பொரு­ளா­தா­ரக் கொள்கை இன்­றியே ஒரு ஆட்­சியா?

வடக்கு மாகாண சபை­யின் ஆட்­சிக் காலம் எதிர்­வ­ரும் ஐப்­பசி மாதத்­து­டன் முடி­வ­டை­கின்­றது. சரி­யாக இன்­னும் 5 மாதங்­களே இருக்­கின்­றன.

இதற்­கி­டை­யில் 300க்கும் மேற்­பட்ட தீர்­மா­னங்­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

எனி­னும் நேற்­றைய தினம் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­ன­மும் அதன்­போ­தான விவா­தத்­தில் முன்­வைக்­கப்­பட்ட பரிந்­து­ரை­யும் ஆச்­ச­ரி­யத்­தை­யும் விச­னத்­தை­யும் ஒருங்கே ஏற்­ப­டுத்­து­கின்­றன.

யாழ்ப்­பா­ணத்­தில் தொழில்­நுட்­பப் பூங்கா ஒன்று அமைக்­கப்­ப­ட­வேண்­டும் என்­கிற தீர்­மான வரைவு ஒன்றை சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் முன்­வைத்­தார்.

விவா­தத்­தின் பின்­னர் சபை அதனை ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொண்­டது. இதன் போது சபை உறுப்­பி­ன­ரும், முன்­னாள் சுகா­தார அமைச்­ச­ரு­மான ப.சத்­தி­ய­லிங்­கம் முன்­வைத்த யோசனை ஒன்­றை­யும் சபை­யி­னர் மறுப்­பின்றி, எதிர்ப்­பின்றி ஏற்­றுக்­கொண்­ட­னர்.

வடக்கு மாகா­ணத்­திற்­கான பொரு­ளா­தா­ரக் கொள்கை ஒன்றை உரு­வாக்க வேண்­டும், அதன் பின்­னர் அந்­தக் கொள்­கைக்கு அமை­வா­கவே வடக்­கில் தொழில்­நுட்­பப் பூங்­காவை அமைக்­க­வேண்­டும் என்று சத்­தி­ய­லிங்­கம் வலி­யு­றுத்­தி­னார்.

அவ­ரது யோசனை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

யாழ்ப்­பா­ணத்­தில் காங்­கே­சன்­துறை சிமெந்து ஆலையை முற்­றாக அகற்­றி­விட்டு அந்த இடத்­தில் தொழில்­நுட்­பப் பூங்கா ஒன்றை அமைப்­ப­தற்­கான யோசனை ஒன்று கொழும்பு அர­சி­டம் உண்டு.

அதனை முன்­னு­ணர்ந்து இந்­தத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­பட்­டதா என்­கிற அர­சி­யலை ஒரு­பு­றம் விட்­டு­வி­டு­வோம். அது அர­சி­யல். அர­சி­யல் செய்­வ­து­தான் அர­சி­யல்­வா­தி­க­ளின் வேலை.

ஆனால் கவ­னத்துக்கும் கவ­லைக்­கும் உரிய விட­யம், முன்­னாள் அமைச்­சர் கூறி­ய­படி கடந்த நான்­கரை ஆண்­டு­க­ளாக வடக்கு மாகாண சபை தனக்­கென ஒரு பொரு­ளா­தா­ரக் கொள்­கையே இல்­லா­மல் இயங்­கி­யது என்­ப­து­தான். இது ஒரு அதிர்ச்­சி­க­ர­மான உண்மை.

போரால் நலி­வுற்ற மக்­களை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பும் பணி­யைச் செவ்­வனே நிறை­வேற்­றும் பொறுப்­பைக் கொண்ட ஒரு மாகாண சபை­யின் முத­லா­வது ஆட்சி, தனது ஆயுள் காலம் முழு­வ­தும் தனக்­கென ஒரு பொரு­ளா­தா­ரக் கொள்கை இன்­றியே செயற்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது எவ்­வ­ளவு பெரிய நாச­வேலை.

