மகா சக்தி!!

அன்­றாட வாழ்­வில் சர்­வ­மும் சக்­தி­ம­யம் என்­ப­தற்­கி­ணங்க எல்­லாம் வல்ல ஆதி பரா­சக்­தியை வேண்டி கலை­ம­கள், அலை­ம­கள், மலை­ம­க­ளா­கப் பாவனை செய்து மகா­சக்­தி­யி­டம் முறையே வீரம், செல்­வம், கல்வி ஆகிய முப்­பெ­ரும் பேறு­க­ளை­யும் பெற்று மனி­த­னா­கப் பிறந்­த­தன் பயனை அனு­ப­வித்­திட கடைப்பிடிக்­கப்­ப­டு­கின்ற விர­தமே நவ­ராத்­திரி விர­த­மா­கும்.

நவ­ராத்­திரி விரதத்தைக் கடைப்பிடிக்கப்படுகின்ற காலத்­தில் அண்ட, புவன போகங்­களை எல்­லாம் காத்து இரட்­சித்து உல­கெல்­லாம் நிறைந்து விளங்­கு­கின்ற எல்­லாம் வல்ல ஆதி­ப­ரா­சக்­தியை அடி­ய­வர்­கள் ஒன்­பது இர­வு­கள் பக்­தி­பூர்­வ­மாக வழி­பாடு இயற்­று­கின்­ற­னர். இறுதி நாளில் விஜ­ய­த­சமி எனப் பெயர்­கு­றிப்­பி­டப்­ப­டும் வெற்­றித்­தி­ரு­நாளை பாட­சா­லை­க­ளி­லும், பொது இடங்­க­ளி­லும்,கோவில்­க­ளி­லும் பக்­தி­பூர்­வ­மான பூஜை வழி­பா­டு­கள் இயற்றி சிறப்­பா­கக் கொண்­டா­டு­கின்­ற­னர்.

ஆம், ஒன்­பது தினங்­க­ளும் அம்­பி­கையை வெவ்­வேறு வடி­வங்­க­ளில் எழுந்­த­ரு­ளச் செய்து இந்து மதத்­த­வர்­கள் வழி­பாடு இயற்­று­வர்.குறிப்­பாக, முதல் மூன்று நாள்­க­ளும் துர்க்கா பூசை­யும், அடுத்த மூன்று நாள்­க­ளும் லட்­சுமி பூசை­யும், இறுதி மூன்று நாள்­க­ளும் சரஸ்­வதி பூசை­யும் இடம்­பெ­றும்.

இறுதி பத்­தா­வது நாளன்று விஜ­ய­த­சமி பூசை இடம்­பெ­று­கின்­றது.அதா­வது அம்­பி­கை­யா­ன­வள் மகிஷாசூர­னைச் சங்­க­ரித்த பத்­தாம் நாளை இந்து சம­யத்­த­வர்­கள் ஒரு சமய விழா­வாக அன்றி கல்வி, கலை, பண்­பாடு விழு­மி­யங்­களை வெளிக்­கொ­ண­ரும் ஒரு சமூக உன்­னத விழா­வாக கொண்­டா­டு­வர்.
நவ­ராத்­திரி விர­தத்தை கடைப்­பி­டிப்­ப­தன் பய­னாக சகல சௌபாக்­கி­யங்­க­ளை­யும் வாழ்­வில் பெற்­றுக் கொள்ள முடி­யு­மென்­பது சான்­றோர்­கள் அரு­ளிய உண்மை.

ஆக,ஆயி­ரம் இதழ்­க­ளை­யு­டைய தாம­ரை­யில், இரு­கை­க­ளி­லும் தாமரை தாங்கி அப­யம், வர­தம் என்ற முத்­தி­ரை­க­ளு­டன் வீற்­றி­ருந்து அருள்­பா­லிக்­கும் ஆதி­ப­ரா­சத்­தி­யின் அருளை நவ­ராத்­திரி விரத காலத்­தில் அடி­ய­வர்­க­ளாக வேண்­டிப் பணி­வோம். நல்­ல­வர்­க­ளாக வாழ்ந்து நன்­மக்­கள்­பேற்­று­டன் இந்த மண்­ணிலே மனி­தப் பிறவி எடுத்­த­தன் பயனை அனு­ப­வித்து வாழ்­வாங்கு வாழ்­வோ­மாக.

You might also like