மணல் ஏற்றியவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய படையினர்- ஒருவர் மீது கடும் தாக்குதல்!!

முல்லைத்தீவு அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய படையினர், ஒருவரை மூர்க்கத்தனமானத் தாக்கியுள்ளனர்.

மணல் ஏற்றிக் கொண்டு இருந்தவர்களை படையினர் தாக்க முற்பட்ட வேளையில் அவர்களின் மூவர் தப்பியோட முயற்சித்துள்ளனர். அதனையடுத்து படையினர் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எனினும் துப்பாக்கி ரவைகள் அவர்கள் மீது படவில்லை.

ஏனையவர்கள் தப்பிச் செல்ல வாகன சாரதியைப் படையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய படையினரைக் கைது செய்யுமாறு மக்கள் கோரிய போதும் பொலிஸார் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

அதனால் மக்கள் மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகக் கூடியுள்ளனர்.

You might also like