பாலத்துக்கு அருகே பெரும் தீ விபத்து!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஹௌவுரா பாலம் அருகே கெமிக்கல் குடோன் ஒன்றில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது.

இன்று அதிகாலை ஏற்பட்ட தீ மளமளவென பரவி, கொழுந்து விட்டு எரிந்ததில், ஹௌவுரா பாலம் அருகே வானாளவ கரும்புகை எழுந்தது.

தீ விபத்து குறித்து தகவலறிந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதையடுத்து பலமணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீவிபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாத நிலையில், பொருள்சேதம் குறித்து இன்னும் கணக்கிடப்படவில்லை. மேலும் தீவிபத்துக்கான காரணம் குறித்தும் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like