பிரபாகரனின் இடத்தில் இனிமேல் கஜேந்திரகுமாரா?

விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் வே. பிர­பா­க­ரன் சாவ­டைந்து விட்­ட­ார் என்று கூறி­ய­தால் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, மக்­க­ளின் மிகக் கடு­மை­யான எதிர்ப்­பை­யும், வெறுப்­பை­யும் சம்­பா­தித்­துள்­ளது.

உல­கத் தமி­ழி­னத்­தால்
மதிக்­கப்­ப­டும் ஒப்­பற்ற
தலை­வர் பிர­பா­கரன்

ஈழத் தமி­ழர்­க­ளால் மட்­டு­மல்­லாது, உல­கத் தமி­ழர்­க­ளா­லும் தமது நிக­ரற்ற தலை­வ­ராக ஏற்­றுக் கொள்­ளப்­பட்­ட­வர் வே.பிர­பா­க­ரன் என்­பது உல­க­றிந்த விட­ய­மா­கும். அவ­ரது நேர்­மை­யும், துணி­வும், இனத்­தின் மீது அவர் கொண்டிருந்த பற்­றும், தன்­ன­ல­மற்ற தன்­மை­யும், ஒப்­பற்ற தலை­வ­ராக அவரை மதிக்க வைத்­தன. விடு­த­லைப் புலி­க­ள் இயக்­கத்­தின் உறுப்­பி­னர்­கள் ஒழுக்­க­மும், கட்­டுக்­கோப்­பும் மிக்­க­வர்­க­ளா­கத் திகழ்ந்­த­மைக்கு தலை­வர் பிர­பா­க­ரனே முக்­கிய கார­ண­மாக இருந்­தார்.

புலி­க­ளின் ஆட்­சிக் காலத்­தில் திருட்டு, கொள்ளை, பெண்­கள் மீதான வன்­செ­யல்­கள், அடா­வ­டித் த­னங்­கள் ஆகி­ய­வற்­றைக் காண­மு­டி­ய­வில்லை. போர் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருந்­த­தால் மக்­கள் பெரும் இடர்­க­ளுக்கு மத்­தி­யில் வாழ்ந்­த­போ­தி­லும், பயத்தை அறி­யா­த­வர்­க­ளாக இருந்­த­னர். புலி­கள் அவர்­க­ளுக்­குப் பாது­காப்பு அர­ணாக விளங்­கி­ய­ மையே இதற்­கான கார­ண­மா­கும். அந்­தக் காலம் எப்­போது வரு­மெ­னத் தமிழ் மக்­கள் ஏங்­கிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

பிர­பா­க­ர­னது செயற்­பாட்­டுப்
பண்­பு­கள் குறித்­துப் பாராட்­டும்
தென்­னி­லங்­கைத் தரப்­புக்கள்

தென்­னி­லங்­கை­யில் பிர­பா­க­ரன், பயங்­க­ர­வாதி என்ற முத்­திரை குத்­தப்­பட்டு அவ்­வாறே அழைக்­கப்­பட்­டும் வந்­தார். ஆனால் இன்று நிலமை மாறி­விட்­டது. பிர­பா­க­ர­னைப் போன்ற சிறந்த தலை­வர்­கள் தெற்­கி­லும் உரு­வாக வேண்­டு­மெ­னக் கூறு­ம­ள­வுக்கு அங்கு நிலமை மாறி­விட்­டது. கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் பரப்­புரை மேடை­க­ளில் இதைக் காண­மு­டிந்­தது.

இறு­திப் போரில் பிர­பா­க­ ர­னைப் படை­கள் கொன்­று­விட்­ட­தாக அரசு தீவிர பரப்­பு­ரை­க­ளில் ஈடு­பட்ட போதி­லும், தமி­ழர்­க­ளில் பெரும்­பா­லோர் அதை நம்­ப­வில்லை. அவர் உயி­ரோடு உள்ளார் என்றே அவர்­கள் இன்­ன­மும் நம்­பு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் நல்­லூ­ரில் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் மேதி­னக் கூட்­டத்­தில் வைத்து தலை­வர் பிர­பா­க­ரன் இறந்து விட்­ட­ார் எனவும், இனி­மேல் அவ­ருக்­குப் பதி­லாக கஜேந்­தி­ர­கு­மா­ரைத் தலை­வ­ராக ஏற்­றுக்­கொண்டு அவ­ருக்­குப் பின்­னால் அணி திரள வேண்­டு­மெ­ன­வும் அகில இலங்கை தமிழ் காங்­கி­ர­ஸின் தலை­வர் கூறி­யமை அங்கு கூடி­யி­ருந்த மக்­கள் மத்­தி­யில் பெரும் அதி­ருப்­தி­யைத் தோற்­று­வித்­து­விட்­டது.

