பேருந்தில் கைவிடப்பட்ட பொதி- பொலிஸார் தீவிர விசாரணை!!

கொழும்பு கோட்டை ரெலிகொம் நிறுவனத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தில் கைவிடப்பட்ட பொதி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேருந்தில் சந்தேகத்துக்கிடமாக பொதியொன்று காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு இன்று அறிவித்துள்ளனர்.

குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் பொதியை சோதனையிட்டனர். பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் குறித்த பொதி அங்கு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like