பெண்களின் ஆரோக்கியம்!!

ஆரோக்­கி­யம் சார்ந்த பிரச்­சி­னை­களை நோக்­கும் போது பெண்­க­ளுக்­கும் ஆண்­க­ளுக்­கும் ஒரே மாதி­ரி­யான பிரச்­சி­னை­களே ஏற்­ப­டு­கின்ற போதி­லும் அவை பெண்­களை வித்­தி­யா­ச­மான முறை­யில் பாதிக்­கின்­றன. சில நோய் நிலை­மை­கள் கார­ண­மாக மூட்­டு­வா­தம், அதி­க­ரித்த உடற்­ப­ரு­மன் மற்­றும் மன அழுத்­தம் போன்­றன பெண்­களை அதி­க­ள­வில் பாதிக்­கின்ற போதி­லும் சில நோய் நிலை­மை­கள் பெண்­க­ளுக்கே தனித்­து­வ­மா­னவை.

பெண்­கள் எப்­பொ­ழு­தும் தங்­களை சார்ந்­த­வர்­க­ளு­டைய நல­னில் செலுத்­தும் கவ­னத்தை சிறி­த­ள­வே­னும் தமக்­கா­க­வும் செலுத்த வேண்­டும். பெண்­க­ளு­டைய நலன் பற்றி கரு­தும்­போது அவர்­க­ளு­டைய உடல் நலம் பற்றி மட்­டும் சிந்­திக்­காது உள, மன­நல ஆரோக்­கி­யம் பற்­றி­யும் சிந்­தித்­தல் அவ­சி­ய­மா­னது.

பதின்ம வய­துப் பெண்­க­ளுக்கு
ஏற்­ப­டும் பிரச்­சி­னை­க­ளில் சில

பெண்­க­ளைப் பொறுத்­த­வரை அவர்­க­ளின் ஒவ்­வொரு வாழ்க்­கைப் படி­நி­லை­க­ளி­லும் அவர்­கள் எதிர்­நோக்­கும் சுகா­தா­ரம் மற்­றும் ஆரோக்­கி­யம் சார்ந்த பிரச்­சி­னை­கள் வேறு­ப­டு­கின்­றன. உதா­ர­ண­மாக குழந்­தைப் பரு­வத்தை எடுத்­துக் கொண்­டால் போசாக்­குக் குறை­பாடு மற்­றும் சிறு­வர் துர்­ந­டத்தை என்­ப­வற்­றைக் குறிப்­பி­ட­லாம். அடுத்து பதின்ம வய­துப் பருத்தை எடுத்­துக் கொண்­டால் மாத­வி­டாய் தொடர்­பான பிரச்­சி­னை­கள், அதி­க­ரித்த உடற்­ப­ரு­மன், போசாக்­குக் குறை­பாடு, குரு­திச் சோகை, இள­வ­ய­துக் கர்ப்­பம் ரீதி­யாக ஏற்­ப­டும் மாற்­றங்­கள் என்­ப­வற்­றைக் குறிப்­பி­ ட­லாம்.

20-–40 வய­துப் பெண்­கள்
எதிர்­கொள்­ளும் பிரச்­சினை

அடுத்து 20–40 வய­துப் பிரிவை எடுத்­துக் கொண்­டால் கர்ப்­ப­கா­லம் தொடர்­பான பிரச்­சி­னை­கள் மற்­றும் பிள்­ளைப் பேறின்மை ஆகி­யன முக்­கிய இடம் வகிக்­கின்­றன. கர்ப்ப காலத்­தில் ஏற்­ப­டும் பிரச்­சி­னை­கள் முன்­னணி வகிப்­பவை நீரி­ழிவு நோய், உயர்­கு­ரு­தி­ய­முக்­கம் மற்­றும் குரு­திச் சோகை என்­ப­ன­வா­கும். எனி­னும் தகுந்த மருத்­துவ வச­தி­களை வழங்­கு­வ­தன் மூலம் இந்த நோய் நிலை­மை­கள் வெற்றி கொள்­ளப்­ப­டு­கின்­றன. தற்­கா­லத்­தில் பிள்­ளைப் பேறின்­மை­யா­னது பெண்­களை வாட்டி வரும் நில­மை­யாக உள்­ளது. இதற்கு ஆண், பெண் என இரு­பா­லா­ரும் கார­ண­மெ­னி­னும் பெண்­க­ளில் ஏற்­ப­டும் சில நோய்­க­ளான தைரொ­யிட் சுரப்பி தொடர்­பான நோய்­கள், சூல­கத்­தில் ஏற்­ப­டும் கட்­டி­கள் மற்­றும் நீண்ட கால நோய் நிலை­கள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன.

