பன்­னாட்­டுச் சமூ­கம் ஆத­ரவு தருமா?

அமெ­ரிக்க நாடா­ளு­மன்­ற­மான காங்­கி­ரஸ் உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட குழு ஒன்று, காங்­கி­ரஸ் மான் மக்­கி­லே­னென் தொன்­பெர்ரி தலை­மை­யில் இலங்கை வந்­துள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க் கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனை அந்­தக் குழு­வின் உறுப்­பி­னர்­கள் நேற்­றுச் சந்தித்­துப் பேசி­னர்.

இந்­தச் சந்­திப்­பில் சம்­பந்­தன் கூறி­யுள்ள சில கருத்­துக்­கள் ஆழ­மா­னவை. நாட்­டின் தற்­போ­தைய நிலையை, யதார்த்­தத்தை வெளிப்­ப­டுத்­து­ பவை. அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காண­வேண்­டு­மெ­னில், அரச தலை­வ­ரும் தலைமை அமைச்­ச­ரும் சேர்ந்து பய­ணிக்­க­வேண்­டும்.

ஒரு புதிய அர­ச­மைப்­பின் தேவை­யை­யும் அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய நன்­மை­க­ளை­யும் சிங்­கள மக்­கள் மத்­தி­யில் கொண்டு செல்­லா­மல் இருப்­பது முக்­கிய பிரச்­சினை.

அனைத்து மக்­க­ளை­யும் நியா­ய­மா­க­வும் சமத்­து­வ­மா­க­வும் நோக்­க­வேண்­டிய சிங்­க­ளத் தலை­வர்­க­ளில் சிலர் , கடும் போக்­கா­ளர்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தி­லேயே குறி­யாக இருக்­கி­றார்­கள்.

குறிப்­பிட்ட கால எல்­லைக்­குள் புதிய அர­ச­மைப்­புப் பணி­கள் இடம்­பெ­றா­விட்­டால் தமிழ் மக்­க­ளும் கூட்­ட­மைப்­ பின­ரும் தமது நிலைப்­பாட்டை மீளாய்வு செய்ய நிர்ப்­பந்­தி க் கப்­ப­டு­வார்­கள்.

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தைக் கொழும்பு முழு­மை­யாக நிறை­வேற்­றா­த­போது, தமிழ் மக்­க­ளின் பாது­காப்­பை­யும் மீள நிக­ழா­மை­யை­யும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் அணு­கு­முறை எப்­படி இருக்­கும் என்­பதை அது தெளி­வு­ப­டுத்த வேண்­டும்.

ஆகிய ஐந்து முக்­கிய விட­யங்­க­ளை­யும் சம்­பந்­தன் அமெ­ரிக்­கக் குழு­வி­ன­ருக்கு எடுத்­து­ரைத்­தார். இதன் மூலம் அவர் இலங்­கை­யின் இன்­றைய அர­சி­யல் யதார்த்­தத்­தைப் புட்­டுப்­புட்டு வைத்­துள்­ளார்.

அரச தலை­வ­ருக்­கும் தலைமை அமைச்­ச­ருக்­கும் இடை­யில் ஒத்­தி­சை­வில்லை, அவர்­கள் தமக்­குள் முர ண்பட்­டுக் கொண்டு நிற்­கின்­ற­னர், புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான உண்­மை­யான நோக்­க­மும், ஆர்­வ­மும் கொழும்­பி­ட­மும், அதன் அர­சி­யல்­வா­தி­க­ளி­ட­மும் இல்லை.

வாக்­கு­க­ளுக்­கா­கச் சிங்­க­ளக் கடும்­போக்­கா­ளர்­க­ளின் பின்­னால் செல்­வ­தில் அர­சி­யல்­வா­தி­கள் குறி­யாக இருக்­கி­றார்­களே தவிர சிறு­பான்மை மக்­க­ளை­யும் சமத்­து­வ­மாக நடத்­து­வ­தற்கு முன்­வ­ரு­கி­றார்­கள் இல்லை, நில­மை­கள் இப்­ப­டியே தொடர்ந்­தால் தமி­ழர்­க­ளும் இன்­றி­ருக்­கும் நிலைப்­பாட்­டில் இருந்து விலகி நடக்க நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­வார்­கள், அப்­ப­டிப்­பட்­ட­தொரு நிலை­ யில் தமி­ழர்­க­ளைப் பாது­காக்­க­வும் அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக இருக்­க­வும் பன்­னாட்­டுச் சமூ­கம் என்ன செய்­யப்­போ­கி­றது?

இதுவே சம்­பந்­தர் கூற­வி­ளைந்­தி­ருப்­பது. சுருங்­கச் சொன்­னால் இங்கே நில­மை­கள் ஒன்­றும் சரி­யில்லை, நாங்­கள் மீண்­டும் போரா­டு­வ­தைத் தவிர வேறு­வ­ழி­யில்லை, அப்­போது கடந்த காலத்­தைப் போலல்­லா­மல் பன்­னாட்­டுச் சமூ­கம் எங்­க­ளு­டன் கூட நிற்­க­வேண்­டும் என்­ப­தையே சம்­பந்­தன் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றார் என்று கொள்­ள­லாம்.

பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­டம் குறிப்­பாக, அமெ­ரிக்­கா­வி­டம் அத­னைச் சொல்­வ­தற்­கான முழு உரித்­தும் சம்­பந்­த­னுக்கு இருக்­கி­றது. தமி­ழர்­க­ளுக்கு ஒரு தீர்வு கிடைப்­ப­தற்கு அமெ­ரிக்கா உள்­ளிட்ட பன்­னாட்­டுச் சமூ­கம் உத­வும் என்­கிற நம்­பிக்­கை­யில், சொந்த மக்­க­ளின் ஆத­ர­வையே இழக்­கும் நிலை வந்­த­போ­தும், தனி­நாட்­டுக் கோரிக்­கையை முற்­றா­கக் கைவிட்டு பிள­வு­ப­டாத ,பிரிக்­கப்­ப­ட­மு­டி­யாத ஒரு­மித்த நாட்­டுக்­குள் தீர்வு என்­ப­தைத் தூக்­கிப்­பி­டித்து, தனி­நாட்­டுக் கோரிக்­கையை விடாப்­பி­டி­யாக முன்­வைத்த விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தி­லி­ருந்து கூட்­ட­மைப்பை தூர விலக்கி என்று, கடந்த மூன்­றாண்­டு­க­ளா­கப் பன்­னாட்­டுச் சமூ­கத்­தைத் திருப்­திப்­ப­டுத்தி அதன் நம்­பிக்­கை­யைப் பெறப் போரா­டி­ய­வர் சம்­பந்­தன்.

எனவே இத்­தனை ஆண்­டு­கால முயற்­சி­யின் பயனை இப்­போது அறு­வடை செய்ய முயற்­சிக்­கி­றார் சம்­பந்­தன். பன்­னாட்­டுச் சமூ­கம் அவ­ருக்­குச் சார்­பாக இருக்­குமா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close