side Add

புதிய அர­ச­மைப்பு நிறை­வே­றி­னால் நாடு ஒன்­பது துண்­டு­க­ளாகப் பிரி­யும்

மகிந்த மீண்­டும் விச­மப் பேச்சு

புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­பட்­டால் நாட்­டுக்கு ஏற்­ப­டும் பாத­கங்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டுள்ள எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, நாட்டை ஒன்­பது துண்­டு­க­ளா­கப் பிரித்து சுயாட் சிக்கு சமாந்­தி­ர­மான அதி­கா­ரங்­களை இந்த அர­ச­மைப்பு வழங்­கும். அதற்கே தீர்­மா­னித்­துள்­ள­னர் என்­றும் குறிப்­பிட்­டார்.

எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நேற்று புதன்­கி­ழமை விடுத்­துள்ள சிறப்பு அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டார். அவர் குறித்த அறிக்­கை­யில் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தா­வது,

கடன் தொகை­யில்
தத்­த­ளிக்­கி­றது நாடு
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் நான்கு ஆண்­டு­கள் கடந்­துள்ள இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் மூன்று வித­மான அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளோம். இந்த நாடு சுதந்­தி­ரம் அடைந்த 1948ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்­டு­வரை ஆட்­சி­செய்த அர­சு­கள் பெற்­றுக்­கொண்ட மொத்த கடன் தொகை­யில் 50 வீத­மான கடன்­தொ­கையை கூட்டு அரசு பெற்­றுக்­கொண்­டுள்­ளது. எமது அரசு பெற்­றுக்­கொண்ட கடன்­களை மீள செலுத்­தவே ஐ.தே.க. அரசு கடன்­களை பெற்­றுக்­கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கி­றது. ஆனால், கடந்த அர­சின் காலத்­தில் பெற்­றுக்­கொண்ட கடன்­தொகை அவ்­வாறே இருக்­கின்ற சூழ­லி­லேயே இலங்­கை­யின் மொத்த கடன் தொகை­யில் 50 வீத­மான கடன்­களை ஐ.தே.க. அரசு பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

2006 – 2014 இடைப்­பட்ட காலப்­ப­கு­தி­யில் எமது நாடு பார­தூ­ர­மான போருக்கு முகங்­கொ­டுத்­தது. 2007ஆம் ஆண்டு உலக பொரு­ளா­தா­ரம் கடும் நெருக்­க­டி­க­ளைச் சந்­தித்­தி­ருந்­தது. 1930ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் 2008, 2009ஆம் ஆண்­டில்­தான் உல­கம் கடு­மை­யான பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தி­ருந்­தது. நாமும் அதற்கு முகங்­கொ­டுத்­தோம். அதே­போன்று வர­லாற்­றில் என்­றும் இல்­லா­த­வாறு 2006 -2014ஆம் ஆண்­டுக்கு உட்­பட்ட காலப்­ப­கு­த­யில் கனிய எண்ணை பெரல் ஒன்­றின் விலை 140 டொலர்­கள் வரை உயர்­வ­டைந்­தி­ருந்­தது.

இவ்­வாறு கடு­மை­யான பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யில் குறித்த காலப்­ப­கு­த­யில் அமெ­ரிக்க டொல­ருக்கு நிக­ரான இலங்­கை­யின் ரூபா­வின் பெறு­மதி 28 ரூபா­வால் மாத்­தி­ரமே வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்­தது. ஆனால், கடந்த நான்கு ஆண்­டு­க­ளில் எவ்­வி­த­மான பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளும் இல்­லாது அமெ­ரிக்க டொல­ருக்கு நிக­ரான இலங்கை ரூபா­வின் பெறு­மதி 53 ரூபா­வால் வீழ்ச்சி கண்­டுள்­ளது.

எமது ஆட்­சி­யில் 7 சத­வீ­த­மா­க­வி­ருந்த பொரு­ளா­தார அபி­வி­ருத்தி தற்­போது 3 சத­வீ­த­மாக உள்­ளது. அதனை தெரிந்­து­கொண்­டு­தான் பொதுத் தேர்­தல் ஒன்றை நடத்தி நாட்டை மீண்­டும் எம்­மி­டம் கைய­ளிக்க அரச தலை­வர் நட­வ­டிக்­கை­யெ­டுத்­தார். ஆனால், அந்த முயற்சி தோல்­வி­ய­டைந்­து­விட்­டது. அடுத்த வாரம், அடுத்த மாதம் பொரு­ளா­தா­ரத்­தில் எவ்­வி­த­மான பேரி­டி­கள் நேரி­டும் என்று தெரி­யா­து­தான் பய­ணிக்­கின்­றோம்.

