side Add

மனங்கொள்ளத்தக்க- மாவீரர் நாள் எழுச்சி!!

வடக்­குக் கிழக்­குத் தமி­ழர் தாய­கம் மற்­றும் புலம்­பெ­யர் தேசங்­க­ளில் மாவீரர் நாளன்று பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்­கள் ஒன்­று­தி­ரண்டு இந்த முறை­யும் தன்­னெ­ழுச்­சி­யு­டன், உணர்வு பூர்­வ­மாக மவீ­ரர் நாளை நினை­வேந்­தி­யுள்­ள­னர். வடக்­குக் கிழக்­குத் தமி­ழர் தாய­கங்­க­ளில், கடந்த ஆண்டை விட இந்த முறை, இந்த நிகழ்­வில் தமிழ் மக்­கள் அதி­க­ள­வில் கலந்து கொண்­டி­ருந்­த­னர். ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திகதி அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் அதி­ரடி நட­வ­டிக்­கை­யால் ஆட்­சி­யி­லி­ருந்­து­வந்த தேசிய அர­சான கூட்­டாட்சி குலைக்­க­பட்டு முன்­னாள் அரச தலை­வரான மகிந்த ராஜ­பக்ச தலைமை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ ருக்­கின்ற நிலை­யில், ஆங்காங்கு நிகழ்ந்த பொலி­ஸா­ரின் அடக்­கு­மு­றை­க­ளை­யும் மீறிக் கடைப்­பி­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்ற மாவீ­ரர் நாள் இது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பர­வா­லாக மாவீ­ரர் நாள் உணர்­வெ­ழுச்சி
கிளி­நொச்சி – கன­க­பு­ரம் துயி­லும் இல்­லம், முழங்­கா­வில் துயி­லும் இல்­லம், வட­ம­ராட்சி கிழக்கு உடுத்­துறை துயி­லும் இல்­லம், தேரு­வில், கொடி­கா­மம், சாட்டி, இர­ணைப்­பாலை, கோப்­பாய், அளம்­பில், கஞ்சி குடிச்­சாறு, மட்­டக்­க­ளப்­புத் தொழில்­நுட்­பக் கல்­லூரி, கிழக்­குப் பல்­க­லைக் கழ­கம், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கம், திரு­கோ­ண­ம­லைச் சிவன்­கோ­வி­லடி, தமிழ் அர­சுக் கட்­சி­யின் அலு­வ­ல­கம், பண்டி விரிச்­சான், பருத்­தித்­துறை சுப்­பர் மடம், ஆட்­காட்டி வெளி, நெடுங்­கேணி, இரட்டை வாய்க்­கால், வன்­னி­வி­ளாங்­கு­ளம், ஆலங்­கு­ளம் உள்­ளிட்ட பல துயி­லும் இல்­லங்­க­ளி­லும் தமிழ் அர­சி­யல் கட்­சி­க­ளின் அலு­வ­ல­கங்­க­ளி­லும், பொது இடங்­க­ளி­லும் மாவீ­ரர்­கள் நினை­வு­
கூ­ரப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். நாடா­ளு­மன்­றி­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரால், மாவீ­ரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இடை­யூ­று­க­ளும் நினை­வேந்­த­லும்
மாவீ­ரர் தினத்­தைத் தடுப்­ப­தற்­கான, இடை­யூ­று­களை விளை­விப்­ப­தற்­கான முயற்­சி­க­ளில் கோப்­பாய்ப் பொலி­சார் ஈடு­பட்­டி­ருந்­த­னர். விடு­த­லைப் புலி­க­ளின்­கொடி, சின்­னங்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்டு மாவீ­ரர் நினைவு நாளைக் கடைப்­பி­டிக்­கின்­ற­னர் என்ற குற்­றச்­சாட்டை மாவீ­ரர் தின ஏற்­பாட்­டா­ளர்­க­ளின் மேல் சுமத்தி யாழ்ப்­பா­ணம் நீதி­மன்­றி­லும், ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றி­லும் அந்த அந்­தப் பகு­திப் பொலி­சார் முறைப்­பாடுகளைச் செய்­தி­ருந்­த­னர். புலி­க­ளின் சின்­னத்­தையோ, கொடி­யையோ பயன்­ப­டுத்த முடி­யா­தெ­னக் கூறிய இந்த இரண்டு நீதி­மன்­றங்­க­ளின் நீதி­வான்­க­ளும், நினைவு கூரு­த­லையோ, புலி­க­ளின் எழுச்­சிப் பாடல்­களை இசைப்­ப­தையோ தடுக்க முடி­யா­தெ­னக் கூறி­யி­ருந்­த­னர். அதன்­ப­டியே ஏற்­பாட்­டா­ளர்­கள் மாவீ­ரர் நாள் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­ டுத்­தி­ருந்­த­னர்.

