பொதுமக்களுக்கு மீண்டும் அறிவிப்பு!!

வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான கால எல்லை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

வாள், உள்ளிட்ட கூரிய ஆயுதங்களையும், பொலிஸார் மற்றும் முப்படையினரின் சீருடைகளை ஒத்த ஆடைகளை வீட்டில் வைத்திருக்கும் பட்சத்தில் அவற்றை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவற்றை ஒப்படைப்பதற்கு இன்று நள்ளிரவு வரை 48 மணித்தியாலங்களுக்கு கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

You might also like