19 திருத்­தச் சட்­டம்
அடுத்­த­ப­டி­யாக நாம் முகங்­கொ­டுக்­கும் அச்­சு­றுத்­தல்­தான் 19ஆவது திருத்­தச்­சட்­டத்­தால் முழு அரச பொறி­மு­றை­யும் வீழ்ச்­சி­ய­டை­யும் நிலைமை. 19ஆவது திருத்­தச் சட்­டத்­தின் பிர­கா­ரம் நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­யொன்று தோல்­வி­ய­டைந்­தா­லும், சிம்­மா­சன உரை தோல்வி கண்­டா­லும் நான்­கரை வரு­டங்­க­ளுக்கு முன்­னர் நாடா­ளு­மன்­றத்­தைக் கலைக்க முடி­யாது.

நாட்­டின் ஆட்­சிக்கு அச்­சு­றுத்­தல் ஏற்­ப­டும் வித­மாக அரச தரப்­புக்­குள் கருத்து மோதல்­கள் வலுப்­பெற்­றால் தேர்­த­லொன்­றுக்கு அழைப்பு விடுத்து மக்­க­ளின் அபிப்­பி­ரா­யத்­தைக் கோரு­வ­து­தான் நாடா­ளு­மன்ற சம்­பி­ர­தாய முறை. ஆனால், அவ்­வா­றான சந்­தர்ப்­பம் 19ஆவது திருத்­தத்­தில் இல்­லா­மல் செய்­யப்­பட்­டுள்­ள­தால் அர­சும் அதன் உறுப்­பி­னர்­க­ளும் ஒரு பொறி­மு­றை­யின் கீழ் செயற்­ப­டும் நில­மையே காணப்­ப­டு­கி­றது.

1952, 1959, 1964, 2001ஆம் ஆண்­டு­க­ளில் அர­சுக்­குள் ஏற்­பட்ட நெருக்­க­டி­க­ளால்­தான் நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­டது. தேவை­யான சந்­தர்ப்­பத்­தில் நாடா­ளு­மன்ற தேர்­தல் ஒன்­றுக்கு அழைப்பு விடுத்து மக்­க­ளின் அபிப்­பி­ரா­யத்தை பெற்­றுக்­கொள்­வது எவ்­வ­ளவு முக்­கி­யத்­து­வ­மா­னது என்­பது எதிர்­கா­லத்­தில் புரிந்­து­கொள்ள கூடி­ய­தா­க­வி­ருக்­கும். 1978ஆம் ஆண்டு அர­ச­மைப்­பில் ஆரம்­பத்­தில் இருந்து கூறப்­ப­டும் ஒரு குறை­பா­டு­தான் அரச தலை­வர் ஒரு கட்­சி­யி­லும், நாடா­ளு­மன்­றப் பெரும்­பான்மை மற்­றொரு தரப்­புக்கு இருக்­கும் சந்­தர்ப்­பத்­தில் குழப்­ப­க­ர­மான நிலமை தோன்­றும் என்­பது. 1994ஆம் ஆண்டு மற்­றும் 2001ஆம் ஆண்­டு­க­ளில் எமக்கு சிறந்த முன்­னு­தா­ர­ணங்­கள் இருந்­தன. நாட்­டின் அரச தலை­வர் நாடா­ளு­மன்ற தேர்­லுக்கு அழைப்பு விடுத்து, அதில் மாற்று தரப்பு நாடா­ளு­மன்­றில் பெரும்­பான்மை பெற்ற சந்­தர்ப்­பங்­க­ளில் அரச தலை­வர் குறித்த தரப்­பின் தலைமை அமைச்­ச­ருக்­கும், அமைச்­ச­ர­வைக்­கும் ஆட்சி அதி­கா­ரத்தை கொடுத்து ஒதுங்­கி­யி­ருந்­தார். ஆனால், இன்று அவ்­வா­றான சூழ­லொன்று இல்லை.

பொது தேர்­த­லொன்­றுக்கு அழைப்­பு­வி­டுத்து மக்­க­ளின் அபிப்­பி­ரா­யத்தை பெற்­றுக்­கொள்­ளும் சந்­தர்ப்­பம் தடை செய்­யப்­பட்­டுள்ள போதி­லும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் இணைந்து அர­சொன்றை அமைத்து நாட்டை முன்­னோக்கி கொண்­டு­செல்­லும் முழு பொறுப்­பும் 19ஆவது திருத்­தத்­தில் அரச தலை­வ­ருக்­கு­தான் உள்­ளது. அர­சி­ன­தும், அமைச்­ச­ர­வை­யி­ன­தும் தலை­வர் அரச தலை­வர்­தான். அவ்­வா­றான அர­சில் செய்­யப்­ப­டும் அனைத்­துச் செயற்­பா­டு­க­ளுக்­கும் அரச தலை­வர்­தான் பொறுப்­புக்­கூற வேண்­டும்.

