போதனா மருத்­து­வ­ம­னை­யில்- நூத­ன­மான திருட்டு!!

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் நூத­ன­மான முறையில் திருட்­டுக்­க­ளில் ஈடு­ப­டும் பல இளம் பெண்­க­ளின் ஆதா­ரங்­கள் மறை­கா­ணி­க­ளின் உத­வி­யு­ட­னும், நேர­டி­யா­க­வும் அகப்­பட்­டுள்­ள­தாக யாழ்ப்­பா­ணம் மருத்­து­வ­ம­னைப் பணிப்­பா­ளர் த.சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­தார்.

இந்த திருட்டுச் சம்­ப­வம் தொடா்­பாக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­மனை பணிப்­பா­ளர் த.சத்­தி­ய­மூர்த்தி மேலும் தொிவித்­த­தா­வது -:

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ ம­னை­யி­யில் பணி­யாற்­றும் மருத்­து­வா்­கள் போன்று உடை அணிந்து, மருத்­து­வா்­கள் வழ­மை­யாகப் பயன்­ப­டுத்­தும் இத­யத் துடிப்புக் காட்­டி­யு­டன், இரு பெண்­கள் சந்­தே­கத்­திற்கு இட­மாக நட­மா­டி­ய­தோடு, ஒரு­வர் சத்­திர சிகிச்­சைக் கூடத்­துக்­குள் சென்று மருத்­து­வா்­கள் சத்­தி­ர­சி­கிச்­சைக்குப் பயன் படுத்­தும் ஆடை­க­ளை­யும் உப­யோ­கித்­துள்­ளார்.

இவ்­வாறு மருத்­து­வா்­கள் போன்று பாசாங்கு செய்து திருட்­டில் ஈடு­பட்ட இரு பெண்­க­ளை­யும் பிடிக்க முயன்ற போது இரு பெண் ஊழி­யர்­கள் மட்­டுமே நின்­ற­த­னைப் பயன்படுத்தி ஒரு­வர் தப்­பி­யோ­டி­விட்­டார்.

இரண்­டாம் நபர் பிடிக்­கப்­பட்டு விசா­ர­ணைக்­குட்­ப­டுத்தப்பட்டபோது , பல திருட்­டு­க­ளில் ஈடு­பட்­ட­தனை ஒப்­புக்­கொண்­டார் அதில் மருத்­து­வ­ ம­னைக்­குத் தேவை­யான ஓர் பொரு­ளும் உள்­ள­டக்­க­மாக இருந்­தது.

அதனை எடுத்­து­வர எமது பெண் ஊழியர் ஒரு­வ­ரு­டன் அனுப்­பு­வ­தற்­காக மோச­டி­யில் ஈடு­பட்ட பெண்­னி­னது கைத் தொலை­பே­சியை வாங்கி வைத்­த­வாறு அனுப்ப முயன்­றோம்.

அதற்­குள் தப்­பி­யோ­டிய பெண்­ணின் தக­வல் மூல­மாக எமது பிடி­யில் இருந்த பெண்­ணின் காத­லன் எனப்­ப­டு­ப­வர் உந்­து­ரு­ளி­யில் வந்­த­வேளை சந்­தேக நப­ரான பெண் வேக­மாக உந்­து­ரு­ளி­யில் ஏறித் தப்­பி­யோ­டி­விட்­டார்.

இருப்­பி­னும் அவ­ரது கைத் தொலை­பேசி எமது வசமே உள்­ளது. அவ்­வாறு கைப்­பற்­றிய தொலை­பே­சி­யில் அம்மா என சேமிப்­பில் இருந்த இலக்­கத்­து­டன் தொடர்பு கொண்டு தொலை­பேசி கீழே இருந்­தது இதன் உரி­மை­யா­ளர் யார் என வினா­வி­னோம். தாயார் மட்­டக்­க­ளப்­பில் இருந்து உரை­யா­டி­னார். தனது மகள் மருத்­து­வக் கல்வி கற்­ப­தாக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­துவ மனை­யில் பயி­லு­நராக உள்­ளார் எனப் பதி­ல­ளித்­தார்.

குறித்த பெண் மருத்­து­வ­மனை மற்­றும் இங்கு வரும் நோயா­ளர்­களை மட்­டும் ஏமாற்­றிப் பணம் சம்­பா­திக்­க­வில்லை. வீட்­டா­ரை­யும் ஏமாற்­று­கின்­றார் என்­ப­த­னைப் புரிந்­து­கொண் டோம். இதே நேரம் அப் பெண்னை உந்­து­ரு­ளி­யில் ஏற்­றிக்­கொண்டு தப்­பிச் சென்­ற­வரை மிகத் தெளி­வாக இனம் கண்­டு­கொண்­டோம். அதன் பின்பு தப்­பிச் சென்ற பெண்­ணின் தொலை­பே­சியை பரி­சீ­லித்­த­போது அந்­தத் தொலை­பே­சி­யில் இரு­வ­ரின் புகைப்­ப­டங்­கள் ஏரா­ள­மாக உள்­ளன.

புகைப்­ப­டத்­தின் உத­வி­யு­டன் குறித்த இளை­ஞரைத் தேடி­ய­போது அவர் யாழ்ப்­பா­ணம் வல்­வெட்­டித்­து­றை யை சேர்ந்­த­வர்­என்­ப­தும், தற்­போது சுன்­னா­கம் பகு­தி­யில் தனி­யார் நிறு­வ­னம் ஒன்­றில் பணி­யாற்­று­கின்­றார்­என்­ப­தும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இதே­போன்று கடந்த பல நாள்­க­ளாக நோயா­ளி­க­ளி­டம் ஏமாற்றித் தங்க நகை­களை அப­க­ரித்த மற்­று­மோர் பெண்­ணை­யும் பிடித்­தோம். அதே பெண் முதல்­நாள் இன்­னோர் தாயா­ரி­டம் தங்க நகையை அப­க­ரித்­துச் சென்ற ஆதா­ரங்­க­ளும் உள்ளன. இந்­தப் பெண் குழந்தை பிர­ச­வித்து 30 நாள்­களே ஆகின்­றன.

இவ்­வாறு குழந்­தை­யு­டன் பிடி­பட்ட பெண்­ணி­டம் விசா­ரணை மேற்­கொண்­ட­போது முல்­லைத்­தீவு அளம்­பி­லைச் சேர்ந்த இவ­ருக்கு யாழ்ப்­பா­ணம் மிரு­சு­வில் பகு­தி­யில் இரு பெண்­கள் பழக்­க­மா­ன­வர்­க­ளாக உள்­ள­னர். அவர்­கள் இரு­வ­ரும் கள­வா­டப்­ப­டும் நகை­களை விற்­கும் இடங்­க­ளை­யும் இவா் மூலம் ஒழுங்கு செய்­துள்­ள­னர். சம்­ப­வத்­து­டன் தொடா்­பு­டைய அனைத்து விட­யங்­க­ளும் யாழ்ப்­பா­ணம் பொலி­ஸா­ரி­டம் பாரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என யாழ்ப்­பா­ணம் மருத்­து­வ­ம­னைப் பணிப்­பா­ளர் த.சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­தார்.

You might also like