போரில் பொட்டம்மான்- கொல்லப்பட்டு விட்டார்- சரத் பொன்­சேகா

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் பொட்டு அம்­மான், சூசை உள்­ளிட்ட முக்­கிய உறுப்­பி­னர்­கள் இறு­திக்­கப்­பட்­டப்­போ­ரின்­போது கொல்­லப்­பட்­ட­னர். எனவே, பொட்டு அம்­மான் நோர்­வே­யில் ஒளிந்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டும் கருத்­தில் எவ்­வித உண்­மை­யும் இல்லை.”

இவ்­வாறு போரின் இறு­தி­கட்­டத்­தில் இரா­ணு­வத்­த­ள­ப­தி­யாக செயற்­பட்ட பீல்ட்­மார்­ஷல் சரத்­பொன்­சேகா தெரி­வித்­தார்.

அல­ரி­மா­ளி­கை­யில் நேற்று இரவு நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் மாநாட்­டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் தெரி­வித்­த­தா­வது,

விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் புல­னாய்வு பொறுப்­பா­ளர் பொட்டு அம்­மான் உயி­ரு­டன் இருப்­ப­தாக கருணா அம்­மான் தக­வல் வெளி­யிட்­டார் என ஊட­கங்­க­ளில் செய்­தி­கள் வெளி­யா­கி­யுள்­ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி நந்­திக்­க­டல் பகு­தி­யில் வைத்து போர்­மு­டி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. பிர­பா­க­ரன் , சூசை உள்­ளிட்ட தலை­வர்­க­ளின் சட­லங்­கள் அங்­கி­ருந்தே மீட்­கப்­பட்­டன.

19 ஆம் திக­தி­காலை பொட்­டம்­மா­னின் சட­லம் மீட்­கப்­ப­ட­வில்லை. அவ­ரின் மனை­வி­யின் சட­லமே மீட்­கப்­பட்­டது. போர்­கா­லத்­தில் இரா­ணு­வப் பாது­காப்­பு­டன் கரு­ணாவை கொழும்­பில் இர­க­சிய இட­மொன்­றில் வைத்து பாது­காத்­தோம். போர்­மு­டி­வ­டைந்த பின்­னர் புலி­கள் அமைப்­பின் உறுப்­பி­னர்­களை அடை­யா­ளம் காட்­டு­வ­தற்­கா­கவே அவரை நந்­திக்­க­டல் பகு­திக்கு அழைத்­துச்­சென்­றோம்.

மே 19 ஆம் திகதி காலை நத்­திக்­க­ட­லில் கிழக்க பகு­தி­யில் பிர­பா­க­ர­னின் மகன் சார்ள்­ஸின் படை­ய­ணி­யு­ட­னேயே மோதல் இடம்­பெற்­றது. வடக்கு கடற்­க­ரைக்­கு­சென்று ஐந்­து­பே­ரு­டன் பாய்ந்­து­செல்­வ­தற்கு பிர­பா­ர­கன் முயற்­சித்­தார். அங்கு பொட்­டு­அம்­மா­னும் இருந்­துள்­ளார். அவ்­வே­ளை­யில் துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­ட­தால் – பொட்­டு­அம்­மான் தற்­கொலை குண்டை வெடிக்­க­வைத்து இறந்­துள்­ளார். இத்­த­க­வலை கே.பி. வெளி­யிட்­டார்.

போரின் இறு­திக்­கட்­டத்­தில் பிர­பா­க­ர­னு­ட­னேயே பொட்டு அம்­மான் இருந்­தார். அவர் நோர்­வே­யிக்கு பாய்ந்­தோ­ட­வில்லை. அவர் உயி­ரி­ழந்­து­விட்­டார் என நம்­பு­கின்­றோம்.

புலி­கள் அமைப்­பி­லி­ருந்து கருணா வெளி­யே­றி­யி­ருந்­தா­லும் , போரை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு படை­யி­ன­ருக்கு அவர் பெரி­தாக எவ்­வித உத­வி­யை­யும் செய்­ய­வில்லை. போர்­மு­டி­வ­டைந்­தப்­பின்­னர் உல்­லாச வாழ்க்­கையே கருணா அனு­ப­வித்­தார். கொழும்­பில் கும்­மா­ல­ம­டித்­தார்” என்­றார்

You might also like