நிய­திச் சட்­டம் இன்மையால் வடக்­கில் கடல்­வ­ளத்தை பாதுகாக்க முடி­ய­வில்லை

வடக்கு மாகாண சபைக்­கும் கொழும்பு அர­சுக்­கும் கடல் வளம் தொடர்­பாக இணைந்த அதி­கா­ரங்­கள் உள்­ளன. இந்த விட­யம் 13 ஆவது திருத்­தத் சட்­டத்­தி­லும் உள்­ளது.

ஆனால் வடக்கு மாகாண சபை­யில் கடல் வளம் மற்­றும் மீன்­பி­டிக்­கான நிய­திச் சட்­டம் ஒன்றை உரு­வாக்­காத கார­ணத்­தால் எம்­மால் எதை­யும் செய்ய முடி­யா­துள்­ளது என்­பதை ஒத்­துக்­கொள்­கி­றேன் என வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் சிவ­நே­சன் தெரி­வித்­தார்.

தேசிய மீனவ ஒத்­து­ழைப்பு இயக்­கத்­தின் ஏற்­பாட்­டில் இடம்­பெற்ற மீன் தொழி­லின் தற்­கால நிலை­மை­கள் மற்­றும் மீனவ வளங்­கள் முகா­மைத்­து­வம் தொடர்­பான வலய மட்ட மாநாடு யாழ்ப்­பாண ரில்கோ விருந்­தி­னர் விடு­தி­யில் நேற்று இடம்­பெற்­றது.

இதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகா­ணத்­தின் கடல் வளங்­க­ளைப் பற­வைகள் சர­ணா­ல­யம் என்ற பெய­ரில் தென்­னி­லங்கை அரசு சூறை­யாடி வரு­கின்­றது.

தென்­னி­லங்கை மீன­வர்­க­ளின் அத்­து­மீ­ற­லும் தொடர்ந்த வண்­ணமே உள்­ளன. அவர்­க­ளின் அத்­து­மீ­ற­லைத் தடுப்­ப­தற்கு உரிய சட்ட முறை இல்­லா­த­தால் இன்று வரை அவை தொடர்­பில் நட­வ­டிக்கை எடுக்க முடி­யா­துள்­ளது.

எமது கடல் வளத்­தில் அத்­து­மீ­றும் தென்­னி­லங்கை மீன­வர்­களை நாம் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­தா­லும் அவர்­கள் பக்­கச் சார்­பா­கச் செயற்­ப­டு­வ­து­டன் அதற்­கான சட்ட ஏற்­பா­டு­க­ளும் இல்லை எனக் கைவிரிக்­கின்­ற­னர்.

இவ்­வாறு அத்­து­மீ­றும் தென்­னி­லங்கை மீன­வர்­கள் உழவு இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்தி மீன் பிடிப்­ப­த­னால் எமது கடல் வளம் அழி­வ­து­டன் எமது மக்­க­ளும் பாதிப்­ப­டை­கின்­ற­னர்.

இந்த விட­யம் தொடர்­பாக நாட்­டின் சுற்­றா­டல் துறை அமைச்­ச­ரும் அரச தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­குக் கடி­தம் ஒன்றை அனுப்­பி­யி­ருந்­தேன்.

ஆனால் அவ­ரும் இந்த விட­யத்­தில் எம் மீது கரி­சனை காட்ட வில்லை. இவ்­வா­றன கையறு நிலைக்கு மாகாண சபை­யும் எமக்­கான நிய­திச் சட்­டம் ஒன்றை உரு­வாக்­கா­த­தும்­ஒரு கார­ணம் –என்­றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close