நிலைமாறு கால நீதியும்- ஈழத் தமிழ் மக்களும்!!

முத­லில் நிலை­மாறு கால நீதி என்­றால் என்ன என்று தெரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். ஐக்­கிய நாடு­கள் சபை­யின் வரை­வி­லக்­க­ணத்­தின்­படி ‘‘போரின் முடி­வில் இருந்து, அல்­லது கொடுங்­கோல் ஆட்சியொன்­றின் முடி­வில் இருந்து ஜன­நா­ய­கத்தை நோக்கிச் செல்­கின்ற இடைப்­பட்ட கால கட்­டமே நிலை­மாறுகால கட்­டம்’’ எனப்­ப­டு­கி­றது.

இந்தக்­கால கட்­டத்­தில் முன்­னைய கால கட்­டங்­க­ளில் நடந்த பாதிப்­பு­க­ளுக்­கான உண்­மையை கண்­ட­றி­தல், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நீதி­யைப் பெற்­றுக் கொடுத்­தல். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான இழப்­பீ­டு­களை வழங்­கு­தல், மீண்­டும் போர் ஒன்று உரு­வா­கா­மல் இருப்­ப­தற்­கான உரிய பொறி­மு­றையை உரு­வாக்­கு­தல் ஆகிய செயற்­பா­டு­களை மேற் கொள்­வ­தைக் குறிப்­பிட்­டுக் கூற இய­லும். இந்த நான்கு செயற்­பா­டு­க­ளுமே நிலை­மா­று­கால நீதி­யின் நான்கு தூண்­க­ளாகக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன.

உண்­மை­யைக் கண்­ட­றி­தல்
போரி­னால் பாதிக்­கப்­பட்ட பொது­மக்­கள், தாம் முகம் கொடுத்த அனைத்து மனித உரிமை மீறல்­கள், வன்­மு­றை­கள், உயி­ரி­ழப்­புக்­கள், உடமை இழப்­புக்­கள் மற்­றும் காணா­மல் போனோ­ரைப் பற்­றிய உண்­மை­க­ளைக் கண்­ட­றிய வாய்ப்பு ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தலை இது குறிக்­கும்.

போரி­னால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு
நீதி­யைப் பெற்­றுக் கொடுத்­தல்
போரின் போது மேற்­கொள்­ளப்­பட்ட மனித உரிமை மீறல்கள், மனி­தப் படு­கொ­லை­கள், சித்­தி­ர­வதைகள், பாலி­யல் வன்­பு­ணர்வுகள், காணா­மல் போதல்கள் உட்­பட்ட போர்க் குற்­றங்­கள் புரிந்­த­வர்­க­ளுக்­கெ­தி­ராக விசா­ரணை மேற்­கொண்டு குற்­ற­மி ழைத்­தோ­ருக் குத் தண்­டனை வழங்­கு­தல்.

போரி­னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான இழப்­பீடு
போரின்­போது பொது­மக்­க­ளுக்கு ஏற்­பட்ட உயிர், உடைமை, வாழ்­வா­தார இழப்­புக்­கள், உள­வி­யல் பாதிப்­புக்­கள் என்­ப­ன­வற்றை அடை­யா­ளம் கண்டு, அவற்றுக்கு இழப்­பீடு வழங்­கல். இத்­த­கைய இழப்­பீ­டு­கள் நிதி­யா­க­வும், பொரு­ளா­க­வும், உள­வி­யல் ரீதி­யா­ன­தா­க­வும் அமை­ய­லாம்.

மீண்­டும் போர் ஒன்று உரு­வா­கா­மல்
இருப்­ப­தற்­கான பொறி­முறை
நாட்­டில் நடை­மு­றை­யி­லுள்ள அர­ச­மைப்பு, சட்­டங்­கள் மற்­றும் கட்­ட­மைப்பு போன்­ற­வற்றை மறு பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்தி, போருக்­குக் கார­ண­மா­யி­ருந்­த­வற்றை அடை­யா­ளம் கண்டு கட்­ட­மைப்பு மாற்­றத்தை உரு­வாக்­கல். இலங்­கை­யில் பிர­யோகிக் கப்­ப­டும் நிலை­மாறு கால நீதி செயற்­பாட்­டில் மூன்று வகை­யான பங்­கு­பற்­று­னர்­கள் உள்­ள­னர். பாதிக்­கப்­பட்ட மக்­கள், இலங்கை அரசு, ஐக்­கிய நாடு­கள் சபை. என்பவையே அவை.

ஐ.நாசபை அமை­தியை நிலை நாட்­டு­வ­தற்கே கடும் முயற்சி எடுக்­கின்­றது. அதி­கா­ரப் பகிர்வு இல்­லா­மல் ஒற்­றை­யாட்சி நடை­முறை கடைக்­கொள்­ளப்­பட்டு வரும் இலங்­கை­யில், அமை­தியை எவ்­வாறு கட்­ட­ய­மைத்­தா­லும், அது நிலை­யற்­ற­தா­கவே இருக்­கும். அவர்­க­ளால் இலங்­கை­யின் உள்­மட்­டத்­தில் இலங்கை அரசு நடை­ மு­றைப்­ப­டுத்­தும் நிலை­மாறு கால நீதியை அர­சி­யல் ரீதி­யாக கட்­டுப்­ப­டுத்தி செயற்­ப­டுத்த முடி­ய­வில்லை.

இலங்­கை­யில் சிங்­கள பௌத்த மேலாண்­மையை அடிப்­ப­டை­யாக கொண்டே நிலை­மாறு கால நீதி செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. அதா­வது குற்­ற­மி­ழைத்த இரா­ணு­வத்­தி­ன­ருக்கோ, அதி­கா­ரி­க­ளுக்கோ எந்த நிலை­யி­லும் தண்­டனை வழங்க மாட்­டார்­கள். அர­ச­மைப்­பில் தமிழ் மக்­க­ளுக்கு சாத­க­மான சட்­டத் திருத்­தத்தைக் கொண்டு வர மாட்­டார்­கள். பௌத்த பீடங்­க­ளின் கட்­ட­ளைக்கு ஏற்­ற­வாறே இலங்கை அர­சாங்­கத்­தால் செயற்­பட முடி­யும்.

தமிழ் மக்­க­ளுக்கு இது
நிலை­மாறு கால­கட்­டமா?
சிங்­கள பௌத்த மேலாண்­மையை அடிப்­ப­டை­யாகக் கொண்ட இலங்கை அர­சி­டம் நீதி­யைப் பெற முடி­யாது. அதற்­குப் பௌத்த மேலா­திக்க பீடங்­க­ளும் ஒரு பொழு­தும் அனு­ம­திக்க போவ­தில்லை. ஆனால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்­கான நீதி, நிலை­மாறு கால நீதி­யின் விளை­வால் கிடைக்­கும் நிலை தான் தற்­பொ­ழுது காணப்­ப­டு­கின்­றது. இலங்கை அர­சினால் நிலை­மாறு கால நீதி சிறந்த முறை­யில் பயன்படுத்தப்­ப­டா­­த­தனால், தமிழ் மக்­க­ளின் நீதிக்­கான பாதை பெரும் போராட்­ட­மாக வெடிக்­கும் என்­பதே நிதர்­சன உண்மை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close