷப வாக­னத்­தில் திரி­சூ­லம் மற்­றும் வர­முத்­தி­ரை­யு­ட­னும் கௌமாரி என்ற கார்த்­தி­கேய சக்தி மர வாக­னத்­தில் வேலா­யு­தத்­து­ட­னும் மாகேந்­திரி என்ற இந்­தி­ர­னின் சக்தி ஐரா­வ­தத்­தில் வஜ்­ரா­யு­தத்­து­ட­னும் வாராஹி என்ற வாரா­ஹி­ய­ரு­டைய சக்தி எருமை வாக­னத்­தில் கலப்­பை­யு­ட­னும் சாமுண்டா என்ற பைர­வ­ரின் சக்தி எம வாக­னத்­தில் கத்­தியை ஏந்­தி­ய­வ­ளா­க­வும் நர­சிம்­மஹி என்ற நர­சிம்­ம­ரின் சக்தி கூரிய நகத்தை ஆயு­த­மா­க­வும் கொண்டு கமல பீடத்­தி­லும்’ தோன்­றி­னார்­கள்.

இவர்­கள் காளிகா என்ற சண்­டிகா தேவி­யு­டன் ஒன்­பது ராத்­தி­ரி­க­ளா­யி­னர். இந்த நவ­ராத்­திரி தேவ­தை­கள் சும்ப நிசும்­பர்­களை அழித்­த­னர்.
அசு­ரர்­க­ளின் கொடு­மை­யில் இருந்து விடு­பட்ட தேவர்­கள் கௌசி­கி­யான அம்­பி­கை­யை­யும், நவ­ராத்­திரி தேவ­தை­க­ளை­யும் போற்­றித் துதித்­த­னர். இந்த நிகழ்வே நவ­ராத்­திரி எனப்­ப­டு­கி­றது. படைத்­தல், காத்­தல், அழித்­தல் அனைத்­துக்­கும் மூல­மாக இருப்­ப­வள் தேவியே.

அம்­பி­கை­யின் அருள்
பரம சுகத்­தை­யும், நீண்ட ஆயு­ளை­யும், சுபீட்­சம் பெற வகை செய்­யும் அனைத்­துச் செல்­வங்­க­ளை­யும் அருள்­ப­வள் அவளே. முத்­தொ­ழில் புரி­யும் மும் மூர்த்­தி­க­ளும் வணங்­கும் பரம் பொருள் பரா­சக்­தியே. தின­மும் அம்­பி­கையை வணங்­கி­னா­லும் புரட்­டாதி மாதத்­தில் வரு­கின்ற நவ­ராத்­திரி காலத்­தில் அம்­பி­கையை வணங்­கு­வது மிகுந்த பலனை அளிக்­கும்.

முக்­கு­ணங்­க­ளுக்­கும் மூல­மான சர்­வ­லோக நாய­கியை ஒன்­பது நாள்­க­ளும் வழி­பாடு இயற்­றும் போது, முதல் மூன்று நாள்­கள் துர்க்கா பர­மேஸ்­வ­ரி­யை­யும், அடுத்த மூன்று நாள்­கள் மகா­லட்­சு­மி­யை­யும், இறுதி மூன்று நாள்­கள் சரஸ்­வ­தி­யை­யும் வணங்­க­வேண்­டும்.

வணங்­கு­வ­தால் எதை­யும் பெற­லாம்.
கல்வி,இசை,புகழ்,செல்­வம், தானி­யம்,வெற்றி, தண்­ணீர் ஆகிய அனைத்­தை­யும் சக்­தியே தரு­கி­றாள்.ஆதி­ப­ரா­சக்­தியை துர்க்­கை­யாக நினைத்து வழி­பட்­டால் பயம் நீங்­கும்.லட்­சுமி வடி­வில் தரி­சித்தால் செல்­வம் பெரு­கும். சரஸ்­வ­தி­யாக எண்ணி வணங்­கி­னால் கல்­விச்­செல்­வம் சிறக்­கும். பார்­வ­தி­யாக வழி­பட்­டால் ஞானப்­பெ­ருக்கு உண்­டா­கும்.

You might also like