போர்க் குற்றம் புரிந்தோர் அரச தலைவராக முடியா!

நல்ல பிள்­ளைக்கு நடிக்­கி­றார் கோத்தா என சந்­தி­ரிகா குமா­ர­ணதுங்க கொதிப்பு

கோத்­த­பாய ராஜ­பக்ச தாம் செய்த போர்க் குற்ற மீறல்­க­ளை­யும், மனித உரிமை மீறல்­க­ளை­யும் மூடி மறைக்க முற்­ப­டு­வது அரு­வ­ருக்­கத்­தக்க – வெட்­கக்­கே­டான செய­லா­கும். எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் போர்க் குற்­றங்­க­ளில் ஈடு­பட்­ட­வர்­கள் போட்­டி­யி­டு­வ­தற்கு நாட்­டில் உள்ள அமைப்­புக்­களோ, பன்­னாட்டு அமைப்­புக்­களோ ஒரு­போ­தும் இட­ம­ளிக்கா.

இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க கும­ர­ðணதுங்க.

முன்­னாள் அரச தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான மகிந்த ராஜ­பக்­ச­வின் சகோ­த­ரும், முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ள­ரு­மான கோத்­த­பாய ராஜ­பக்ச எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றங்­கத் திட்­ட­மிட்­டுள்­ளார். அதற்­கு­ரிய நகர்­வு­களை ஆரம்­பித்­துள்ள கோத்­த­பாய ராஜ­பக்ச, தனது அமெ­ரிக்­கக் குடி­யு­ரி­மையை கைவி­டு­வ­தற்­தற்­கான ஏற்­பா­டு­க­ளை­யும் மேற்­கொண்­டுள்­ளார். மகிந்த ராஜ­பக்ச ஆத­ரவு அணி­யி­னர் கோத்­த­பாய ராஜ­பக்­சவே தேர்­த­லில் போட்­டி­யி­டு­வார் என்று வெளிப்­ப­டை­யா­கக் கூறி வரு­கின்­ற­னர்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் சார்­பாக தற்­போ­தைய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே மீள­வும் வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றங்க வேண்­டும் என்று அந்­தக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் வலி­யு­றுத்­து­கின்­ற­னர். இந்த பிணக்­கால் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும், சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யும் இணைந்து தேர்­த­லைச் சந்­திக்­கும் திட்­டம் நிறை­வே­றாது போகும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில், பன்­னாட்டு செய்­திச் சேவை ஒன்­றுக்கு வழங்­கிய சிறப்­புச் செவ்­வி­யில் முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளார்.

அரச தலை­வர் தேர்­தல் தொடர்­பாக இன்­ன­மும் உத்­தி­யோ­க­பூர்­வ­மான அறி­விப்பு வெளி­யா­க­வில்லை. அதற்­கி­டையே மகிந்த அணி­யி­ன­ரும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியை நாச­மாக்­கி­ய­வர்­க­ளும் அரச தலை­வர் தேர்­தல் தொடர்­பா­கக் கொக்­க­ரிக்­கத் தொடங்கி விட்­ட­னர் என்று அவர் காட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.
முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் மீது உள்­நாட்­டி­லும், வெளி­நாட்­டி­லும் போர்க் குற்­றங்­கள் தொடர்­பா­க­வும், போர் விதி­மீ­றல்­கள் தொடர்­பா­க­வும், மனித உரிமை மீறல்­கள் தொடர்­பா­க­வும் பல குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. சிறை­யில் இருக்க வேண்­டிய கோத்­த­பாய ராஜ­பக்ச இரட்­டைக் குடி­யு­ரிமை என்ற கவ­சத்தை அணிந்­து­கொண்டு அமெ­ரிக்­கா­வுக்­கும், இலங்­கைக்­கும் மாறி மாறிச் சுற்­றுலா செல்­கின்­றார். அண்­மை­யில் அவ­ருக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வில் இரு பார­தூ­ர­மான வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

இலங்­கைக்­குத் திரும்பி வந்­துள்ள அவர் நாட்டு மக்­கள் முன்­னி­லை­யில் நல்ல பிள்­ளைக்கு நடிக்க முயல்­கின்­றார். இரட்­டைக் குடி­யு­ரி­மை­யு­டன், போர்க் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள அவர், அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட எமது நாட்­டுச் சட்­ட­மும், நாமும் ஒரு­போ­தும் அனு­ம­திக்க மாட்­டோம். இதை அவர் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும் என்­றும் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்­துள்­ளார்.

You might also like