நாவலரின் நினைவு தினத்தை கடைப்பிடித்த உறவுகள்!!

வவுனியா பூந்தோட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அமைக்கப்பட்ட ஆறுமுகநாவலரின் சிலையடியில் இன்று நினைவு தினம் கடைப்பிடி-க்கப்பட்டது.

இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட நகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆறுமுகநாவலரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் மலரஞ்சலியும் செலுத்தினர்.

இதன்போது தமிழருவி த. சிவகுமாரனால் ஆறுமுகநாவலர் தொடர்பான உரையும் இடம்பெற்றது.

நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறிவனர்களுக்கு அன்பளிப்பு பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

You might also like