பாகு­பா­டு­க­ளால் மழுங்­க­டிக்­கப்­ப­டும்- மக்களாட்சி!!

மார்ச் மாதம் 21 ஆம் திகதி பன்­னாட்டு இனப் பாகு­பாட்டு எதிர்ப்­புத் தின­மா­கும். தேர்­தல் ஆணைக்­குழு, இத்­த­கைய முக்­கிய தினங்­களை தேர்­தல் மற்­றும் வாக்­கு­ரி­மை­யு­டன் தொடர்­பு­டைய வகை­யில் கொண்­டா­டு­கின்­றது. சுதந்­தி­ர­மா­ன­தும் நியா­ய­மா­ன­து­மான தேர்­தல்­களை நடாத்­து­வ­து­டன் இன­ரீ­தி­யான பாகு­பாடு எவ்­வாறு தொடர்­பு­ப­டு­கின்­றது என்று இப்­போ­தும் சிலர் சந்­தே­கின்­ற­னர். ‘அதி­கா­ரம் மக்­க­ளி­டம் உள்­ளது. நாங்­கள் அர­ சி­யல் பேசு­கி­றோம்’ என்ற டுபாக் சகூ­ரின் கூற்றை இங்கு மேற்­கோள் காட்­டு­வது பொருத்­த­மா­னது. எமது ஆட்­சி­யா­ளர்­கள் காட்­டும் பாகு­பா­டு­களை நாங்­கள் அனை­வ­ரும் எதிர்க்க வேண்­டும்.

பண-­–அ­தி­கா­ரப் பார­பட்­சம்
குறை­வாக பணம் செல­வி­டும் வேட்­பா­ளர்­க­ளுக்கு பிர­தி­கூ­லங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தன் மூலம் தேர்­தல்­க­ளில் பணம் தவ­றான ஆதிக்­கத்­துக்கு அல்­லது அதி­கா­ரத்­துக்கு கார­ண­மாக அமை­கின்­றது என்று தேர்­தல் ஆணைக்­குழு கரு­து­கின்­றது. நாங்­கள் பரப்­பு­ரைக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டும் நிதியை மட்­டுப்­ப­டுத்­தும் ஒரு புதிய சட்­ட­வ­ரை­வின் ஊடாக, அர­சி­ய­லில் பண – அதி­கா­ரத் தொடர்­பைக் கட்­டுப்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றோம். நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­பட முன்­னர் அமைச்­ச­ர­வை­யின் அனு­ம­திக்­காக சட்டவரைபு அனுப்­பப்­பட்­டுள்­ளது.

பண–அதி­கார அர­சி­ய­லா­னது 1931 ஆம் ஆண்­டின் டொன­மூர் மறு­சீ­ர­மைப்­புக்­களை விடப் பழைமை வாய்ந்­த­தா­கும். 1879 ஆம் ஆண்­டில், மகா­தே­சா­தி­பதி எமது பிர­தி­நி­தி­களை நிய­மித்­தார். குமாரி ஜய­வர்­தன, ‘எல்­லாக் காலத்­தி­லும் சிறந்த இலங்­கை­யர்’ என்று டி.ஸ்.சேனா­நா­யக்­க­வால் வர்­ணிக்­கப்­பட்ட சேர் பொன்­னம்­ப­லம் இரா­ம­நா­தன் அவர்­களை அப்­போ­தைய பிரிட்­டன் மகா­தே­சா­தி­பதி ஏன் விரும்­பி­னார் என்று விளக்­கு­கின்­றார். இரா­ம­நா­த­னின் குடும்­பத்­தி­னர், தண்­ட­னை­யாக பிரிட்­ட­னுக்கு திருப்பி அனுப்­பப்­பட்ட மகா­தே­சா­தி­ப­தி­க­ளுக்­கும் கால­னித்­து­வச் செய­லர்­க­ளுக்­கும் தவ­றான முறை­யில் கடன் வழங்­கி­ய­தன் மூலம் சட்ட சபை­யில் அவ­ருக்­கான ஆச­னத்தை விலைக்கு வாங்­கி­னார்.

சாதிப் பாகு­பாடு
டொன­மூர் மறு­சீ­ர­மைப்பு இருந்த போதி­லும் வன்­முறை கொண்ட சாதிப் பாகு­பாட்­டின் ஊடாக வாக்­க­ளிப்­ப­தற்­கான உரிமை இழக்­கப்­ப­டு­வ­தும் எமது மக்­க­ளாட்­சியை (ஜன­நா­ய­கத்தை) பாழ­டிக்­கச் செய்­கி­றது. தனிப்­பட்ட மற்­றும் சமு­தாய அடை­யா­ளங்­க­ளின் அடிப்­படை மட்­டங்­க­ளில் சாதிப் பாகு­பா­டா­னது, ஒடுக்­கப்­பட்ட சாதி­க­ளின் அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கான சம­னான தேர்­தல்­உ­ரி­மை­கள் மறுக்­கப்­ப­டக் கார­ண­மாக அமை­கின்­றன.

