பூம்­பு­கா­ரில் நேற்­றி­ரவு வாள்­வெட்டு

யாழ்ப்­பா­ணம் அரி­யா­லை­யைச் சேர்ந்த சகோ­த­ரர்­கள் இரு­வர் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் நேற்­றி­ரவு யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். வாள்­க­ளால் வெட்­டப்­பட்­ட­தில் அவர்­கள் காய­ம­டைந்­த­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அரி­யாலை பூம்­பு­கார் பகு­தி­யில் நேற்று இரவு இரண்டு குழுக்க­ளுக்கு இடை­யில் ஏற்­பட்ட முரண்­பாடு வாள்­வெட்­டில் முடிந்­தது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். முரண்­பாடு முற்­றிய நிலை­யில் வாள்­க­ளால் வெட்­டுப்­பட்­டுக்­கொண்­ட­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. இது தொடர்­பாக யாழ்ப்­பா­ணம் பொலி­சார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

You might also like