மகனை மீட்­கும் போராட்­டம் தொட­ரும் – விடு­த­லை­யான ஜெயக்­கு­மாரி திடம்!!

5 வரு­டங்­க­ளின் பின்­னர் பத­வியா நீதி­வான் நீதி­மன்­றத்­தால் நிரந்­த­ர­மாக விடு­தலை செய்­யப்­பட்ட பாலேந்­தி­ரன் ஜெயக்­கு­மாரி காணா­மல் ஆக்­கப்­பட்ட தனது மகனை மீட்க தொடர்ந்­தும் போரா­டு­வேன் என்று உத­ய­னுக்­குத் திட­மா­கத் தெரி­வித்­தார்.

புலி­களை மீளு­ரு­ வாக் கம் செய்­தார் என்ற குற்­றச்­சாட்­டில் 2014 ஆம் ஆண்டு பயங்­க­ர­வாத தடுப்பு பொலிஸ் பிரி­வி­ன­ரா­லும் மற்­றும் இரா­ணுவ, பொலிஸ் அலுவலர் கிளி­நொச்சி தரு­ம­பு­ரம் பகு­தி­யில் உள்ள அவ­ரது வீட்­டில் வைத்து ஜெயக்­கு­மாரி கைது செய்யப்பட்­டார்.

அவ­ரு­டன் சேர்த்து அவ­ரது ஒரே ஒரு மக­ளான விபூ­சி­கா­வும் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளால் கைது செய்­யப்­பட்­டார். மற்­றும் இரண்டு சந்­தேக நபர்­க­ளும் கைது செய்­யப்­பட்­ட­னர். ஆயி­னும் விபூ­சிகா சில தினங்­க­ளில் கிளி­நொச்சி நீதி வான் நீதி­மன்­றத்­தால் கிளி­நொச்சி சிறு­வர் இல்­லம் ஒன்­றில் சேர்க்­கப்­பட்­டார்.

ஒரு­வ­ரு­ட­மாக ஜெயக்­கு­மாரி தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தார். 2015ஆம் ஆண்டு கொழும்பு நீதி­வான் நீதி­மன்­றத்­தில் முற்­ப­டுத்­தப்­பட்­டார். வெளி­நாடு செல்­லக்­கூ­டாது, அரு­கில் உள்ள பொலிஸ் நிலை­யத்­தில் ஒவ்­வொரு நாளும் கையொப்­பம் இட­வேண்­டும் என்ற நிபந்­த­னை­யு­டன் கொழும்பு நீதி­மன்று ஜெயக்­கு­மா­ரியை பிணை­யில் விடு­வித்­தி­ருந்­தது.

அந்த வழக்கு கடந்த புதன் கி­ழமை பத­வியா நீதி­மன்­றில் இடம்­பெற்­றது. குற்­றப்­பு­ல­ னாய்­வுப் பிரி­வால் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டில் இருந்து நிரந்­த­ர­மா­ கவே ஜெயக்­கு­மாரி விடு­விக்­கப் பட்டுள்­ளார். எனி­னும் கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்­தில் ஒரு வழக்கு நிலு­வை­யில் உள்­ளது.

ஜெயக்­கு­மா­ரி­யு­டன் மேலும் இரு சந்­தேக நபர்­க­ளும் விடு­தலை செய்­யப்­பட்­ட­னர். சட்­டத்­த­ர­ணி­க­ளான வி.எஸ்.நிரஞ்­சன் மற்­றும் அஜித் திசா­நா­யக்க ஆகி­யோர் சந்­தேக நபர்­கள் சார்­பில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்­த­னர்.

இறு­திப்­போ­ரில் தனது இரண்டு மகன்­களை இழந்­த­வர் ஜெயக்­கு­மாரி, மூன்­றா­வது மகன் காணா­மல் ஆக்­கப்­பட்­டுள்­ளார். அவர் பூசா சிறை­யில் இருந்­த­மைக்­கான ஆதா­ரங்­கள் உள்­ளன என்று தெரி­வித்த ஜெயக்­கு­மாரி காணா­மல் ஆக்­கப்­பட்ட மக­னைத் தேட ஆரம்­பித்­தார். காணா­மல் ஆக்­கப்­பட்ட உற­வு­க­ளு­டைய ஆர்ப்­பாட்­டங்­க­ளின் போதெல்­லாம் ஜெயக்­கு­மாரி முன்­னின்று அதில் கலந்து கொள்­வார்.

பிரிட்­ட­னின் முன்­னாள் தலைமை அமைச்சர், டேவிட் கம­ருன், ஐ.நா. மனி­த­உ­ரி­மை­கள் சபை­யின் முன்­னாள் ஆணை­யா­ளர் நவ­நீ­தம்­பிளை போன்­ற­வர்­கள் இலங்­கைக்கு வருகை தந்­த­போ­தெல்­லாம் ஜெயக்­கு­மாரி போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­தார். போரின்­போ­தும் அதன் பின்­ன­ரும் நடந்த சம்­ப­வங்­களை அவர் அந்த அதி­கா­ரி­க­ளி­டத்­திலே தெட்­டத்­தெ­ளி­வா­கக் கூறி­யி­ருந்­தார். இந்­தப் பின்­ன­ணி­யில் அவர் 2014ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்­டார்.

தற்­போது அவர் அந்த வழக்­கில் இருந்து நிரந்­த­ர­மாக விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்.

இது தொடர்­பில் உத­ய­னுக்­குத் தெரி­வித்த அவர், “மக­னைக் காண­வில்லை என்று தேடிய என்னை கார­ணம் கூறாது கைது செய்­தார்­கள், பின்­னர் ஒரு கார­ணத்­தைக் கூறி சிறை­யில் அடைத்­தார்­கள், மிக­வும் சிர­மப்­பட்­டுப் பிணை­யில் விடு­த­லை ­யா­னேன். அதன்­பின்­ன­ரும் பொலிஸ் நிலை­யம், நீதி­மன்­றம் என அலைந்­தேன். மக­னைத் தேடிய எந்­தத் தாய்க்­கும் இவ்­வாறு நடக்­க­கூ­டாது. இப்­போது விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளேன். எனது மகனை மீட்க நான் தொடர்ந்­தும் போரா­டத்­தான் போகி ­றேன். மகன் எனக்கு வேண்­டும். என்ன நடந்­தா­லும் நான் போரா­டு­வேன்.”- என்­றார்.

You might also like