பதவியேற்றார் மோடி!!

இந்தியாவின் தலைமை அமைச்சராக மீண்டும் நேற்றுப் பதவியேற்றார் மோடி.

குடியரசுத் தலைவர் மாளிகையில் உலகத் தலைவர்களின் பங்கேற்றலுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

17ஆவது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 303 தொகுதிகளைக் கைப்பற்றி மகத்தான வெற்றிபெற்றது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனித்து ஆட்சியை அமைக்கும் தகுதியைப் பெற்றபோதிலும் கூட்டணி அமைத்ததைப்போன்று இம்முறையும் அந்தக் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

இதன் பதவியேற்பு விழா இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது. இலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உலகத் தலைவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் முன்னிலையில் மோடி பதவியேற்றார். தொடர்ந்து மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.

You might also like