நேற்று -இன்று -நாளை!!

1 – நேற்று

முப்­பது ஆண்­டு­கள் தமிழ் மக்­களை அடக்கி ஆண்­ட­வர்­கள், சித்­தி­ர­வதை செய்­த­வர்­கள், தமிழ்த் தலை­வர்­க­ளைக் கொன்று புதைத்­த­வர்­கள், பேச்­சுச் சுதந்­தி­ரம் எழுத்­துச் சுதந்­தி­ரம் என்­ப­வற்றை மறுத்­த­வர்­கள், பாசிச ஆட்சி நடத்­தி­ய­வர்­கள் தொலைந்து அழிந்து ஒன்­பது ஆண்­டு­கள் ஆகி­விட்­டன என முக­நூ­லி­லும், சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் கொக்­க­ரித்து ஆனந்­தக்­கூத்­தா­டு­கி­றார்­கள் சிலர். அந்த அழிவை நடத்­திய மகிந்த ராஜ­பக்ச அர­சைப் போற்­றித் துதி­பா­டு­கி­றார்­கள்.

இன்று
சாதா­ரண தமிழ் மக்­கள் அன்று இருந்த நிலை­யில்­தான் தற்­போ­தும் உள்­ள­னர். பொருண்­மிய நிலை­யில் மாற்­றம் ஏற்­ப­ட­வில்லை. அவர்­க­ளின் அடிப்­படை வாழ்­வி­யல் கஸ்­ரங்­கள் அப்­ப­டி­யே­தான் உள்­ளன. தமிழ் மக்­க­ளின் காணி விடு­விப்பு, காணா­மல் ஆக்­கப்­பட்டவர்­க­ளைத் தேடும் போராட்­டம், விடு­தலை, அர­சி­யல் தீர்வு எல்­லாமே எட்­டாக்­க­னி­க­ளாகி எங்­கேயோ போய்­விட்­டன.
இந்த மக்­க­ளுக்கு, என்ன பதில் சொல்ல இந்த முக­நூல் வித்­து­வான்­கள் நினைக்­கி­றார்­கள்.

2 – நேற்று
புலிப் போரா­ளி­க­ளையோ, அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்­க­ளையோ, அல்­லது புலி வாசம் கொண்ட எந்த மனி­த­ரையோ தங்­கள் கட்­சிப் பக்­கம் சேர்த்­தா­லும் வேட்­பா­ளர்­க­ளா­கவோ, கட்­சி­யின் முக்­கிய பொறுப்­புக்­க­ளி­லேயோ அவர்­க­ளைச் சேர்க்க மாட்­டார்­கள், சேர்க்­கக்­கூ­டாத விச ஜந்­துக்­க­ளா­கவே அவர்­களை வைத்­தி­ருக்க விரும்­பு­கி­றார்­கள்.

இன்று
புலிப்­போ­ரா­ளி­கள் வேண்­டாம், அவர்­க­ளின் ஆத­ர­வா­ளர்­க­ளும் வேண்­டாம், ஆனால், அர­சி­யல்­கூட்­டங்­கள் வந்­தால், எழுச்­சிப்­பே­ர­ணி­கள் நடந்­தால், புலி­க­ளின் பரப்­பு­ரைப் பாடல்­கள் வேண்­டும். அந்­தப் பாடல்­களை ஒலி­பெ­ருக்­கிக் கொண்டு, கட்சி முக்­கி­யஸ்­தர்­க­ளும் தொண்­டர்­க­ளும் தலை நிமிர்ந்து நடப்­பார்­க­ளாம்!

தேர்­தல் வந்­தால், புலி­க­ளின் தலை­வ­ரின் பெயர்­வேண்­டும். தலை­வ­ரின் பெய­ரைச் சொல்­லிச் சொல்­லியே ஆயி­ரத்­தெட்­டுப் பரப்­பு­ரைக்­கூட்­டங்­களை முடித்­து­வி­டு­வார்­கள். வச­தி­யான பத­வி­கள், அவை­த­ரும் சுகங்­கள்­போ­லவே இந்த அர­சி­யல் தலை­வர்­க­ளுக்­குத் தேர்­த­லின்­பின் வாக்­க­ளித்த மக்­கள் எப்­படி அந்­நி­யப்­பட்­டுப்­போ­கி­றார்­களோ புலி­க­ளை­யும் அப்­ப­டியே பாவிக்­கி­றார்­கள்.

