side Add

பிடியைத் தளர விடலாமா?

இலங்­கை­யின் அர­சி­யல் குழப்­பத்­துக்­கான தீர்­வைக் காண்­பது அல்­லது அத­னைச் சுமு­க­மாக முடித்­துக்­கொள்­வது குறித்த பேச்­சுக்­கள் கடந்த சில தினங்­க­ளா­கக் கொழும்­பில் நடந்து வரு­கின்­றன.

இந்­தக் குழப்­பம் அல்­லது இழு­ப­றி­யில் தீர்­மா­ன­க­ர­மான சக்­தி­யாக மேலெ­ழுந்து நிற்­கும் தரப்பு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு என்ற ரீதி­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் ரணில் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யி­னர் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் பேச்சு நடத்­தி­யுள்­ள­னர்.

இந்­தப் பேச்­சுக்­க­ளின் முக்­கிய இலக்கு தற்­போ­தைய அர­சி­யல் நெருக்­க­டிக்­குத் தீர்வு காண்­பது மட்­டும் என்­ப­தாக இருப்­பது தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் மிக­வும் வருத்­தத்­துக்­கு­ரி­யது; கண்­ட­னத்­துக்­கு­ரி­யது.

நடந்­தப்­பட்ட பேச்­சுக்­க­ளில் மீண்­டும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் ஆட்­சி­யைக் கொண்டு வரு­வ­தற்­கான நகர்­வு­க­ளில் கூட்­ட­மைப்பு ஈடு­பட்­டது. மக்­க­ளாட்­சி­யின் மாண்­பைக் காக்­கும் தனது கட­மை­யின்­படி அத­னைச் செய்­வ­தா­கக் கூட்­ட­மைப்பு கூறிக்­கொண்­டது.

தனது அந்­தக் கட­மைக்­குப் பதி­லீ­டா­கப் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம், அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை, காணி விடு­விப்பு, அபி­வி­ருத்தி என்­ப­வற்றை அது நிபந்­த­னை­யாக வைத்­தது.

இந்த நிபந்­த­னை­கள் அனைத்­தும் கூட்­ட­மைப்­பால் முன்­ன­ரும் வைக்­கப்­பட்டு ரணில் – மைத்­திரி தரப்­பால் நிறை­வேற்­றப்­ப­டா­தவை. இனி­வ­ரும் காலங்­க­ளில் வாக்­கு­றுதிகள் வழங்­கப்­பட்­டா­லும் அவை நிறை­வே­று­வ­தற்­கான அர­சி­யல் சூழ்­நிலை கேள்­விக்­கு­றி­யா­னதே! தமது வாக்­கு­கள், கட்சி நலன், சுய­ந­லன் என்­ப­வற்­றுக்கு மேலா­கச் சிந்­திக்க மறுக்­கும் இந்­தத் தலை­வர்­களை நம்­பு­வ­தற்­கான வாய்ப்­பைக் கடந்த காலம் விட்­டுச் செல்­ல­வில்லை என்­ப­து­தான் உண்மை.

இத்­த­கைய நிலை­யில் அரச தலை­வர் மைத்­திரி மற்­றும் ஆட்­சியை மீண்­டும் தன்­வ­சப்­ப­டுத்­து­வ­தற்கு எதிர்­பார்த்­தி­ருக்­கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய இரு தரப்­பி­ன­ரி­ட­மும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்தி, இறுக்­கிப்­பி­டித்­தி­ருக்க வேண்­டி­யது, இறு­திப் போர்க் கால நிகழ்­வு­க­ளுக்­கான பொறுப்­புக்­கூ­றல் மற்­றும் அது தொடர்­பில் ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் 2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட 30/1 தீர்­மா­னம்.
இறு­திப் போரில் நிக­ழந்த மனித உரிமை மீறல்­கள், மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்­கள் என்­பன பற்­றிய உண்­மை­கள் கண்­ட­றி­யப்­ப­டு­வ­தும் அதற்­குக் கார­ண­மா­ன­வர்­கள் அம்­ப­லப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தும் மிக முக்­கி­ய­மா­னது.

குற்­றங்­க­ளுக்­குக் கார­ண­மா­ன­வர்­க­ளைக் கண்­ட­றி­யா­மல் உண்­மை­க­ளைக் கண்­ட­றிய முடி­யாது. எனவே ஐ.நா. தீர்­மா­னத்­தில் கூறப்­பட்­ட­து­ போன்று, குறைந்­த­பட்­சம் வெளி­நாட்டு நீதி­ப­தி­கள், விசா­ர­ணை­யா­ளர்­கள், வழக்­குத் தொடு­நர்­களை உள்­ள­டக்­கிய கலப்பு நீதி­மன்­றத்­தை­யா­வது கொழும்பு ஆட்­சி­யா­ளர்­கள் நிறு­வ­வேண்­டும் என்­ப­தை­யும் கொழும்பு முன்­னரே அறி­வித்­தது போன்ற உண்­மை­யைக் கண்­ட­றி­யும் ஆணைக்­குழு ஒன்று குற்­ற­வா­ளி­கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கக்­கூ­டிய அதி­கா­ரத்­து­டன் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யி­ருக்­க­வேண்­டும்.

ஆனால், அரச தலை­வ­ரு­டன் நடந்த சந்­திப்­பின்­போ­தும் ரணில் தலை­மை­யி­லான சந்­திப்­பின்­போ­தும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இதனை வலி­யு­றுத்­த­வே­யில்லை. அதன் ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­வது இது குறித்­துக் கேள்­வி­யும் எழுப்­ப­வில்லை. இது போர்க்­குற்­றங்­கள் தொடர்­பான தனது கரி­ச­னை­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக் கைவிட்­டு­விட்­டதா என்­கிற சந்­தே­கத்தை எழுப்­பு­கின்­றது.

ஏனெ­னில், ஐ.நா. தீர்­மா­னம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும் என்­பதே கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாடு என்று தொடர்ந்து கூறி­வந்­த­வர் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன். ஆனால், அண்­மைய நெருக்­க­டி­யின்­போது ஆட்­சி­யைக் கைப்­பற்­று­ப­வர்­க­ளுக்­கான நிபந்­த­னை­யில் இந்த விட­யம் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­ட­வே­யில்லை. எனில், ஐ.நா. தீர்­மா­னத்­தைக் கொண்­டு­வ­ரு­வ­தில் கூட்­ட­மைப்பு ஏன் கரி­சனை கொண்­டி­ருந்­தது என்­கிற கேள்வி எழு­கி­றது. இப்­போது அத­னைக் கைவி­டு­வ­தற்­கான என்ன அர­சி­யல் சூழல் எழுந்­துள்­ளது என்­கிற கேள்­வி­யும் எழு­கி­றது.

போர்க்­குற்­றச்­சாட்­டுக்­கள் மற்­றும் ஐ.நா. தீர்­மா­னம் மட்­டுமே தமி­ழர்­கள் வச­முள்ள பிடி என்­கிற வகை­யில் அதனை நழுவ விடு­வது தமி­ழர்­க­ளின் எதிர்­கா­லத்தை எந்த வகை­யில் மேம்­ப­டுத்­தப்­போ­கி­றது என்­ப­தைக் கூட்­ட­மைப்பு மக்­க­ளுக்கு விளக்­க­வேண்­டும்.

You might also like