படகும் வலையும் விசமிகளால் எாிப்பு

யாழ்ப்­பா­ணம் வட­ம­ராட்சி கிழக்கு அம்­பன் கொட்­டோடை பகு­தி­யில் விச­மி­க­ளால் மீன்பிடி படகு மற்­றும் கடற்­றொ­ழில் வலை­கள் நேற்று முன்­தி­னம் பகல்­வே­ளை­யில் இனந்­தெ­ரி­யாத விச­மி­க­ளால் தீவைத்து எரிக்­கப்பட்­டுள்­ளன.

வட­ம­ராட்சி அம்­பன் பகு­தி­யில் தொழி­லுக்­குச் சென்று விட்டு கரை­யில் வைத்­தி­ருந்த படகே இவ்­வாறு தீயிட்­டு எரிக்­கப்­பட்­டுள்­ளது. பகல் 3 மணி­ய­ள­வில் தீ வைத்த சம­யம் அந்தப் பகு­தி­யில் ஆடு மேய்த்­துக்­கொண்­டி­ருந்த முதி­ய­வர் ஒரு­வரே அவ­தா­னித்து தக­வல் தெரி­வித்­துள்­ளார். இதன்­போது சுரேந்­தி­ர­ ரா­ஜா என்­னும் மீன­வ­ரின் படகே தீயில் எரிந்து நாச­மா­கி­யுள்­ளது.

படகு எரிந்­து­கொண்­டி­ருந்த சம­யம் பட­கில் பற்­றிய தீ, அரு­கில் அடுக்கி வைத்­தி­ருந்த வலை­க­ளில் பர­வா­மல் தடுப்­ப­தற்­காக ஆடு­மேய்த்த முதி­ய­வர் பகு­தி­யில் இருந்து வலை­களை அப்­பு­றப்­ப­டுத்­தி­ யுள்­ளார். குறித்த சம்­ப­வம் தொடர்­பில் பிர­தேச செய­ ல­கம், நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளம் மற்­றும் பொலிஸ் நிலை­யம் ஆகி­ய­வற்­றில் முறை­யி­டப்­பட் டுள்­ளது.

 

You might also like