பளுதூக்கலில் 4 ஆவது தடவையாகவும் சாதனை!!

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை பளுதூக்கலில் 4 ஆவது தடவையாகவும் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது.

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களுக்காக பளுதூக்கல் போட்டி கந்தரோடை வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் பாசையூர் புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை முதலாம் இடத்தையும், முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகா வித்தியாலயம் 2 ஆம் இடத்தையும் இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயம் 3 ஆம் இடத்தையும் பெற்றன.

You might also like