மாவீ­ரர்­நா­ளில் நடந்த அடா­வ­டி­கள்
இந்த முறை­யும் பொலி­சார் மாவீ­ரர் நாளைத் தடுப்­ப­தற்­கான முயற்­சி­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். பருத்­தித்­துறை சுப்­பர் மடத்­தில் மாவீ­ரர் நாளுக்­கான நேரம் நெருங்­கிக் கொண்­டி­ருக்­கை­யில் அந்த இ­டத்­தில் கூடி­யி­ருந்த மக்­களை அதில் பங்­கேற்க விடாது, துப்­பாக்கி முனை­யில் தடுத்து நிறுத்­தி­ய­து­டன், அலங்­கா­ரங்­கள், பதா­கை­க­ளைச் சேதப்­ப­டுத்தி அச்­சு­றுத்­தி­யு­முள்­ள­னர். வட­ம­ராட்சி கிழக்­கில் மாவீ­ரர் நாளைக் கடைப்­பி­டிப்­பது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­ மெ­னக்­கூ­றிய படை­யி­னர், பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­டம் தொடர்­பான இலங்கை அர­சின் வர்த்­த­மா­னி­யில் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறி­வித்­தலை அச்­சிட்டு மக்­க­ளைப் பய­மு­றுத்­தும் வகை­யில், அவ்விடங்களில் ஒட்டி­யி­ருக்­கின்­ற­னர். துயி­லும் இல்­லத்­தில் நடப்­பட்­டுள்ள நினைவு நடு­கல்லை அகற்­று­மா­றும் ஏற்­பாட்­டா­ளர்­க­ளுக்­குக் கூறப் பட்­டுள்­ளது. பொலி­சார், இரா­ணு­வத்­தி­னர் அந்­தப் பகு­தி­யில் குவிக்­கப்­பட்டு மக்­கள் சோத­னை­யி­டப்­பட்­டி­ருக்­கின்­ற­னர்.

பெரும் எழுச்­சி­யாக
மாவீ­ரர் நாள் பதி­வா­கி­யது
வடக்­குக் கிழக்­குப் பிர­தே­சங்­க­ளில் கடந்த வரு­டத்­தை­வி­டப் பெரும் எழுச்­சி­யு­ட­னும், பெரும் திர­ளான மக்­க­ளு­ட­னும் நடந்து முடிந்த நிகழ்­வாக இந்த வரு­டத்­துக்­கான மாவீ­ரர் நாள் அமைந்­தி­ருந்­தது. அடக்­கு­மு­றை­க­ளை­யும், கெடு­பி­டி­க­ளை­யும் மீறி மாவீ­ரர் நாளுக்­காக மக்­கள் பிற்­ப­கல் 3மணி­யி­லி­ருந்து பெரு­வா­ரி­யா­கத் திரண்ட வண்­ண­மி­ருந்­த­னர். மாவீ­ரர்­களை நினைவு கூரு­வ­தற்­காக நினைவேந்தும் பகுதிகள் அனைத்தும் மஞ்­சள், சிவப்பு வர்­ணக் கொடி­க­ளால் அலங்­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­த­து­டன் மாவீ­ரர்­க­ளது நினை­வெ­ழுச்­சிப் பாடல்­க­ளும் ஒலிக்­க­வி­டப்­பட்­டி­ருந்­தன. 2016ஆம் ஆண்­டில் அரச தலை­வ­ரான மைத்­திரி பால சிறிசேன தலை­மை­யி­லான ஆட்­சி­யா­னது, மாவீ­ரர் நாளை நினை­வு­கூ­ரு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்­தி­ருந்­தது. 2017ஆம் ஆண்டு வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­க­ளில் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் மாவீ­ரர் நாளா­னது சிறப்­பான முறை­யில் கடைப்­பி­டிக்­கப்­பட்டிருந் தது. இந்த முறை­யும் இளை­ஞர்­கள், யுவ­தி­கள் ஏரா­ள­மா­கக் கலந்து கொண்டு தங்­க­ளது உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­தி­னர். வடக்­குக் கிழக்­குத் தமி­ழர் தாய­கப் பகுதி மாவீ­ரர் நாளன்று கண்­ணீ­ரால் தோய்ந்­தது.