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யைச் சேர்ந்­த­வர்­களே அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ரது பிரச்­சி­னைக்­கு­ரிய அந்­தக் கருத்­துக் குறித்து குழப்­பத்­தில் ஈடு­பட்­ட­தா­க­வும் தெரிய வரு­கின்­றது. பிர­பா­க­ரன் இறந்து விட்­ட­ார் எனக் கூறப்­ப­டு­வதை மக்­கள் ஏற்க மாட்­டார்­கள் என்­ப­தை­யும், அவ­ருக்கு மாற்­றீ­டான தலை­வர் எவ­ரை­யும் ஏற்­றுக் கொள்­வ­தற்கு அவர்­கள் தயா­ரில்லை என்­ப­தை­யும் இந்­தச் சம்­ப­வம் தௌிவாக உணர்த்தி விட்­டது.

கஜேந்­தி­ர­கு­மா­ரின் தந்­தை­யா­ரான குமார் பொன்­னம்­ப­லத்­துக்கு மாம­னி­தர் விருது வழங்­கித் தலை­வர் பிர­பா­க­ரன் மறுப்புறுத்தியதைத் தமி­ழர்­கள் என்­றுமே மறக்க மாட்­டார்­கள். இந்த நிலை­யில் அவர் தலை­வ­ராக இருந்த தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் பிர­பா­க­ரனை அவ­ம­திக்­கும் வகை­யில் நடந்து கொள்­கின்­றமை ஏற்­கத்­தக்­க­தல்ல. தமிழ் மக்­க­ளும் இதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள்.

பிரபாகரனுக்குப் பதிலாக
எவரும் தற்போதில்லை

தலை­வர் பிர­பா­க­ரனின் இடத்தை நிரப்­பு­வ­தற்­குத் தகு­தி­யு­டைய தலை­வ­ரொ­ரு­வர் இனி­மேல்­தான் பிறக்க வேண்­டும். ஓர் இனத்­தின் தலை­மைத்­து­வம் என்­பது பரம்­ப­ரை­யாக வரு­கின்ற ஒன்­றல்ல. பிர­பா­க­ரன் சிறு­வ­ய­தி­லி­ருந்தே தனது இனத்­துக்­கா­கத் தன்னை அர்ப்­ப­ணித்­துச் செயற்­பட்­ட­தால், தலை­வர் பத­விக்கு உயர்ந்­தார். தனது குடும்ப நலன்­கள் குறித்து அவர் ஒரு­போ­துமே அக்­கறை காட்­டி­ய­தில்லை.

இள­வ­ய­தி­லேயே தனது தாய், தந்தை, சகோ­த­ரர்­கள் ஆகி­யோ­ரின் பாசத்­தைத் துறந்­து­விட்டு இனத்­தின் விடு­த­லைக்­கா­கப் போரா­டு­வ­தற்­குப் புறப்பட்ட அபூர்வ மனி­தர் அவர். அவர் உறங்­கிய மணித்­து­ளி­கள் மிகக் குறை­வா­னவை. உண­வைக்­கூட அவர் நிம்­ம­தி­யா­க ஆற அமர இருந்து உண்ப தற்கு நேரம் இருந்த தில்லை. புலிப்போரா­ளி­க­ளைத் தனது பிள்­ளை­க­ ளா­கக் கரு­திப் பேணி­னார். தனது குடும்­பத்­துக் கென ஒரு சதத்­தைக்­கூட அவர் சேமித்து அறி­யா­த­வர். பொய்­யும், புரட்­டும், கப­ட­நோக்­க­மும் இவ­ரி­டம் அறவே காணப்­ப­ட­வில்லை.

இந்த உல­கத்­தில் வாழ்­கின்ற அனைத்­துத் தமி­ழர்­க­ளும் இவ­ரையே தமது தலை­வ­ரா­கப் போற்­றிப் புகழ்­கின்­ற­னர். புலம் பெயர்ந்து வாழ்­கின்ற தமி­ழர்­கள் தமது மேதி­னப் பேர­ணி­யின் போது பிர­பா­க­ர­னின் படங்­க­ளைத் தாங்கி நின்­றமை அவர்­கள் அவர்­மீது கொண்­டுள்ள ஆழ்ந்த அன்பை வௌிக்­காட்­டி­யது. எமது தலை­வர் இறக்­கி­வில்லை, உயி­ரோ­டு­தான் இருக்­கின்­றார் என்ற நம்­பிக்கை, துன்­பங்­க­ளுக்கு மத்­தி­யி­லும் ஒரு­வித புத்­து­ணர்வை அவர்­க­ளி­டம் ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது.

இதைச் சிதைக்­கும் வகை­யில் கஜேந்­தி­ர­கு­மார் தரப்­பி­னர் நடந்து கொள்­கின்­றமை மக்­க­ளின் வெறுப்­பைச் சம்­பா­திக்­கவே வழி­வ­குக்­கும்.பிர­பா­க­ர­னை­ யும், கஜேந்­தி­ர­கு­மா­ரை­யும் ஒப்­பிட்­டுப் பேசு­வ­தற்­குத் துணிவு வந்­த­தற்­கான கார­ணங்­கள் குறித்து ஆராய்ந்து பார்க்­கப்­ப­டல் வேண்­டும். இதற்­கு­ரிய தண்­ட­னை­யைச் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு மக்­களே தமது வாக்­குப் பலத்­தின் மூல­மாக வழங்க வேண்­டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close