நாட்டில் பயங்கரவாதத்துக்கு இடமளிக்க வேண்டாம்- கூட்டமைப்பு கோரிக்கை!!

எவ்விதமான பயங்கரவாதத்துக்கும் நாட்டில் இடமளிக்கக் கூடாது. வன்முறையாளருக்கெதிராக உடனடியானதும, கடுமையானதுமான நடவடிக்கைகளை அதிகாரத்த்திலுள்ளோர் எடுக்க வேண்டும் என்று தமிழ் தேரிய கூட்டமைப்பு கோரியுள்ளது.

இது தொடர்பில் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த இரண்டு நாள்களாக முஸ்லீம் வீடுகள், வர்த்தக நிலையங்கள். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவலையடைகிறது. ஊரடங்குச் சட்ட நேரத்திலும் பாதுகாப்பு படையினர் இந்த வன்செயல்களை தடுப்பதற்கு உகந்த நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டனத்துக்குரியது.

அரசு தம்மை பாதுகாக்க தவறுகிறது என்று மக்கள் நினைத்தால் அவர்கள் தம்மை தாமே பாதுகாக்க தலைப்படுவார்கள். இப்படியான சூழ்நிலையை அனுமதிக்க வேண்டாம் என்று நாம் அரரசைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

இந்த நாட்டில் தான் சுயமாக வாழ்வதற்கு போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும் என்று இன்னுமொரு சமூகத்தையும் நினைக்கத் தூண்டாதீர்கள். கிறிஸ்தவ ஆலயங்களைத் தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி, பள்ளிவாசல்களை தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி – எவ்விதமான பயங்கரவாதத்துக்கும் இந்த நாட்டிலே இடமிருக்கக் கூடாது.- என்றுள்ளது.

You might also like