வேரூன்­றிப்­போன பாரம்­ப­ரி­ய­மா­கிற்று!
மாவீ­ரர்­களை மக்­கள் எப்­போ­தும் தமது மனங்­க­ளில் நிலை­நி­றுத்­தி­யி­ருப்­பர் என்­பதை இந்த முறை­யும் மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளில் குவிந்த மக்­கள் வெள்­ளம் உணர்த்­தி­யுள்­ளது. அன்­றைய நாள் மாலை நேரம் துயி­லும் இல்­லங்­க­ளில் மாவீ­ரர்­க­ளின் பெற்­றோர்­கள், உற­வு­கள், மற்­றும் பொது­மக்­கள் திரண்டு நிற்க, 6.05 மணிக்கு உணர்­வு­க­ளா­லும் எழுச்­சி­யா­லும் துயி­லும் இல்­லங்­கள் ஆட்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. 2008ஆம் ஆண்டு வரை­யில் மாவீ­ரர் நாளைத் தமிழ் மக்­கள் நினைவு கூரு­வ­தும், மதிப்­ப­ளிப்­ப­தும் ஒரு பாரம்­ப­ரி­ய­மா­கவே கடைப்­பி­டிக்­கப்­பட்டு வந்­தது. அதுவே இன்று வேரூன்­றிப் போயி­ருக்­கி­றது.

மாவீ­ரர் நாளைப் பொது­மை­யு­ணர்­வு­டன் கடைப்­பி­டித்­த­னர்
தமது பிள்­ளை­கள் சாவ­டைந்த நாளை மறந்­தா­லும், மாவீ­ரர் நாளன்று அவர்­க­ளுக்­குத் துயி­லும் இல்­லங்­க­ளில் சுட­ரேற்றி, மலர்­தூவி அஞ்­சலி செலுத்தி ஆறு­தல் அடை­வதே மாவீ­ரர்­க­ளின் பெற்­றோர்­க­ளி­ன­தும், உற­வி­னர்­க­ளி­ன­தும் மர­பாக மாறி­யி­ருக்­கி­றது. இந்த வரு­ட­மும் உயிர் பெற்­றெ­ழுந்த மாவீ­ரர் நாள் என்­பது, தமி­ழி­னத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தா­கும். தமி­ழின விடு­த­லைக்­கா­கத் தமது உயிர்­க­ளை­யும் பொருட்­ப­டுத்­தாது கள­மா­டிய வீர­ம­ற­வர்­க­ளைத் தமிழ் மக்­க­ளா­கிய நாம் என்­றென்­றும் மறக்­கவே மாட்­டோம் என்­பதை வெளிப்­ப­டுத்தி நிற்­கின்ற நிகழ்­வா­கும். ஈழத் தமி­ழர்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தும், வர­லா­றோடு பின்­னிப் பிணைந்­தும் இருக்­கின்ற மகோன்­ன­த­மான மாவீ­ரர் நாளைத் தமி­ழி­னம் மறக்­கா­மல் நினை­வில் வைத்­தி­ருப்­ப­தன் மூலம் தன்­னு­டைய வர­லாற்றை அடுத்­த­டுத்து வரு­கின்ற சந்­த­தி­க­ளுக்­குக் கடத்­திச் செல்­வது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது.