ஏனைய மாகா­ணங்­கள் தமது அபி­வி­ருத்­திக்கு நிதி வேண்­டும், நிதி வேண்­டும் என்று கொழும்பு அரசை நச்­ச­ரித்­துக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், வடக்கு மாகா­ணம் மட்­டும்­தான் ஒதுக்­கப்­ப­டும் நிதி­யை­யும் பயன்­ப­டுத்­தா­மல் திருப்பி அனுப்­பிக்­கொண்­டி­ருக்­கி­றது என்று இலங்­கை­யின் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாழ்ப்­பா­ணத்­தில் வைத்­துக் குற்­றஞ்­சாட்­டிய சில நாள்­க­ளி­லேயே, பொரு­ளா­தா­ரக் கொள்கை ஒன்று இல்­லா­மல்­தான் தனது ஆட்­சிக் காலத்தை வடக்கு மாகாண சபை கடத்­தி­யி­ருக்­கி­றது என்ற உண்­மையை சபையே ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது.

போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் அபி­வி­ருத்­திக்­காக வருடா வரு­டம் அதிக நிதியைக் கொழும்பு ஒதுக்க வேண்­டும் என்று கேட்­கும் வடக்கு மாகாண அர­சி­யல்­வா­தி­கள், பொரு­ளா­தா­ரக் கொள்கை ஒன்று இல்­லா­ம­லேயே அதிக நிதி­யைக் கேட்­டார்­கள் என்­பது வேடிக்­கை­யா­னது.

அது­போன்று, கொழும்பு அர­சின் பொரு­ளா­தா­ரத் திட்­டங்­க­ளை­யும் தனி­யார் மற்­றும் புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளின் முத­லீட்­டுத் திட்­டங்­க­ளை­யும்­கூட இது­போன்றே தமக்­கென ஒரு பொரு­ளா­தா­ரக் கொள்­கை­யும் இன்­றியே எதிர்த்­தார்­கள் என்­ப­தும் விச­னத்துக்கு­ரி­யது.

சில நாள்­க­ளுக்கு முன்­னர் தனது உரை­யொன்­றில் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் மாகா­ணத்­து­டன் கலந்­து­ரை­யாடி, அதன் தேவை­களை அறிந்து அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.

வடக்கு மாகாண சபை­யி­டம் பொரு­ளா­தா­ரக் கொள்கை ஒன்று இல்­லாத பட்­சத்­தில் தேவை மதிப்­பீட்­டை­யும் கலந்­து­ரை­யா­ட­லை­யும் எதன் அடிப்­ப­டை­யில் நடத்­து­வார்­கள்? தனி­ந­பர்­க­ளின் விருப்பு வெறுப்பு மற்­றும் அர­சி­ய­லின் அடிப்­ப­டை­யிலா?

வடக்­கில் உள்ள மாவட்­டங்­கள்­தான் இலங்­கை­யி­லேயே வறு­மை­யின் உச்­சத்­தில் உள்­ளவை என்­கிற புள்­ளி­வி­வ­ரங்­கள் குறித்து மேடை மேடை­யா­கப் பேசி­ய­போ­தும், வடக்கு மாகாண மக்­க­ளின் வரு­மா­னத்தை உயர்த்­து­வ­தற்­கும், பொரு­ளா­தா­ரத்தை விருத்தி செய்­வ­தற்­கும் குறைந்­த­பட்­சம் கொள்­கைத் திட்­டத்­தை­யா­வது மாகாண சபை கொண்­டி­ருக்­க­வில்லை என்­பது மாகாண சபை மக்­க­ளுக்­குச் செய்த பெரும் துரோ­கம் அன்றி வேறென்ன?

ஆட்சி முடி­யும் தறு­வா­யில் பொரு­ளா­தா­ரக் கொள்கை ஒன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்று சொல்­வது மக்­களை ஏமாற்­று­வ­தன்றி வேறென்ன?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close