பொருளாதார மீட்சிக்கான வழி?

டொலர் விலை­யேற்­றத்­தின் பாதிப்பு இந்த ஆண்டு மட்­டு­மல்ல அடுத்த ஆண்­டும் தொட­ரும் என்­கிற எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. வர­லாற்­றில் என்­று­மில்­லாத வகை­யில் டொல­ரின் விலை இன்று 170 ரூபா வரைக்­கும் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது.

இதன் பாதிப்பு அனே­க­மாக எல்­லாத் தரப்­பு­க­ளை­யும் எல்­லாப் பொருள்­க­ளை­யும் தாக்­கு­கின்­றது. அதி­க­மான பொருள்­க­ளுக்கு இறக்­கு­ம­தி­யில் அதி­க­ள­வில் தங்­கி­யி­ருக்­கும் இலங்­கை­யில் டொலர் விலை­யேற்­றத்­தின் பாதிப்பு மிக உச்­ச­மா­ன­தாக இருக்­கும் என்­பது சொல்­லித் தெரி­ய­வேண்­டி­ய­தில்லை. சந்­தை­யில் அதை ஒவ்­வொ­ரு­வ­ரும் வெகு சூடாக இப்­போதே உண­ரக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.

கொழும்­பில் மாறி மாறி ஆட்­சிக்கு வரும் அர­சு­கள் ஒவ்­வொன்­றும் ஒன்­றின் பொரு­ளா­தா­ரக் கொள்­கையை மற்­றொன்று தவ­றென விமர்­சித்­த­படி புதிய புதிய கொள்­க­ளை­க­ளு­டன் முன்­னெ­டுக்­கும் எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யும் நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தாக இல்லை என்­பது பெரும் துன்­பி­யல். டொல­ரின் விலை­யேற்­றத்­துக்­குக் கார­ணம் உள்­ளுர் உற்­பத்­தி­க­ளை­யும் செயற்­றி­ற­னை­யும் வளர்த்­தெ­டுப்­ப­தில் மாறி மாறி வந்த ஆட்­சி­யா­ளர்­கள் கவ­ன­மெ­டுக்­கா­த­து­தான் என்று சுட்­டிக்­காட்­டு­கின்­றார்­கள் பொரு­ளா­தார வல்­லு­நர்­கள்.

ஏனைய ஆசிய நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இலங்கை ரூபா­யின் மதிப்­பி­றக்­கம் குறைந்த மட்­டத்­தி­லேயே இருப்­ப­தாக நிதி மற்­றும் ஊடக அமைச்­ச­கம் பெரு­மைப்­பட்­டுக்­கொண்­டா­லும் மக்­க­ளால் தாங்­கிக்­கொள்ள முடி­யாத அவ­லத்தை இந்­தப் பாதிப்பு ஏற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றது என்­பதே உண்மை.

தனது நாட்­டில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­யைச் சரி­செய்­வ­தற்கு அமெ­ரிக்க அதி­பர் ரொனால்ட் ட்ரம் எடுத்த நட­வ­டிக்­கையே இலங்கை உள்­ளிட்ட பல நாடு­க­ளி­லும் கடு­மை­யான பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. உல­கப் பொரு­ளா­தா­ரத்­தின் பெரும் பகுதி டொல­ரு­டன் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தால் அதன் தாக்­கம் பெரி­ய­ள­வில் எங்­கும் உண­ரப்­ப­டு­கின்­றது.

உதா­ர­ணத்­திற்கு, ட்ரம்­பின் பொரு­ளா­தா­ரச் சீர்­தி­ருத்­தத்­தின் கீழ் அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யா­னது தனது வட்டி வீதத்­தினை அண்­மை­யில் அதி­க­ரித்­தது. இத­னால் பிற நாடு­க­ளில் டொல­ரில் முத­லீடு செய்­தி­ருந்­தோர் அதிக வரு­வா­யைக் கருத்­தில்க்­கொண்டு தமது முத­லீ­டு­களை அமெ­ரிக்­கா­வுக்கு மாற்­றிக்­கொண்­ட­னர்.

அப்­ப­டியே இலங்­கை­யில் முத­லீடு செய்­த­வர்­க­ளும் தமது முத­லீ­டு­களை அவ­சர அவ­ச­ர­மாக அமெ­ரிக்­கா­வுக்கு மாற்­றிக்­கொண்­ட­னர். இத­னால் ரூபா­வின் பெறு­மதி வீழ்ச்­சி­கா­ணத் தொடங்­கி­யுள்­ளது என்று விவ­ரிக்­கி­றார்­கள் பொரு­ளா­தார வல்­லு­நர்­கள்.

இது மட்­டு­மல்ல சீனப் பொருள்­க­ளுக்­கான வரியை அதி­கரித்­தமை போன்ற இன்­னும் சில நட­வ­டிக்­கை­க­ளும் டொல­ருக்கு எதி­ரான மற்­றைய நாண­யங்­க­ளின் மதிப்­பி­றக்­கத்­திற்­குக் கார­ண­மா­கச் சொல்­லப்­ப­டு­கின்­றன.

இத்­த­கை­ய­தொரு நெருக்­கடி நிலையை எதிர்­கொள்­வ­தற்­கான தயார் நிலை­யில் கொழும்பு இருக்­க­வில்லை என்­பது பாதிப்பு அதி­க­ள­வில் உண­ரப்­ப­டு­வ­தற்கு மற்­றொரு கார­ணம் என்­றும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர். இந்த நிலை­யில் இருந்து மீள்­வ­தற்­கும் தப்­பிப்­ப­தற்­கும் உள்­நாட்டு உற்­பத்­தியை ஊக்­கு­விப்­ப­தற்­கும் உள்­நாட்டு உற்­பத்­தி­யின் நுகர்வை மக்­க­ளி­டம் ஊக்­கு­விப்­ப­தற்­கும் அரசு துரி­த­மான, தீவி­ர­மான நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்­றும் அவர்­கள் பரிந்­து­ரைக்­கின்­ற­னர்.

ஆனால், இது­வ­ரை­யில் அவ்­வா­றான திசை நோக்கி அரசு நகர்­வ­தா­கவோ உள்­ளுர் உற்­பத்­தி­யை­யும் உள்­ளுர் பொருள்­க­ளின் நுகர்வை அதி­க­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஊக்­கு­விப்­ப­தா­கவோ தெரி­ய­வில்லை. இன்­னும் சொல்­லப்­போ­னால் உள்­ளு­ரில் விளை­யும் பொருள்­க­ளைத் தரக்­கு­றை­வா­னது என்று விவ­சா­யி­க­ளைத் தரம் தாழ்த்தி பொருள்­க­ளை­யும் தரம் தாழ்த்­தும் பொது மனப்­பாங்கே எங்­கும் விர­விக் கிடக்­கின்­றது.

இதனை மாற்­ற­வேண்­டு­மா­னால் அர­சின் கொள்கை ரீதி­யான அணு­கு­முறை மாறி­யா­க­வேண்­டும். நிரந்­த­ர­மான பொரு­ளா­தார உறு­திப்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கும் தற்­போது ஏற்­பட்­டுள்­ளது போன்ற நெருக்­கடி நிலை­யைத் தவிர்ப்­ப­தற்­கும் அதுவே நிரந்­த­ரத் தீர்­வாக முடி­யும்.

You might also like