பொறுத்­த­ருள்க!!

அடுத்­த­டுத்­துப் பொருள்­க­ளின் விலை­கள் உயர்­கின்­றன. எரி­பொ­ரு­ளின் விலை­யை­யும் அதி­க­ரித்­தா­யிற்று. சிறிய பொருள் முதல் பெரிய பொருள் வரை அனைத்­தி­னது விலை­க­ளும் இனிக் கிடு­கி­டு­வென அதி­க­ரிக்­கும். அன்­றா­டப் பொருள்­கள் முதல் ஆடம்­ப­ரப் பொருள்­கள் வரை­யான இந்த விலை அதி­க­ரிப்­பால் பொது­மக்­களே அதி­கம் அழுத்­தத்­துக்கு உள்­ளா­கப் போகின்­றார்­கள்.

பொருள்­க­ளின் விலை­யேற்­றத்­துக்கு அமைய வரு­மான அதி­க­ரிப்­புச் சடு­தி­யாக ஒரு­போ­தும் கிடைக்­காது என்­கிற நிலை­யில் குடும்­பங்­க­ளில் திண்­டாட்­டம் மேலும் அதி­க­ரிக்­கும்.

இந்த விலை அதி­க­ரிப்­பால் திண்­டா­டு­வது மக்­கள் மட்­டு­மல்ல உத­ய­னும்­ தான். பத்­தி­ரி­கைத் தாள் முதல் அச்­சுப் பொருள்­கள் எல்­லா­வற்­றி­னது விலை­க­ளும் சடு­தி­யாக எகி­றி­விட்­டன. தாங்க முடி­யாத சுமை­யு­ட­னேயே தொடர்ந்­தும் பய­ணிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

பன்­னாட்­டுச் சந்­தை­யில் அச்­சுத் தாளுக்கு மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்­னர் இருந்த விலை, இப்­போது இரட்­டிப்­பா­கி­விட்­டது. டொல­ரின் விலை­யேற்­றம் உள்­ளு­ரில் அச்­சுத் தாள் உள்­ளிட்ட அச்­சுப் பொருள்­க­ளின் விலை­களை நாளாந்­தம் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கின்­றது.

அதி­க­ரித்­தி­ருக்­கும் இந்­தச் சுமை­யைத் தாங்க முடி­ய­வில்லை என்­றா­லும், அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளின் விலை­யேற்­றத்­தால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் மக்­கள் மீது மேலும் சுமையை ஏற்­று­வ­தற்கு உத­யன் விரும்­ப­வில்லை. அத­னால் தாங்­க­மு­டி­யாத அச்­சுச் செலவு அதி­க­ரிப்­புக்கு மத்­தி­யி­லும் பத்­தி­ரி­கை­யின் விலை­யைத் தொடர்ந்­தும் அப்­ப­டியே பேண­வேண்­டிய நிலை­யில் நெருக்­கடி இருக்­கி­றது.

ஒரு­பு­றம் பத்­தி­ரிகை அச்­சுச் செலவு கட்­டுக்­க­டங்­கா­மல் எகி­றிச் செல்­லும் நிலை, மறு­பு­றத்­தில் வாச­கர்­க­ளின் நலன் கருதி பத்­தி­ரி­கை­யின் விலையை அதி­க­ரிக்க முடி­யாத நிலை இவை இரண்­டுக்­கும் மத்­தி­யில் ஒரு சமன்­பாட்­டைக் காண்­பது மிக மிகக் கடி­ன­மா­னது என்­றா­லும் அதனை எப்­ப­டி­யும் சாத்­தி­ய­மாக்­கி­யே­யாக வேண்­டிய நிலை­யில் உத­யன் உள்­ளான். அந்த நெருக்­க­டியை வாச­கர்­க­ளா­கிய நீங்­கள் புரிந்­து­கொள்­வீர்­கள் என்­கிற பெரும் எதிர்­பார்ப்பு எம்­மி­டம் உள்­ளது.

இந்த இக்­கட்டு நிலை­யில் இருந்து தற்­கா­லி­க­மாக மீள்­வ­தற்­காக உத­யன் தனது வர்­ணப் பக்­கங்­க­ளின் எண்­ணிக்­கை­யைச் சடு­தி­யா­கக் குறைத்­துக் கொண்­டுள்­ளான். செல­வு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் முக­மாக இத்­த­கைய ஒரு தற்­கா­லிக நட­வ­டிக்­கையை எடுப்­ப­தற்கு உத­யன் நிர்ப்­பந்­தி க்­கப்­பட்­டி­ருப்­பதை வாச­கர்­கள் புரிந்­து­ கொள்­வார்­கள் என்றே நாம் நம்­பு­கின்­றோம்.

பத்­தி­ரி­கை­யின் தரத்தை அதி­க­ரித்து, அதன் வடி­வத்­தி­லும் வர்­ணத்­தி­லும் செய்­நேர்த்­தி­யைக் கொண்­டு­வ­ர­வேண்­டும் என்­ப­தில் உத­யன் கரி­ச­னை­யாக இருக்­கும் நிலை­யில், தவிர்க்க முடி­யாத இத்­த­கைய நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

விரை­வில் இந்த நெருக்­க­டி­யில் இருந்து மீண்டு மீள­வும் பழைய நிலைக்­குத் திரும்­பு­வோம் என்­கிற நம்­பிக்­கை­யோடு, அது­வ­ரைக்­கும் வர்­ணப் பக்­கங்­க­ளின் குறைப்பை வாச­க­ர்­கள் பொறுத்­த­ருள வேண்­டும் என்று உத­யன் கேட்­டுக்­கொள்­கின்­றான்.

வர்­ணப் பக்­கங்­கள் குறைக்­கப்­பட்­டா­லும் , பத்­தி­ரி­கை­யின் பக்க எண்­ணிக்­கை­யிலோ, உள்­ள­டக்­கத்­திலோ எந்­த­வி­த­மான மாற்­றங்­க­ளும் இருக்­காது என்று உத­யன் உறுதி கூறு­கின்­றான்.

பல்­வேறு நெருக்­க­டி­க­ளின் போதும், கடும் அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொண்­ட­போ­தும் உத­ய­னு­டன் கூடவே இருந்து, பய­ணித்து, அர­வ­ணைத்­துக் கொண்ட தமிழ் பேசும் வாச­கப் பெரு­மக்­கள் இப்­போது இந்­தச் சிறிய மாற்­றத்­தை­யும் பொறுத்­துக்­கொண்டு தொடர்ந்து தமது ஆத­ரவை உத­ய­னுக்கு வழங்­க­வேண்­டும்.

கால­மும் நேர­மும் கூடி­வ­ரும்­போது உத­யன் இன்­னும் அதி­க­மான வர்­ணப்­பக்­கங்­க­ளு­டன் புதிய வீச்­சோடு உங்­கள் கைக­ளில் தவழ்­வான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close