போதைத் தடுப்பு வாசகங்களுடன் பலூன்கள்!!

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு வடக்கில் இன்று பலூன் பறக்க விடும் ஆரம்ப நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று இடம்பெற்றது.

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் பங்குபற்றலுடன் போதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்கள் உத்தியோகத்தர்களால் பறக்க விடப்பட்டன.

இதேவேளை வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட செயலங்கள், திணைக்களங்களிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

You might also like