நாயாறு கடலேரியில் – குவியும் குப்பைகள்!!

முல்­லைத்­தீவு நாயாற்று கடல்­நீர் ஏரி வறட்சி கார­ண­மாக வற்­றிக்­கா­ணப்­ப­டு­கின்­றது. இந்த நிலை­யில் அங்கு குப்­பை­கள் கொண்­டு­வந்து கொட்­டப்­ப­டு­கின்­றன.

இவை எதிர்­கா­லத்­தில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என்று கூறும் பெண் கடற்­றொ­ழி­லா­ளர்­கள், இத­னைத் தடுக்க கடற்­றொ­ழில் திணைக்­கள அதி­கா­ரி­கள், பிர­தேச சபை­யி­னர் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்று கோரிக்கை விடுக்­கின்­ற­னர்.

குறித்த கடல் நீர்­ஏ­ரி­யில் குமு­ழ­மு­னைப் பகு­தி­யைச் சேர்ந்த சுமார் 50 பெண் தலை­மைத்­து­வத்­தைக் கொண்ட பெண்­கள் இறால் பிடிப்­ப­தில் ஈடு­பட்டு தங்­கள் வாழ்­வா­தா­ரத்தை மேற்­கொண்டு வரு­கின்­றார்­கள்.

நாயாறு கடல் வற்­றிக் காணப்­ப­டு­வ­தால் குமு­ழ­ மு­னையை அண்­டிய கரை­யோ­ரப் பகு­தி­க­ளில் அதி­க­ள­வான குப்­பை­க­ளைக் கொண்­டு­வந்து கொட்­டு­கின்­ற­னர். இத­னால் எதிர்­கா­லத்­தில் கடற்­றொ­ழில் பாதிக்கப்­ப­டும் என்று மீனவ குடும்­பங்­கள் கவலை தெரி­வித்­துள்­ளன. சம்பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்­குப் பல­த­ட­வை­கள் தெரி­வித்­தும் எந்த­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­ வில்லை என்­றும் கவலை தெரி­விக்­கின்­ற­னர்.

தொடர்ச்­சி­யா­கக் கரை­யோ­ரப் பகு­தி­க­ளில் குப்பை கொட்­டு­வ­தால் இனி வரப்­போ­கும் மழை­கா­லத்­தில் கொட்­டப்­பட்ட கழி­வு­கள் நாயாற்றுப் பகு­தி­யில் கலப்­ப­தால் அதில் இறங்கி கைக­ளால் இறால்­பி­டித்து தொழில்­செய்­யும் தமக்­குப் பெரும் பாதிப்­பாக அமைந்­து­வி­டும் என்று பெண் கடற்­றொ­ழி­லா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கரை­யோ­ரப் பகு­தி­க­ளில் கொண்­டு­வந்து பனை மரங்­க­ளின் கழி­வு­கள் இரும்­புக் கம்­பி­கள், பீங்­கான்­கள், ஓடு­கள், உடைந்த போத்­தல்­கள் என்­பன அண்­மைய நாள்­க­ளா­கக் கொட்­டப்­பட்­டுள்­ளன. இவை கடு­மை­யான பாதிப்பை ஏற்­ப­டுத்­தக் கூடி­யவை. எனவே சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னர் இதைக் கவ­னத்­தில் எடுக்­க­வேண்­டும் என்று அவர்­கள் கோரிக்கை விடுக்­கின்­ற­னர்.

You might also like