3 -நேற்று

போராட்ட ஆரம்ப காலத்­தில் அதைச் சாட்­டாக வைத்­துப் புலம்­பெ­யர்ந்த நாடு­க­ளுக்கு ஓடி ஒளித்­த­வர்­கள் ஏரா­ளம். அன்று தொடக்­கம் இன்­று­வரை செய்­வது புலி என்று பரப்­புரை. புலி­க­ளின் போராட்­டம் முடி­வ­டைந்த பின்­னர் தாம் தோண்டி எடுத்த சில விட­யங்­க­ளில் மயிர் பிடுங்­கிக்­கொண்­டி ­ருக்­கி­றார்­கள்.

இலக்­கி­யப் படைப்­பா­ளி­க­ளின் பங்கோ வேறு­வி­தம்.
நாடு நாடாய்ச் சுற்­று­வ­தும், நவீன இலக்­கி­யங்­கள் படைப்­ப­தா­கப் பாவனை பண்­ணு­வ­தும் பெண் சக­வா­சங்­க­ளு­டன் தண்­ணி­ய­டித்­துப்­போ­தை­யில் மூழ்­கு­வ­தும் எதை எழு­தி­னால் பிர­பல்­ய­ம­டை­ய­லாம் என்று தெளி­வாக முடி­வெ­ டுத்து புலி எதிர்ப்­புக் கதை­க­ளா­க­வும் நாவல்­க­ளா­க­வும் எழுதி புலம்­பெ­யர் இலக்­கி­யத்­தில் பிதா மகர்­க­ளா­கி­யி­ருக்­கின்­ற­னர்.

இன்று
சென்­னை­யில் நடந்த விருது வழங்­கும் விழா ஒன்­றில் ஒட்­டு­மொத்த ஈழ­மக்­கள் சார்­பா­கக் கேட்­கப்­பட்ட கேள்­விக்­குப் புலம்­பெ­யர் இலக்­கி­யப் படைப்­பாளி ஒரு­வர் பின்­வ­ரு­மாறு பதில் கூறி­யுள்­ளார், ‘‘ஈழத்­துத் தமிழ் மக்­கள் ஆயு­தப் பக்­கம் எதிர்­கா­லத்­தில் திரும்ப மாட்­டார்­கள்’’ என்றகருத்துப்பட அவர் உறு­தி­ய­ளித்­தார்.

போராட்­டம் உச்­ச­மான காலத்­தி­லும் அதற்­குப் பின்­ன­ரும் போராட்­டத்­துக்கு எதி­ரா­கக் கொம்பு சீவிய இவர்­போன்­ற­வர்­கள் எந்த அடிப்­ப­டை­யில் இவ்­வா­றான கருத்­துக்­க­ளைக்­கூற முடி ­யும்…?
தமிழ் மண்­ணில் குறிப்­பா­கப்­போர் உச்­சம்­பெற்ற வன்­னி­யில் சாதா­ரண தமிழ் மக்­கள் அனு­ப­வித்த எந்­தத் துய­ரத்­தை­யும் அனு­ப­வித்­துப்­பார்க்காத இவர்­கள் போன்ற புலம்­பெ­யர் படைப்­பா­ளி­கள் எந்த உரி­மை­யில் தமிழ்­மக்­க­ளுக்­கான கருத்­தைக்­கூற முடி­யும்? கேள்வி கேட்­ட­வர்­க­ளும் முட்­டாள்­களா? பதில் சொன்­ன­வர் முட்­டாளா?

4 -நேற்று
போராட்­டம் உச்­ச­மாக இருந்­த­போது யாழ்ப்­பா­ணத்­தில் தமிழ்ப் பு­கழ்­பாடி தமிழை வளர்க்க முடி­யா­த­வர்­கள் போராட்ட கால வாழ்­வுக்­கஸ்­ரங்­களை அனு­ப­விக்­கப் பயந்து கொழும்­புக்கு ஓடி­ய­வர்­கள், தங்­கள் ‘தமிழ்’ வளர்ப்­புக்­குப் புலி­கள் தடை­யாக உள்­ள­னர் என்று கதை பரப்பி கொழும்­பில் தமது தமிழ்ச் சாம்­ரா­ஜ்ஜியத்தை அல்ல பொரு­ளா­தார சாம்­ராஜ்ஜியத்தை நிறுவினார்கள்.

