பருவச்சீட்டுப் பெறப்படும் பாடு!!

இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் பரு­வச் சீட்டு வழங்­கும் அலு­வ­ல­கம் யாழ்ப்­பாண நக­ரின் மத்­தி­யில் இருக்­கின்­றது. சின்­னக் கட்­ட­டத்­தில் ஆறு தொடக்­கம் ஏழு பணி­யா­ளர்­கள் பணி­யாற்­று­கின்­ற­னர்.

வார நாள்­க­ளில் யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­க­ழக மாண­வர்­கள், தொழில்­நுட்­பக் கல்­லூரி மாண­வர்­கள், அரச ஊழி­யர்­கள் பரு­வச் சீட்­டுப் பெற்­றுக் கொள்ள பெரு­ம­ள­வில் வரு­கின்­ற­னர்.

ஒவ்­வொரு தரப்­பி­ன­ருக்­கும் பரு­வச்­சீட்டு வழங்க ஒவ்­வொரு பணி­யா­ளர்­கள் இருக்­கின்­ற­னர். மாண­வர்­க­ளுக்கு பரு­வச் சீட்டு வழங்­கும் பணி­யா­ளர்­கள் நடந்து கொள்­ளும் விதம் மன­துக்கு வேத­னை­யாக இருக்­கின்­றது. மாண­வர்­களை ஒரு­மை­யில் அழைப்­ப­தும், காக்க வைப்­ப­தும், பெயர்ப் பட்­டி­ய­லைத் தேட ஆரம்­பிக்­கும் முன்பே, ‘அது­கூ­டப் பார்க்­கத் தெரி­யாம கம்­பஸ் போய் நீ என்ன கிளிக்­கி­றாய்’ என்று கேட்­ப­தும், மனதை நெரு­டு­கின்­றது.

மாண­வர்­க­ளு­டன் கண்­ணி­யத்­து­டன் அவர்­கள் நடந்து கொள்­ள­வேண்­டும் என்­ப­து­தான் எதிர்­பார்ப்பு. வேலைச் சுமைக்கு மத்­தி­யில் பணி­யாற்­றும் அவர்­கள், மாண­வர்­க­ளின் மனம் கோணா­த­வாறு எதிர்­கா­லத்­தில் நடக்­க­வேண்­டும்.

You might also like