side Add

மக்­களை மிரட்­ட­லாமா?

தமிழ் மக்­கள் அமை­தி­யான வாழ்வை விரும்­பா­விட்­டால் மீண்­டும் வீதி­க­ளில் சோத­னைச் சாவ­டி­களை அமைக்­க­வேண்டி வரும் என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் தரைப்­ப­டை­யின் யாழ். மாவட்­டக் கட்­ட­ளைத் தள­பதி மேஜர் ஜென­ரல் தர்­ஷன ஹெட்­டி­யா­ராச்சி.

வட்­டுக்­கோட்­டை­யில் நடந்த நிகழ்வு ஒன்­றில் அவர் இத­னைத் தெரி­வித்­தார். மட்­டக்­க­ளப்­பில் இரு பொலி­ஸார் சுட்­டுக்­கொல்­லப்­பட்டு, அவர்­க­ளது ஆயு­தங்­க­ளும் அப­க­ரிக்­கப்­பட்ட பின்­ன­ணி­யில் படை அதி­கா­ரி­யின் இந்­தக் கருத்து வந்­துள்­ளது.

இந்­தச் சம்­ப­வம் தவிர வேறு எந்­த­வொரு சம்­ப­வ­மும் வடக்கு கிழக்­கில் அரச படை­யி­ன­ருக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளா­கப் பதி­வா­க­வில்லை. எனவே மட்­டக்­க­ளப்­புச் சம்­ப­வத்தை மன­தி­லி­ருத்­தியே யாழ். மாவட்­டத் தள­பதி ‘‘தமிழ் மக்­கள் அமை­தி­யான வாழ்வை விரும்­பா­விட்­டால்’’ என்­கிற பதத்­தைப் பயன்­ப­டுத்­தி­யி­ருப்­பார் என்று கொள்­ள­வேண்­டும்.

அப்­ப­டிப் பார்த்­தால் இது ஒரு வகை­யில் தமிழ் மக்­களை மிரட்­டும், எச்­ச­ரிக்­கும் ஒரு கருத்­துத்­தான்.

மட்­டக்­க­ளப்­புச் சம்­ப­வம் தொடர்­பில் சந்­தே­க­ந­பர்­கள் இரு­வர் கைது செய்­யப்­பட்­டிக்­கி­றார்­கள். அவர்­க­ளில் ஒரு­வர் தானே இந்­தக் கொலை­க­ளைச் செய்­தேன் என்­று­கூறி கிளி­நொச்­சி­யில் பொலி­ஸா­ரி­டம் தன்னை ஒப்­பு­வித்­தார் என்­றும் கூறப்­ப­டு­கின்­றது.

இந்­தச் சம்­ப­வத்­தின் பின்­பு­லத்­தில் தமிழ் மக்­கள் சார்­பி­லான வன்­முறை எவை­யும் தொடங்­கப்­ப­டு­வ­தற்­கான முன்­மு­யற்­சி­கள் இருந்­தன என்­கிற தக­வல்­க­ளும் இல்லை. இது ஒரு போராட்ட முயற்சி என்­ப­தான தக­வல்­கள்­கூட இல்லை.

அப்­ப­டி­யி­ருக்­கும்­போது இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­ப­டுத்தி தமிழ் மக்­கள் அமை­தியை விரும்­பா­விட்­டால் மீண்­டும் துன்­பப்­ப­டு­வீர்­கள் என்று அவர்­களை எச்­ச­ரிப்­பது ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தல்ல. தனி­ந­பர் குற்­றங்­களை ஓர் இனத்­து­டன் தொடர்­பு­ப­டுத்தி அந்த இனத்­தையே கூட்­டுத் தண்­ட­னைக்கு உள்­ளாக்க முயற்­சிக்­கும் வகை­யில் அமைந்­துள்­ளது யாழ். தள­ப­தி­யின் கருத்து.

70களில் தமிழ் இளை­ஞர்­கள் சிலர் ஆயு­தம் ஏந்­தத் தொடங்­கி­ய­போ­தும் அத­னைக் கட்­டுப்­ப­டுத்த முயன்ற அதி­கா­ரி­கள் இது­போன்ற கூட்­டுத் தண்­டனை வழி­வ­கை­க­ளை­யும் பழி­வாங்­கல் நடை­மு­றை­க­ளை­யும் முன்­னெ­டுத்­த­மை­தான் இளை­ஞர்­கள் ஆயு­தங்­க­ளின் மீது அதீத நம்­பிக்கை வைப்­ப­தற்­குக் கார­ண­மாக இருந்­தது.

போர்க் காலம் முழு­வ­தும் இலங்­கை­யின் அனைத்­துப் படை­க­ளும் இதே அணு­கு­மு­றை­யு­ட­னேயே நடந்­து­கொண்­டன என்­ப­தற்கு ஒவ்­வொரு தமி­ழர்­க­ளும் சான்று.

குற்­றங்­க­ளில் ஈடு­ப­டு­வோ­ரைச் சரி­வ­ரக் கண்­ட­றிந்து அவர்­க­ளைக் கைது செய்து தண்­ட­னைக்கு உள்­ளாக்க வேண்­டி­யதே சட்­டம் ஒழுங்கு மற்­றும் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளின் கடமை. அதற்­கு­ரிய வகை­யில் தம்மை நவீ­னப்­ப­டுத்தி, பலப்­ப­டுத்தி வைத்­தி­ருப்­பது அவர்­க­ளின் தேவை.

அதில் பல­வீ­னங்­களை வைத்­துக்­கொண்டு குற்­ற­வா­ளி­க­ளைத் தப்­ப­விட்­டு­விட்டு அதற்­காக மக்­க­ளைக் குற்­றஞ்­சாட்­டு­வது நல்­ல­தல்ல. அதி­லும் இது­போன்று இன ரீதி­யில் எடுத்த எடுப்­பில் குற்­றச்­சாட்டை முன்­வைப்­பது படைத் தள­பதி கூறும் அமை­தி­யை­யும் நல்­லி­ணக்­கத்­தை­யும் ஒரு­போ­தும் கொண்டு வராது.

ஒரு சில­ரின் குற்­றங்­க­ளுக்கு ஓர் இனத்­தையே பொறுப்­பா­ளி­யாக்கி அத­ன­டிப்­ப­டை­யில் அந்த இனத்தை எச்­ச­ரிக்­கும் அதி­கா­ரம் ஓர் அரச அதி­கா­ரிக்கு எப்­படி வந்­தது என்­ப­தற்­கான ஆணி­வேர் ஆரா­யப்­பட்டு அத­னைக் களைய உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மா­னால் மட்­டுமே இலங்­கை­யில் இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண முடி­யும்.

You might also like