1936 ஆம் ஆண்­டின் தேர்­தல்­க­ளைப் பற்­றிக் கூறும் நீரா விக்­ர­ம­சிங்ஹ, தன்னை எதிர்த்­துப் போட்­டி­யி­டு­ப­வ­ரின் உற­வி­னர்­க­ளான சாதித் தலை­வர்­கள், மிரட்­டல்­களை, அச்­சு­றுத்­தல்­களை மற்­றும் தாக்­கு­தல்­களை கையாண்­ட­தாக ஒடுக்­கப்­பட்ட சாதி­க­ளைச் சேர்ந்­த­வர்­களை அதி­க­ள­வில் கொண்­டி­ருந்த கேகாலை தொகு­தி­யின் வேட்­பா­ளர் குற்­றம் சாட்­டி­ய­தா­கக் கூறு­கி­றார். இதே குற்­றச்­சாட்­டுக்­கள் அதற்கு அய­லில் உள்ள தெடி­கமை தேர்­தல் தொகு­தி­யி­லும் முன்­வைக்­கப்­பட்­டன.

அதி­கா­ரத் திரட்­சி­யி­லி­ருந்து
தமி­ழர்­களை ஒழித்தல்
விக்­கி­ர­ம­சிங்ஹ மேலும் கூறு­கை­யில், 1936 ஆம் ஆண்­டின் தேர்­தல்­கள் ஒட்­டு­மொத்­த­மாக சிங்­க­ள-­–பௌத்த அர­சி­யல்­வா­தி­கள் மீள அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிய நிகழ்­வாக அமைந்­தது என்­கி­ றார். சுதந்­தி­ரத்­துக்­குப் பிந்­திய இலங்­கை­யில் வழ­மை­யாக வாக்­க­ளித்து வந்த மலை­நாட்­டுத் தமி­ழர்­க­ளின் குடி­யு­ரிமை பறிக்­கப்­பட்­டது. தேர்­தல் தொகு­தி­க­ளின் எண்­ணிக்கை கணிக்­கப்­பட்­ட­தன் பின்­ன­ரும் அவர்­க­ளு­டையை சனத்­தொ­கை­யைப் பயன்­ப­டுத்­தி­னர். அதன் மூலம் அவர்­கள் மத்­தி­யி­லி­ருந்து சிறு­பான்­மைச் சிங்­க­ள­வர்­கள் தெரி­வு­செய்­யப்­ப­டு­வதை அனு­ம­தித்­த­னர்.

அச்­சு­றுத்­தல்
1990ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை­யில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அச்­சு­றுத்­தல் மூலம் வடக்கு கிழக்­கி­லுள்ள தமிழ் சமு­தா­யத்­தின் வாக்­கு­ரி­மை­யைப் பறித்­த­னர். அது அர­சுக்­குப் பொருத்­த­மா­ன­தாக இருந்­தது. ஏனெ­னில் அது 10 இற்­கும் குறை­வான வாக்­கு­கள் மூலம் தகு­தி­யற்ற கைக்­கூ­லி­கள் உறுப்­பி­னர்­க­ளாத் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்­கும் அமைச்­ச­ர­வை­யில் அமர்­வ­தற்­கும் கார­ண­மாக அமைந்­த­து­டன் அதன் மூலம் அரசு, தாங்­கள் தேசிய ரீதி­யா­ன­ வர்­கள் என்று கூறிக்­கொள்­வ­தற்­கும் வாய்ப்­ப­ளித்­தது. இந்த நகைப்­புக்­கு­ரிய முடி­வு­க­ளைச் சான்­றுப்­ப­டுத்­து­வது பாது­காப்­பா­னது என்று அப்­போ­தைய தேர்­தல் திணைக்­க­ளம் கரு­தி­யது. இது பற்றி வின­விய போது, எழுத்து மூல­மான முறைப்­பா­டு­கள் எது­வும் கிடைக்­க­வில்லை, என்று எனக்­குக் கூறப்­பட்­டது.

காப்­பாற்­றல்
இந்­தச் சுரண்­டல்­கள் மூலம் திருப்­தி­ய­டை­யாத அரச சாத­னங்­கள், தொடர்ச்­சி­யான முறை­யில் தமி­ழர்­களை ஒழிப்­ப­தற்கு முயற்­சிக்­கின்­றன. நல்­லி­ணக்­கத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி குற்­றங்­க­ளைப் புரிந்­த­வர்­களைப் – போரா­ளி­கள் அல்­லாத தமி­ழர்­க­ளைக் கொலை செய்த அரச படை­யி­னரை – விசா­ரணை செய்­வது என்ற ஐக்­கிய நாடு­கள் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வுக்­கான வாக்­கு­று­தி­கள் – பன்­னாட்­டுச் சமூ­கத்தால் நடாத்­தப்­பட முடி­யு­மான உட­ன­டி­யான போர்க் குற்ற விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து காப்­பாற்­று­வ­தற்­குப் போது­மா­ன­வை­யாக இருந்­தன. எந்­த­வொரு இரா­ணு­வத்­தி­ன­ரும் தண்­டிக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்று கூறி ஐக்­கிய நாடு­கள் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வின் 30/1 தீர்­மா­னத்­தி­லி­ருந்து மீளப் பெறப் போவ­தாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால அச்­சு­றுத்­தல் விடுப்­ப­தா­னது அது ஒரு கேளிக்­கூத்து என்­ப­தைக் காட்­டு­கின்­றது.
-(தொடரும்)

You might also like