மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு 10 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு, 10,000 மில்லியன் ரூபா நிதி சுகாதார அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

இந்த நிதி 6 கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும், நவீன வைத்திய கருவிகளைக் கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்தும் என்று இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

பைசல் காசிமால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

You might also like