தமிழ் மக்­க­ளுக்­காக விடு­த­லைப் புலி­கள் முன்­னெ­டுத்­தி­ருந்த ஆயு­தப் போராட்­டத்­தின் நியா­யத் தன்­மையை மாவீரர் நாள் அகில உல­குக்­கும் எடுத்­தி­யம்­பு­கின்­றது. மாவீரர்­க­ளின் இலட்­சி­யம் எது­வாக இருந்­ததோ, அந்த இலட்­சி­யத்தை அடை­வதே எமது குறிக்­கோள் என்று மாவீ­ரர் தினத்­தன்று திட­சங்­கற்­பம் பூண்டு கொள்­வது மட்­டு­மல்­லாது, தமிழ் மக்­கள், தமிழ்த் தலை­வர்­கள் அனை­வ­ரும் விடு­த­லைப் புலி­க­ளின் ஈழம் என்ற இலட்­சி­யத்­தி­லி­ருந்து பிற­ழாது நடக்க வேண்­டி­ய­தை­யும் உணர்த்­தி­யி­ருக்­கி­றது இந்த வருட மாவீ­ரர் நாள்.

மக்­க­ளின் ஒற்­றுமை ஓங்க வேண்­டும்
இந்த முறை­யும் மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­கள் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­னரே மாவீ­ரர்­க­ளின் உற­வு­க­ளால், பொது அமைப்­புக்­க­ளால், பொது மக்­க­ளால் ஒன்­றி­ணைந்து முன்­னெ­டுக்­கப்­பட்ட துப்­பு­ர­வுப் பணி­க­ளால், தூய்­மை­யா­கி­யி­ருந்­தன. தாமா­கவே முன்­வந்து அனை­வ­ரும் இந்­தப் பணி­க­ளைச் செய்­தி­ருந்­த­னர். ஒக்­ரோ­பர் 26 ஆம் திக­தி­யன்று தலைமை அமைச்­ச­ராக மகிந்த ராஜ­பக்ச நிய­மிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து மக்­க­ளுக்­குப் பல சந்­தே­கங்­கள் இருந்­தா­லும், எத்­தனை நெருக்­க­டி­கள் வந்­தா­லும், மாவீ­ரர் நாளை நினை ­வேந்­து­வது என்­ப­தில் அனை­வ­ரும் உறு­தி­யு­ட­னும் நம்­பிக்­கை­யு­ட­னும் இருந்­தமை தெளி­வா­கின்­றது.

மாவீ­ரர்­க­ளின் இலட்­சி­யத்­தைக் கொண்­ட­வர்­கள் திரண்டு நிற்க, அனைத்து நினை­வேந்­தல் இடங்­க­ளி­லும் மாலை 6.05மணிக்கு மணி ஓசை இசைக்­கப்­பட்டு பொதுச் சுடர் ஏற்­றப்­பட்டு மாவீ­ரர் தினப் பாடல் இசைக்­கப்­பட்­டது. பாடல் இசைத்து முடி­யும் வரை­யில் துயி­லும் இல்­லங்­கள் எந்­த­வித அசை­வும் இன்றி அமைதி காத்­துக் கண்­ணீ­ரால் நனைந்து கொண்­டி­ருந்­தன. மாவீ­ரர்­க­ளின் வித்­து­டல்­க­ளுக்கு மலர் தூவி அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.‘‘தமிழ் மக்­கள் ஒற்­று­மைப்­பட வேண்­டும், கருத்து வேறு­பா­டு­களை மறந்து தமிழ்த் தேசி­யத்தை நேசிக்­கும் வகை­யில் கட்­சி­க­ளும் ஒன்­று­ப­ட­வேண்­டும். பல கட்­சி­கள் உரு­வா­கித் தமிழ்த் தேசி­யம் மீதான உணர்வை, பற்றை, ஒற்­று­மை­யு­ணர்­வைச் சித­ற­டிக்­கா­மல், மாவீ­ரர்­க­ளது இலட்­சி­யம் சீர்­கு­லை­யா­மல் இருக்­கும் வகை ­யில் அனைவரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டும்’’ என்­பதே இந்த முறை நடை­பெற்ற மாவீ­ரர் தின நிகழ்­வு­க­ளில் கலந்து கொண்ட அதிக தமிழ்­மக்­க­ளின் பேச்­சுக்­க­ளாக இருந்­தன.

You might also like