2018ஆம் ஆண்டு நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லின் பின்­னர் ஐ.தே.க. அர­சுக்கு மக்­கள் ஆணை இல்லை. ஆனால், அவர்­கள் தொடர்ந்து தேர்­தல்­களை நடத்­து­வதை இழுத்­த­டித்து வரு­கின்­ற­னர். அவ்­வா­றான சந்­தர்ப்­பத்­தில் அரச தலை­வர் ஐ.தே.க. அர­சுக்கு ஆட்­சியை கொடுத்­து­விட்டு ஒதுங்­கி­யி­ருக்க முடி­யாது. 19ஆவது திருத்­தச்­சட்­ட­தால் நாட்­டின் முழு­மை­யான அரச பொறி­மு­றை­யும் குழப்­ப­க­ர­மா­ன­தாக மாறி­யுள்­ளது.

புதிய அர­ச­மைப்­பால்
நாடு பிள­வ­டை­யும்
மூன்­றா­வ­தாக எமது நாட்­டுக்கு உள்ள அச்­சு­றுத்­தல் அர­ச­மைப்பு நிர்­ணய சபை முன்­வைக்­க­வுள்ள புதிய அர­ச­மைப்­பா­கும். அரசு அதன்­மூ­லம் எதிர்­பார்ப்­ப­தா­வது கூட்டு ஆட்சி மூலம் நாட்டை ஒன்­பது துண்­டு­க­ளாக பிரித்து சுயா­தீன இராஜ்­ஜி­யங்­க­ளுக்கு சமாந்­தி­ர­மான அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளிப்­ப­தா­கும். இன்று கொழும்பு அர­சி­டம் உள்ள அனைத்து அதி­கா­ரங்­க­ளும் மாகா­ணங்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன.

இதன்­மூ­லம் குறித்த மாகா­ணங்­க­ளில் பொலிஸ் அதி­கா­ரத்தை ஏற்­ப­டுத்­த­வுள்­ள­னர். நெருக்­க­டி­யான அல்­லது அச்­சு­றுத்­த­லான சந்­தர்ப்­பத்­தில் கொழும்பு அர­சால் சாதா­ரண சூழலை குறித்த மாகா­ணங்­க­ளில் ஏற்­ப­டுத்த அதி­கா­ரம் இல்லை என்­ப­து­டன், அதனை நாடா­ளு­மன்ற சட்­டங்­க­ளில் இருந்து விலக்­க­ளிக்­க­வும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த புதிய அர­ச­மைப்பை தயா­ரிப்­பது 19ஆவது திருத்­தச்­சட்­டத்தை தயா­ரித்து முழு நாட்­டை­யும் சிக்­க­லான நிலைக்­குத் தள்­ளி­ய­வர்­கள்­தான்.

இவ்­வா­றான அர­ச­மைப்பை தயா­ரிப்­ப­வர்­கள்­தான் 2017ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சி மற்­றும் மாகாண சபைத் தேர்­தல் முறை­மை­க­ளை­யும் தயா­ரித்­தி­ருந்­த­னர். மேலே பார்த்­துக்­கொண்டு தேர்­தல் திருத்­தச் சட்­டங்­களை தயா­ரித்­த­வர்­கள்­தான் இன்று குறித்த முறை­யில் எதிர்­கா­லத்­தில் எந்­த­வொரு தேர்­த­லை­யும் நடத்­து­வ­தில்லை என்று. இவர்­கள் தயா­ரிக்­கும் புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­பட்­டால் ஒரு­நா­டா­க­வுள்ள இலங்­கை­யின் எதிர்­கா­லத்­தில் இலங்கை ஒரு நாடாக இருக்­காது.

இலங்கை என்ற ஒரு நிர்­வா­கக் கட்;டமைப்பு இருக்­காது. எமக்­குக் கிடைத்­துள்ள தக­வல்­க­ளின் பிர­கா­ரம் பணத்தை அள்­ளி­வீசி உறுப்­பி­னர்­களை விலைக்கு வாங்­க­வுள்­ள­னர். அத­னால்­தான் மேற்­கூ­றப்­பட்­டது போன்று மூன்று அச்­சு­றுத்­தல்­களை இலங்கை எதிர்­கொண்­டுள்­ளது. இந்த மூன்று பார­தூ­ர­மான அச்­சு­றுத்­தல்­க­ளில் இருந்து நாட்டை மீட்­டெ­டுக்க எதிர் கூட்­ட­ணி­யான எம்­மால் மாத்­தி­ரமே முடி­யும் – என்­றுள்­ளார்.

You might also like