புல்மோட்டைக்கு தனியான பிரதேச செயலகம், சபை அவசியம்!!

0 10

திருகோணமலை புல்மோட்டை பிரதேசத்துக்கு தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை என்பன உருவாக்கப்பட வேண்டும் என்று துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூம் தெரிவித்தார்.

புல்மோட்டை பகுதியில் பல புதிய அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் பாவனைக்கு நேற்றுக் கையளிக்கப்பட்டன. அதில் அவர் தெரிவித்ததாவது,

துரித அபிவிருத்தியில் பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். கல்வி,சுகாதாரம் போக்குவரத்து சுற்றுலாத் துறை என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அபிவிருத்திகளில் கிராமங்கள் அதிகமாக உள்வாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும்.

மீள்குடியேற்ற அமைச்சு மீள் குடியேற்ற செயலனி ஊடாக பல முன்னெடுப்புக்கள் இப் பகுதியில் இடம் பெறவுள்ளன. இங்குள்ள மக்கள் செறிவுக்கு ஏற்ப பிரதேச செயலகம், பிரதேச சபை தனியாக அமைக்கப்பட வேண்டும். என்றார்.

You might also like