அர­ச த­லை­வர்­க­ளை­யும் அவர்­தம் கையாள்க­ளை­யும் அடக்­கு­மு­றையை மேற்­கொண்ட அரச அதி­கா­ரி­க­ளை­யும் இது­போன்ற விற்­பன்­னர்­கள் தொழுது வணங்கித் தங்­கள் தமிழ் விழாக்­க­ ளுக்கு அழைத்­துத் தமிழை வளர்த்­தார்­களோ இல்­லையோ தம்மை வளர்்த்துக்­கொண்­டார்­கள்.

இன்று
இப்­போ­தும் பணம் பெற்­றுக்­கொண்டே பிர­மு­கர்­க­ளைக் குத்து வி­ளக்­கேற்ற அனு­ம­திக்­கி­றார்­கள். அல்­லது வரு­டத்­தில் எவ்­வ­ளவு பணம் தரு­வீர்­கள் என்­று­ பே­ரம் பேசு­கி­றார்­கள். போராட்­டம் முடி­வுக்கு வந்­த­ பின்­னர், எல்­லோ­ரும் புலிக் கதை­கள் கதைத்­துப் பிர­ப­ல­ம­டை­வ­தப்­போல தாங்­க­ளும் யாழ்ப்­பா­ணத்­தில் இருந்­த­போது புலி­க­ளு­டன் இரண்­ட­றக் கலந்­தி­ருந்­த­தா­க­வும் புல­னாய்­வுத் துறை­யு­டன் உண்டு பசி­யாறி ஆனந்­தப்­பட்­ட­தா­கவும் கதை­ய­ளந்து மகிழ்ந்து மகிழ்­விக்­கி­றார்­கள்.

5 -நேற்று
விடு­த­லைப்­போ­ராட்ட காலத்­தில் சஞ்­சிகை நடத்தி, அர­சி­யல் கதைக்­க­மாட்­டோம் எனக் கறுத்த அட்­டைப்­ப­டம் போட்­டுக் கருத்து எழு­தி­ய­வர் கொழும்பு சென்று பேரா­சி­ய­ரின் புனைப்­பெ­ய­ரில் கவி­ஞர் புதுவை இரத்­தி­ன­துரை உட்­பட போராட்­டத்­துக்­குப் பின்­னால் நின்ற இலக்­கி­யப் படைப்­பா­ளி­களை வறுத்­தெ­டுத்து இன்­பம் கண்­டார்.

இன்று
திடு­மென அந்த மாற்­றம் நடந்­தது. ‘‘யூனி­போம்’’ போடாத புலிப்­போ­ரா­ளி ­யாக மாறிய அவர் இப்­போது புலி­சார்ந்து பேசு­வ­தும் எழு­து­வ­து­மா­கப் பொங்­கிச் சரி­கி­றார். எல்­லா­வற்­றுக்­கும் உச்­ச­மாக அவ­ர­டித்த ‘கப்சா’ ஒன்று மிகப் பிர­ப­ல­மா­னது.

வன்­னி­யில் பொது­மக்­கள் பாவ­னை­யி­லு­மி­ருந்த ‘‘அந்­தி­வா­னம்’’ பதிப்­ப­கத்­தில் அவ­ரு­டைய நண்­ப­ரான கவி­ஞர் ஒரு­வ­ரின் வடி­வ­மைப்­பில் வெளி­யி­டப்­பட்ட அவ­ரது நூலை ‘‘கிளி­நொச்­சி­யில் மரங்­கள் அடர்ந்த பகு­திக்­குள் எதி­ரி­கள் கண்ணுக்குப் படா­மல் பிர­பா­க­ர­னின் நேர­டி­ மேற்­பர்­வை­யில் இர­க­சி­ய­மாக அச்­ச­கம் இயங்­கிக் கொண்­டி­ருந்­த­தைப்பார்த்­தேன். என் புத்­த­கங்­கள் அச்­சிட்டு அங்கு அடுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்­த­தைப் பார்த்­துப் புழ­காங்­கி­தம் அடைந்­தேன்’’ என்று தமி­ழக சஞ்­சிகை ஒன்­றுக்­குப் பேட்­டி­ய­ளித்துக் கதை­பண்­ணி­யுள்­ளார் அந்­தப் படைப்­பாளி.