மூத்த பெண்­க­ளுக்கு
ஏற்­ப­டும் பெண்­கள்

நாற்­பத்­தைந்து வய­தி­லும் கூடிய பெண்­களை கருத்­தில் கொள்­ளும் போது எல்லா பெண்­க­ளி­லும் நிக­ழும் உடற்­தொ­ழி­லி­யல் சார்ந்த நிகழ்­வாக மாத­வி­டாய் நிறுத்­தத்­தைக் குறிப்­பி­ட­லாம். இதன் ஆரம்ப கட்ட அறி­கு­றி­க­ளாக இரவு நேரங்­க­ளில் அதி­க­ள­வில் வியர்த்­தல், அடிக்­கடி மன நிலமை மாற்­ற­ம­டை­தல் போன்­ற­வற்­றி­னைக் குறிப்­பி­ட­லாம். மேலும் இந்த வய­துப் பிரி­வி­ன­ரி­டையே பெண் நோயி­யல் சம்­பந்­த­மான புற்­று­நோய் உதா­ர­ண­மாக சூல­கப் புற்­று­நோய், மார்­ப­கப் புற்­று­நோய், கருப்பை புற்­று­நோய் மற்­றும் கருப்பை கழுத்­துப் புற்­று­நோய் என்­பன அதி­க­ள­வில் ஏற்­பட வாய்ப்­புண்டு. அத்­து­டன் இரு­தய நோய்­கள், உயர் கு­ரு­தி­ய­முக்­கம், நீரி­ழிவு, என்பு தேய்வு மற்­றும் மூட்­டு­வா­தம் போன்ற நோய்­கள் ஏற்­ப­டு­கின்­றன.


பெண்­கள் வாழ்­நாள் முழு­வ­தி­லும் எதிர்­கொள்­கின்ற பிரச்­சி­னை­க­ளாக ஆண், பெண் சமத்­து­வ­மின்மை, சமூ­க­வி­யல் சார்ந்த பிரச்­சி­னை­கள் மற்­றும் மன அழுத்­தம் போன்­ற­வற்­றைக் குறிப்­பி­ட­லாம்.

எனவே பெண்­கள் மேற்­கு­றிப்­பிட்ட நோய்­நி­லை­மை­களை தீர்ப்­ப­தற்கு மருத்­துவ ஆலோ­சனை மற்­றும் உத­வி­களை நாடு­வது அவ­சி­யம். எனி­னும் பெண்­க­ளின் தன்­னம்­பிக்கை குறைவு, குறைந்த வரு­மா­னம், போதி­ய­றிவு கல்­வி­யின்மை மற்­றும் குடும்­பப் பொறுப்­புக்­கள் ஆகி­யன தடைக்­கற்­க­ளாக அமை­கின்­றன.

தற்­கால சமு­தா­யத்­தில் பெண்­கள் எதிர்­நோக்­கும் சவால்­க­ளாக தேவை­யற்ற கர்ப்­பம், குழந்தை பேறின்மை, புற்­று­நோய், பெண்­க­ளுக்­கெ­தி­ரான வன்­முறை ஆகி­ய­வற்­றைக் குறிப்­பி­ட­லாம்.

எனவே வயது வேறு­பா­டின்றி அனைத்­துப் பெண்­க­ளும் தமக்கு ஏற்­ப­டும் சவால்­களை முறி­ய­டிப்­ப­தற்கு தகுந்த வழி­யில் செயற்­ப­டு­வது அவ­சி­ய­மா­கும். இவ் வகை­யில் ஆரோக்­கி­ய­மான வாழ்க்கை முறை­யைக் கடைப்­பி­டித்­தல் முக்­கிய இடம்­பெ­று­கின்­றது. ஆரோக்­கி­ய­மான உண­வுப் பழக்­க­ப­வ­ழக்­கங்­க­ளைப் பேணு­தல் கிர­ம­மாக உடற்­ப­யிற்சி செய்­தல், சீரான நித்­திரை, மன உளைச்­சலை சரி­யான முறை­யில் கையா­ளு­தல் போன்றன ஆரோக்­கிய வாழ்க்­கைக்கு வழி­கோ­லு­கின்­றன.


வயது வந்த அனைத்­துப் பெண்­க­ளும் தமது ஊரி­லுள்ள சுக­வ­னி­தை­யர் சிகிச்சை நிலை­யத்­துக்கு சென்று சில நோய் நிலை­மை­க­ளான நீரி­ழிவு, உயர்­கு­ரு­தி­ய­முக்­கம், கொலஸ்­ரோல் நோய் போன்­ற­வற்றை கண்டு பிடிப்­ப­தற்­கான ஆரம்­பக்­கட்ட பரி­சோ­த­னை­க­ளைச் செய்­தல் அவ­சி­ய­மா­ன­தா­கும்.

எனவே அனைத்­துப் பெண்­க­ளும் தமக்கு ஏற்­ப­டும் சுகா­தா­ரம் சார்ந்த பிரச்­சி­னை­களை சரி­யான வகை­யில் கண்­ட­றிந்து அவற்­றினை தீர்ப்­ப­தற்­கான வழி­வ­கை­களை மேற்­கொள்­வ­தன் மூலம் அவர்­க­ளின் ஆரோக்­கி­ய­மான எதிர்­கால வாழ்வு நிர்­ண­யிக்­கப்­ப­டும்.

மருத்துவர் நிரோசிகா சோதிநாதன்

You might also like