side Add

பிளவடைந்திருந்த பேர்லின் எமக்குச் சொல்லும் கதை

இது ஜேர்­மனி கிழக்கு மேற்­காக பிள­வு­பட்­டி­ருந்த காலப்­ப­கு­தி­யில் இடம்­பெற்­ற­தா­கச் சொல்­லப்­ப­டும் கதை­யொன்று. கிழக்கு பெர்­லின் ரஷ்­யா­வின் ஆத­ர­வில் இருந்­தது. அங்கு பஞ்­ச­மும் வறு­மை­யும் பட்­டி­னி­யும் தலை­வி­ரித்­தா­டின. மேற்கு பெர்­லின் அமெ­ரிக்­கா­வின் ஆத­ரவு பெற்­றி­ருந்­தது. அது செல்­வச் செழிப்­பு­மிக்க பூமி­யாக இருந்து வந்தது.

பெர்­லின் முரண்­பா­டு­கள் அதி­யுச்­சம் பெற்றிருந்த காலகட்டத்தில், கிழக்கு பேர்­லின் மக்­கள் மேற்கு பெர்­லின் எல்­லைக்கு வந்து (பெர்­லின் சுவ­ருக்கு அருகில்) குப்­பை­க­ளையும் துர்­நாற்­றம் வீசும் பொருள்­க­ளை­யும் வைத்­து­விட்­டுச் சென்­றார்­க­ளாம். பதி­லுக்கு மேற்கு பெர்­லின் மக்­கள் அவ்­வாறு செய்­ய­வில்லை.

ஏரா­ள­மான உண­வுப் பொருள்­க­ளை­யும், உடை­க­ளை­யும், பூச்­செண்­டு­க­ளை­யும் கிழக்கு பெர்­லின் எல்­லை­யில் வைத்­து­விட்டு அந்­தப் பொருள்­க­ளு­டன் ஒரு பதா­கை­யை­யும் எழுதி வைத்­த­னர். ‘‘உங்­க­ளி­டம் இருந்­ததை நீங்­கள் தந்­து­விட்­டீர்­கள். எங்­க­ளி­டம் இருப்­ப­வற்றை உங்­க­ளுக்­குத் தந்­துள்­ளோம்’’ என்­பதே அந்­தப் பதா­கை­யில் எழு­தப்­பட்­டி­ருந்த வாச­கம்.

நாட்டின் தென்பகுதி, தமி­ழர் தாய­கத்­துக்கு ஏரா­ள­மான கொடு­மை­க­ளைச் செய்­துள்­ளது. அர­ச­மைப்பு உரு­வாக்­கம், காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் விடு­தலை, காணி­வி­டு­விப்பு என்று எதி­லும் எமக்கு எதிர்­மா­றான நிலைப்­பாட்­டையே கொண்­டுள்­ள­னர் அவர்­கள். இது அவர்­க­ளி­டம் இருப்­பது, அப்­ப­டியே கிழக்கு பெர்­லி­னி­டம் உள்­ள­தைப்­போன்று.

தெற்கு, தற்­போது வெள்­ளக்­கா­டா­கி­யுள்­ளது. அவர்­க­ளுக்கு உத­வி­கள் தேவைப்­ப­டு­கின்­றன. உலர் உண­வு­கள் தேவைப்­ப­டு­கின்­றன நாம் ஒரு­நேர உணவை ஒறுத்­தா­வது, அவர்­க­ளின் பசியைப் போக்க, தேவையை நிறைவேற்றி வைக்க ஓர­ள­வே­னும் முன்­வ­ரு­வோம். இது எம்­மி­டம் இருப்­பது. தமி­ழர்­தா­ய­கம் மேற்கு பெர்­லி­னைப் போன்­றது என்­பதை நிரூ­பிப்­ப­தற்கு இறை­வன் கொடுத்­துள்ள வாய்ப்­பா­க­வும் இந்த இயற்கை இடர் இருக்­க­லாம். பயன்­ப­டுத்­து­வோ­மாக.

பிர­காஸ்

You might also like
X