6 -நேற்று
விடு­த­லைப்­போ­ராட்ட காலத்­தில் இயக்­கத்­தில் பல அமைப்­புக்­க­ளில் முன்­ன­ணிப் பத­வி­க­ளில் எப்­போ­தெல்­லாம் அம­ர­வேண்­டுமோ, யாரி­டம் தய­வைப் பெற்று அதைச் செய்­ய­லாமோ, அந்த வேலையை ஒழுங்­கா­கச் செய்த அவர், ஆள்க­ளைச் சேர்த்து வைத்­துக் கருத்­துக்­க­ளை­யும் அள்ளி வீசு­வார். போராட்ட இறு­திக்­கா­லத்­தில் கடை­சி­யாக அவர் தேடிச்­சென்ற இடம் ‘சற்­லைற் போன்’ வ­சதி கொண்ட அந்­தப் பிரி­வு­தான். சாதா­ரண தொலை­பேசி வச­தி­கள் கேள்­விக்­கு­ரி­தான அந்­தக் காலத்­தில் ‘சற்­லைற் போன்’ வசதி அவ­ருக்கு எப்­படி உதவி செய்­தி­ருக்­கும்? என்று யோசித்­துப் பாருங்­கள்.

இன்று
இப்­போ­தும் புதுப் புது அவ­தா­ரங்­களை மாற்றி நிகழ்­கா­லத்­தை­விட புலி­க­ளின் காலத்­தில் நடந்த தவ­று­க­ளைச் சுட்­டிக்­காட்டி விமர்­சிக்­கும் மூன்­றாம் தரப்­பாக நின்று கருத்­து­மழை பொழி­யும் அவருடைய வல்­ல­மையை என்­ன­வென்று சொல்­வது?

நாளை
நாளை எப்­படி இருக்­கும்? யாரா­வது யோசிப்­பது உண்டா? தமிழ்ப் பகு­தி­கள் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளால் சுருங்கி வரு­வ­து­பற்­றியோ புதிது புதி­தா­கப் புத்­தர் சிலை­கள், இரா­ணுவ முகாம்­கள் அமைக்­கப்­பட்டு வரு­வ­தையோ கல்வி நட­வ­டிக்­கை­க­ளில் முன்­பள்­ளி­க­ளில் நடப்­ப­தைப்­போல இரா­ணு­வத் தலை­யீ­டு­கள் ஏற்­ப­டு­வ­தைப் பற்­றியோ யாழ்.நக­ரங்­கள் போன்ற இடங்­கள் சிங்­க­ளக் கலா­சா­ரங்­க­ளுக்கு மாறி அது ஒரு இயல்­பான நட­வ­டிக்­கை­யாக மாற்­றப்­ப­டு­வ­து­தொ­டர்­பிலோ யார் கவ­லைப்­ப­டப்­போ­கி­றார்­கள்?

பத­வி­க­ளுக்­காகக் கட்சி அர­சி­யலை நடத்தித் தேர்­த­லில் வென்று அதன்­பின்­னர் கிடைக்­கும் பத­விச் சுகங்­க­ளுக்­கா­கத் தேர்­தல் காலத்­தில் எதிர்த்த கட்­சி­க­ளின் தோளில் கைபோட்டுச் சனங்­க­ளைக் குழப்­பும் இந்த அர­சி­யல்வாதி­கள்­தான் நாளை தமிழ் மக்­க­ளுக்கு அர­சி­யல் தீர்வு வந்­து­வி­டும் என்று நேற்­றும் சொன்­னார்­கள். இன்­றும் சொல்­லு­கி­றார்­கள். நாளை­யும் சொல்­வார்­கள். ஈழத்­துத் தமிழ் மக்­க­ளைப் பொறுத்­த­வரை நாளை என்­பது ஒரு கேள்­விக்­கு­றி­தான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close